Bag Repair & Service Business Ideas - நல்ல இலாபம் தரும் வகையில் பேக் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Bag Repair & Service Business Ideas - பேக் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் கடை என்பது பொதுவாக ரிப்பேர் ஆன பேக்குகள், ஜிப் அறுந்த பேக்குகள், கிழிந்த பேக்குகள் உள்ளிட்டவைகளை கையாளும் ஒரு கடை, பொதுவாக ஒரு 2000 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு பேக் ஜிப் அறுந்து விட்டது என்பதற்காக தூக்கி போட முடியாது, ஒரு 150 முதல் 200 ரூபாய் செலவிட்டால் ஜிப்போடு சேர்த்து ரன்னரும் பேக் சர்வீஸ் கடைகளில் போட்டு தருகிறார்கள்.
பேக் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் கடை என்பது பேக்குகளை மட்டும் கையாளும் கடையாக இருக்காது, பைக்குகளுக்கு சீட்கள், சீட் கவர்கள், கார்களுக்கு சீட்கள், சீட்கவர்கள் உள்ளிட்டவைகளையும் கையாளும் வகையிலேயே பெரும்பாலும் செய்து வருகின்றனர், உங்கள் வசதியை பொருத்து பேக் சர்வீஸ்சோடு சேர்த்து வாகன சீட்களையும் கையாள முடிந்தால் கையாளலாம்.
முதலீட்டை பொருத்தவரை ஒரு கமெர்சியல் பவர் டூல் தையல் மெசின் வேண்டும், அது போக பவர் பின் டூல், பேக்குகளுக்கு ஏற்ற ரன்னர்கள், ஜிப்புகள் என எல்லாம் மொத்த விலையில் பெரிய கடைகளில் வாங்கி கொள்ள வேண்டும், மொத்தமாக முதலீட்டை பொருத்தவரை ஒரு 1.5 இலட்சம் ஆகி விடும், கடையை மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் ஆவணப்படுத்தி லைசென்சும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒரு பேக் ரிப்பேருக்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை வாங்குகிறார்கள், சீட் கவர்களுக்கு 200 முதல் 300 ரூபாய் வரை வாங்கிறார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 5 பேக் ரிப்பேர்கள், ஒரு 5 வாகனத்திற்கு சீட் கவர் மாற்றிக் கொடுத்தாலும் கூட தினசரி ரூ 2000 வரை வருமானம் பார்க்க முடியும், நீங்கள் கொஞ்சம் நகரத்தில் வைத்து பெரிய அளவில் செய்திடும் போது மாதம் இலட்சங்களில் கூட இலாபம் பார்க்க முடியும்.