Sugarcane Juice Business-கரும்புச்சாறு கடை எவ்வாறு வைப்பது, அதற்கான மெசின்களை எங்கு வாங்குவது, கரும்புகளை எங்கு கொள்முதல் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கரும்புச்சாறு
முதலில் கரும்புச்சாறு பல அசாத்திய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, செரிமானத்திற்கு பெரிதும் உதவுவது, கிட்னி பாதுகாப்பிற்கும், கேன்சர் செல்களுக்கு எதிர்ப்பு பொருள் உருவாக்குவதிலும் கரும்புச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது, என்ன தான் புதிது புதிதாக பல பாட்டில் வகை ஜூஸ் வகைகள் மார்க்கெட்டுக்களுக்கு வந்தாலும், இன்னமும் ப்ரஷ் ஆக அரைக்கப்படும் ஜூஸ்களுக்கு மார்க்கெட் இருக்க தான் செய்கிறது, அந்த வகையில் கரும்புச்சாறும் மக்கள் விரும்பி பருகுகின்ற ஒரு ஆகச்சிறந்த பானம் தான்.
சரி கரும்புகளை முதலில் கொள்முதல் செய்வது எப்படி?
தமிழகத்தில் கரும்புச்சாறு வகை கரும்புகள் அதிகம் விளைவது தேனி பகுதிகளில் தான், முதலில் கரும்பு உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பேசி விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும், ஒரு டன் என எடுக்கும் போது ஒரு கிலோ கரும்பு என்பது ரூபாய் 6 முதல் 7 வரை விலை நிர்ணயம் செய்வார்கள், கட்டுகளாக எடுக்கும் போது ஒரு கரும்பு 8 முதல் 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்வார்கள், ஒரு கரும்பு கட்டில் 15 கரும்புகள் இருக்கும் பட்சத்தில் அதன் விலை 120 முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்வார்கள்.
சரி, மெசின்களை எங்கு வாங்குவது?
கரும்புச்சாறு அரைப்பதற்கு என்று தற்போது பல அட்வான்ஸ்டு மெசின்கள் எல்லாம் வந்து விட்டன, நேரடியாக கோயம்புத்தூர் சென்றால் வித விதமாக பல கரும்புச்சாறு மெசின்களை பார்க்கலாம், மெசின்களின் விலைகள் ரூபாய் 25,000 முதல் 35,000 வரை இருப்பதாக தகவல், மெசின்களின் குறிப்பிட்ட செயல்பாடுகளை பொறுத்து ஒவ்வொரு மெசின்களும் ஒவ்வொரு விலையில் இருக்கும் என கூறப்படுகிற்து.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
ஒரு கரும்பு 10 ரூபாய் எனவே வைத்துக் கொள்வோம், அதை விட குறைவாக தான் கொள்முதல் செய்வார்கள் இருந்தாலும் இது அதிகபட்ச விலை, ஒரு கரும்பில் குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து கரும்பு சார்கள் இருக்கும், ஒரு கரும்பின் விலை 10, இதர துணைப் பொருள்கள், அரைக்கும் கூலி என கூட ஒரு 10 ரூபாய் வைத்தாலும் கூட 20 ரூபாய் அசல் ஆகிறது, ஒரு கரும்பில் 5 கரும்புச்சாறு அரைக்கும் பட்சத்தில், ஒரு கரும்புச்சாறு 20 ரூபாய் என வைத்துக் கொண்டால் கூட 100 ரூபாய்க்கு விற்க முடியும்.

அதாவது 20 ரூபாய் அசல் என்பது விற்பனையில் 100 ரூபாய் ஆகிறது. ஒரு நாளைக்கு 50 கரும்புச்சாறு விற்றால் கூட 1000 ரூபாய் சம்பாத்தியம் அதில் 800 ரூபாய் இலாபமாக கையில் நிற்கும், நாள் ஒன்றுக்கு 100 கரும்புச்சாறு விற்கும் பட்சத்தில் 2,000 ரூபாய் சம்பாத்தியம், அதில் 1,600 ரூபாய் இலாபமாக கையில் நிற்கும்,
கரும்புச்சாறு விற்பனையை பொருத்தவரை நல்ல இலாபம் தரும் தொழில் தான், நன்கு விற்பனை ஆகும் இடத்தை மட்டும் தெரிவு செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். கூடவே இளநீரும் விற்கும் பட்சத்தில் தினம் தினம் இரண்டாயிரம் கூட இலாபம் ஈட்ட முடியும்