இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோரும், விற்பனை செய்பவர்களும் கணிசமாக அதிகரித்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோரும், விற்பனை செய்பவர்களும் கணிசமாக அதிகரித்துள்ளனர். இ-காமர்ஸ் வர்த்தகம் சிறு தொழில்களில் இருந்து பெரும் நிறுவனங்கள் வரை ஒரு கட்டாய தேவையாக மாறியுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம், சென்னையில் 06.02.2025 முதல் 08.02.2025 வரை மூன்று நாள் பயிற்சி நிகழ்ச்சியை நடத்துகிறது. 18 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியில் பதிவு செய்ய, https://www.editn.in/ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 AM முதல் மாலை 5:45 PM வரை 90806 09808 / 98416 93060 / 96771 52265 என்ற எண்ணுகளில் தொடர்புகொள்ளலாம். ஆன்லைன் விற்பனையை வளர்த்துக் கொள்ள இதை தவற விடாதீர்கள்.