• India

வீடோடு சேர்ந்து ஒரு ஆப்பக்கடை வைத்தால்...மாதம் ரூ 15000 வரை வருமானம்...!

Appam Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-12-18 16:59:38  |    1919

Appam Shop Ideas Tamil - பொதுவாக பெண்களுக்கு ஏதாவது ஒரு தொழில் பார்த்து வீட்டிற்கு தன்னால் முடிந்த வருமானத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் வீட்டில் இருக்கும் வேலையே சரியாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டை தாண்டி ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு நிற்கும், அவ்வாறான பெண்களும் ஒரு குறிப்பிடத்தக்க வருமானத்தை வீட்டிற்கு கொடுக்க இந்த தொழில் அவர்களுக்கு உதவும்.

பொதுவாக ஆப்பம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காலை மற்றும் இரவு உணவாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் வீடோடு சேர்ந்த ஒரு ஆப்பக்கடை வைத்து வீட்டில் இருந்தே பெண்கள் சம்பாதிக்க முடியும், இதற்கு தேவை எல்லாம் ஒரு இரண்டு ஆப்ப சட்டி, எப்போதும் சமைக்கும் நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் இத் தொழிலுக்கும் ஒதுக்கினால் போதும்.

பெரிதாக முதலீடு தேவை இல்லை, வீட்டில் இருந்தே விற்க முடியும் என்பதால் வெளியில் ஒரு போர்டு மட்டும் போதும், ஒரு ஆப்பம் ரூ 10 முதல் 15 ரூபாய் வரை விற்கிறார்கள், காலை ஒரு 50 ஆப்பம், மாலை ஒரு 50 ஆப்பம் என விற்றால் கூட ஒரு நாள் ஒன்றுக்கு ரூ 1000 வரை வருமானம் பார்க்க முடியும், இலாபம் என்று பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ 500 முதல் 600, மாதத்திற்கு ரூ 15,000 முதல் 18,000 வரை கையில் நிற்கும்.

ஆப்பத்தோடு சேர்த்து ஆப்ப மாவும் அரைத்து விற்கும் போது, வீட்டில் இருந்தே கொஞ்சம் கூடுதல் வருமானத்தை பெற முடியும், வீட்டில் இருந்த படியே சமையல் வேலையோடு ஒன்றிணைத்து செய்ய முடியும் என்பதால் பெண்களுக்கு ஒரு எளிதான வேலையாக முடிந்து விடும், வீட்டில் இருந்தே ஏதாவது செய்ய நினைக்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஆப்ப கடை ஒரு சிறந்த வீட்டில் இருந்தே பார்க்க கூடிய ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது.