• India
```

முகேஷ் அம்பானியின் நம்பிக்கை..பக்தி மோடி! Tira, Naika, Myntra நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியிடும் திட்டம் !

 Reliance Industries News Today | Reliance Industries Latest News Today

Reliance Industries News Today -ரிலையன்ஸ் ரீடெய்ல் அதிகாரியாக ஆதிக்கம் செலுத்தும் பக்தி மோடி – Tira நிறுவன வளர்ச்சியில் களமிறங்குகிறார்.

 Reliance Industries News Today -ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கிய அதிகாரியான மனோஜ் மோடியின் மகள் பக்தி மோடி, சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெய்ல் பிரிவு தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ளார். ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவை முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி வழிநடத்தி வருகிறார். டைரா (Tira) என்ற அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தை ஈஷா 2023ல் அறிமுகப்படுத்தியதும், அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் பக்தி.

பக்தி மோடி, ஈஷா அம்பானியுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதோடு, ரிலையன்ஸ் ரீடெய்லில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றார். 2023ல் டைரா தளத்தின் முக்கிய அதிகாரியாக செயல்பட்ட அவர், தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


டைரா, நைகா, டாடா, மிந்த்ரா போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியில் இருக்கிறது. இந்நிறுவனம் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் முக்கியமான இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளது. 

பக்தி மோடி, 2022ல் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சர்வதேச ஆடம்பரப் பிராண்டுகளை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பை ஆற்றியவர். அவரது தந்தை மனோஜ் மோடி, முகேஷ் அம்பானியின் நம்பகமான உதவியாளராக ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ போன்ற முக்கிய பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்.