Ayurvedic Tooth Powder Making Business - ஹெல்த் பிராடக்டுகள் என்பதற்கு எப்போதுமே ஒரு மிகப்பெரிய சந்தை உண்டு, அந்த வகையில் ஆயுர்வேத பல்பொடி தயாரிப்பில் ஈடுபட்டு ஓரளவிற்கு வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக பேஸ்ட்கள் தான் சந்தையில் தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் பல்பொடிக்கான பயன்பாடும் இருக்க தான் செய்கிறது.
பொதுவாக பேஸ்ட்கள் அனைத்தும் ஹைட்ராக்ஸைடுகள் வைத்து தயாரிக்கப்படுவதால், அது பளிச் என்ற வெண்மை கொடுத்தாலும் கூட, பல்லின் மேல் படலத்தை சற்றே அரிப்பதால் எதையாவது சாப்பிடும் போது பல் கூச்சம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, அந்த வகையில் ஆயுர்வேத பல்பொடிகள் பல்லின் வலிமையை அப்படியே வைத்து இருப்பதால் பலரும் தற்போது ஆயுர்வேதிக் பல்பொடி பக்கம் திரும்பி இருக்கின்றனர்.
கரிசலாங்கண்ணி, நாயுறுவி, கடுக்காய் பொடி, கிராம்பு, கல் உப்பு, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலப்பதன் மூலம் நல்ல தரமான பல்லுக்கு மிகவும் உறுதி தரக்கூடிய பல்பொடியை தயாரிக்க முடியும், பொதுவாக 50 கிராம் பல்பொடி சந்தையில் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது, ஒரு 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 50 கிராம் பல்பொடி என்பது 2 மாதங்கள் வரை ஓடும்.
பொதுவாக வீட்டிலேயே இந்த பல்பொடி தயாரித்து சந்தைப்படுத்த முடியும், அருகில் பக்கத்து வீடு என்று தெரிந்தவர்கள் என்று சந்தைப்படுத்தலாம், மெடிக்கல், ஆயுர்வேத கடைகள் என்று சந்தைப்படுத்தினால் லைசென்ஸ் எடுக்க வேண்டும், Central Drugs Standard Control Organization (CDSCO) யில் உங்களது தயாரிப்பை ஆவணப்படுத்திக் கொண்டால் தேசம் எங்கும் சந்தைப்படுத்தலாம்.
" உங்களுக்கு தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்கள்,அவர்களது நண்பர்கள் என ஒரு குறிப்பிட்ட தெரிந்த வட்டாரத்திற்குள் மட்டும் சந்தைப்படுத்தும் போது மாதம் ரூ 15000 வரை வருமானம் பார்க்க முடியும் "