Paruthi Paal Business Ideas Tamil - பருத்திப்பால் என்பது கருப்பு பருத்தி விதை, தேங்காய், பச்சரிசி, சுக்கு, ஏலம், கருப்பட்டி அல்லது மண்டவெல்லம் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு பானம் ஆகும், பருத்திப்பாலுக்கு உரிய பருத்தி விதை வாங்கி அரைத்தால் மட்டுமே பால் அதிகம் வரும், சாதாரண விதைகளில் அதிக பருத்திப்பால் வருவதில்லை, ஆதலால் பருத்தி விதைகளை தேர்ந்து எடுப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.ஒரு சிறிய தள்ளு வண்டி, ஒரு சின்ன போர்டு இவ்வளவு இருந்தால் பருத்திப்பால் கடைக்கு போதுமானது, பருத்திப்பாலோடு சேர்த்து பயறு வகைகளும் வைக்கலாம், பாசிபயறு, கொண்டகடலை, அவித்த வேர்கடலை வைத்தால் அதுவும் சேர்ந்து நன்றாக ஓடும், நீங்கள் கருப்பட்டி வைத்து பருத்திப்பால் செய்கிறீர்கள் என்றால் ஒரு கிளாஸ் 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கலாம், மண்டவெல்லம் வைத்து செய்கிறீர்கள் என்றால் 15 ரூபாய் என விலை நிர்ணயிக்கலாம்.
Travel Agency Business Ideas Tamil - பொதுவாக ஒரு டிராவல்ஸ் என்னும் போது அதை நிறுவ கோடிக்கணக்கில் செலவாகும், ஆனால் டிராவல் ஏஜென்சிக்கு அப்படி இல்லை ஒரு 10*15 ரூம், ஒரு வெயிட்டிங் ஹால், இணைய வசதியுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் ஒரு நாலைந்து பர்னிச்சர்கள், இது போக மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் உங்களது டிராவல் ஏஜென்சிக்கான ஒரு லைசென்ஸ் இவ்வளவே போதுமானதாக இருக்கும். நம் ஏரியாக்களில் அதிக புக்கிங் வருவது பஸ்சுக்கும், ட்ரெயினுக்கும் தான்.அதற்கு ஏற்றார் போல உங்களது ஏஜென்சியை வடிவமைத்துக் கொள்ளலாம், அது போக உங்கள் ஏரியாவில் இயங்கும் அனைத்து டிராவல்ஸ்களுடனுனான ஒரு நல்லுறவு உங்களுக்கு இருக்க வேண்டும், சில டிராவல்ஸ்கள் ஏஜெண்ட்ஷிப் எடுக்க சொல்லுவார்கள், அதற்கு வருடத்திற்கு ஒரு 15,000 ரூபாய் செலவு ஆகலாம். அப்படியே உங்கள் ஏரியாவில் இயங்கும் கார்கள், ஆட்டோக்கள், வேன்கள், டூரிஸ்ட் பஸ்கள் உள்ளிட்டவைகளின் நம்பர்களும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்,
Egg Shop Business Ideas Tamil - பொதுவாக தமிழகத்தை பொறுத்த வரை முட்டை என்றாலே நாமக்கல் தான், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முட்டை விலை என்பது நாமக்கல் மார்க்கெட்டை பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது, கிட்ட தட்ட தினசரி 6 கோடி முட்டைகள் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படுகிறது, தினசரி 4 கோடி முட்டைகளுக்கும் மேல் நாமக்கலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றுமதி ஆகிறது.நீங்கள் மொத்த முட்டை கடை வைக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் செல்ல வேண்டியது நாமக்கல் தான், நேரடியாக நாமக்கல் சென்று மொத்த டீலர்களை அணுகி விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும், சந்தையில் 6 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றால் உங்களுக்கு மொத்த விலையில் 4 ரூபாய்க்கு கிடைக்கும், உடைமானம், டெலிவரி என செலவு சேர்த்து உங்களுக்கு ஒரு முட்டையின் அசல் விலை 4.20 ரூபாய் ஆகும்.
Popcorn Business Ideas Tamil - பாப்கார்ன் விற்பனை என்பது சிறிய முதலீட்டில் அதீத இலாபம் தரும் தொழில், ஆனால் முறையாக சரியான இடத்தில் விற்பனையை நிறுவ வேண்டியது அவசியம் ஆகிறது, உதாரணத்திற்கு தியேட்டர் அருகாமையில், பஸ் ஸ்டாண்டுகள் அருகில், நல்ல மக்கள் கூடும் மார்க்கெட்டுகள் அருகில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகில் என இந்தெந்த இடங்களில் எல்லாம் வைக்கும் போது பாப்கார்ன் அமோகமாக விற்கும், நல்ல குவாலிட்டியான கார்ன்களை பயன்படுத்துவதும் அவசியம்.சரி, முதலீடுகள் என்ன?பொதுவாக கார்ன் போடுவதற்கான மெசின்கள் தான் இத்தொழிலுக்கு மிகப்பெரிய முதலீடு, எல்லா விலைகளிலும் கமெர்சியல் கார்ன் மெசின்கள் கிடைக்கின்றன, ஆனால் குறைந்த பட்சம் ஒரு ரூ 15,000 வரை செலவழித்து நல்ல மெசினாக பார்த்து வாங்க வேண்டியது வரும், ஒரு 3 மெசின்கள் வாங்கி 3 இடங்களில் பாப்கார்ன் ஸ்டால் போடலாம், உங்களுக்கு ஒன்றே போதும் என்றால் ஒன்றும் வாங்கி கொள்ளலாம், கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் கார்ன் மெசின்கள் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன.
Tailoring Business Ideas For Woman - பொதுவாக டெய்லரிங் பெண்களுக்கு மிகவும் பிடித்த தொழிலாக அறியப்படுகிறது, பெரும்பால பெண்கள் தங்கள் சுய தொழிலை டெய்லரிங் மூலமாக தான் ஆரம்பிப்பதாக ஒரு தகவல், அந்த வகையில் டெய்லரிங் தொழில் எப்படி வீட்டில் இருந்தே செய்வது, அதற்கான முதலீடு என்ன, டெய்லரிங் தொழிலில் எந்த வகையில் இலாபம் இருக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.சரி முதலில் டெய்லரிங் தொழில் எப்படி அமைப்பது, முதலீடு என்ன?உங்களுகு டெய்லரிங் தெரியும் பட்சத்தில் நேரடியாக மெசின் வாங்க சென்று விடலாம், தெரியாது அரைகுறை என்னும் பட்சத்தில் அரசு சார்பில் இலவசமாக 6 மாத கோர்ஸ் ஒன்று சர்ட்டிபிகேட்டுடன் நடத்தப்படுகிறது, உங்களது மாவட்ட வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்றால் எங்கு நடத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம், சரி கற்றவுடன் மெசின் எங்கு வாங்குவது, பெரிய டவுணில் மொத்த கடைகள் இருக்கலாம்.
Vegetable Shop Business Ideas Tamil - கார்களோ பைக்குகளோ யாராவது இங்கு ஒரு சிலரின் வீட்டில் தான் அத்தியாவசியமாக இருக்கும், ஆனால் காய்கறிகள் என்று எடுத்துக் கொண்டால் டாப் டு பாட்டம் என இங்கு அத்துனை பேருக்கும் அத்தியாவசியம் தான், அந்த வகையில் ஒரு காய்கறி கடையை நல்ல இலாபகரமான முறையில் எப்படி உருவாக்குவது, முதலீடுகள் என்ன என்பது குறித்து இங்கு முழுமையாக பார்க்கலாம்.சரி, காய்கறி கடை வைப்பதற்கான முதலீடு என்ன, எப்படி வைப்பது?முதலில் கடை அது ஏதாவது மார்க்கெட் பக்கத்தில் இருப்பது மிக மிக அவசியம், கடையை மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் பதிவு செய்து ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், பெரிய அளவில் சந்தைப்படுத்த போகிறீர்கள் என்றால் தமிழக உணவு பாதுகாப்பு துறையிடமும் லைசென்ஸ் வாங்கி கொள்வது அவசியம், காய்கறிகளை வேளாண் விவசாயிகளிடம் நேரடி கொள்முதலும் செய்யலாம், இல்லையேல் மொத்த மார்க்கெட்டுகளில் ஏலம் எடுக்கலாம், அல்லது மொத்த மார்க்கெட்டுகளில் தேவையான அளவிற்கு கொள்முதல் செய்து கொள்ளலாம்.
Onion Shop Business Ideas Tamil - தமிழ்நாடு வெங்காய உற்பத்தியில் இந்தியாவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது, வெங்காயம் குறைந்த கால சாகுபடியில் நிறைய இலாபம் தரவல்லது, பொதுவாக பல்லாரி, சின்ன வெங்காயம் இரண்டும் தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிகமாக விளைகிறது, மொத்த விற்பனை செய்ய நினைப்பவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் இந்த ஏதாவது ஒரு மாவட்டத்தில் நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.சரி, எவ்வளவு முதலீடு?கடை உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மொத்தமாக ஒரு 50,000 ரூபாய் மட்டும் இருந்தால் சரக்குகளை ஏற்றி கடையை துவங்கி விடலாம், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஏதாவது வெங்காய விவசாய பகுதிகளுக்கு சென்று ஒரு 5 நாளுக்கு ஒரு முறை 15 மூடை பல்லாரி, ஒரு 5 மூடை சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு மூடை 50 கிலோ அளவில் இருக்கும், நேரடி கொள்முதல் என்னும் போது பல்லாரி உங்களுக்கு கிலோ 30 ரூபாய்க்கு தருவார்கள், சின்ன வெங்காயம் ரூ 40 முதல் 45 வரையிலும் தருவார்கள்.
Fruit Shop Business Ideas Tamil - பொதுவாகவே பழக்கடை என்பது நட்டம் தரக்கூடிய ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது, ஆனால் அது உண்மை இல்லை, பழக்கடையை சரியாக திறனாக செயல்படுத்தும் போது அது நல்ல இலாபம் தரும் தொழிலாகவே அமையும், அதற்கு சரியான செட் அப் அமைப்பது அவசியம், இது போக சரியான பழ டீலர்கள், லோக்கல் தோட்டக்காரர்கள் இவர்களை எல்லாம் கைக்குள் வைத்திருப்பது அவசியம்.பழக்கடை முதலீடு என்ன, அமைப்பது எப்படி?பழக்கடையை பொதுவாக வெட்ட வெளியில் தான் அனைவரும் அமைப்பார்கள், ஆனால் அவ்வாறு வைக்கும் போது பழங்கள் சுகாதாரமற்றதாக மாற வாய்ப்புகள் அதிகம், அதனால் கடையை முழுக்க முழுக்க கண்ணாடி செட் அப்பிற்குள் ப்ரீசர் வசதியுடன் அமைப்பது நல்லது, முதலில் பழங்களை உங்களது ஊர்களில் தோட்டங்கள் அமைத்து இருப்பவர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும், வாழை, நெல்லி, மா, நாவல் பழம் உள்ளிட்டவைகள் லோக்கல் வேளாண் தோட்டங்களிலேயே கிடைக்கும்.
Electrical Shop Business Ideas Tamil - மக்களின் தினசரி பயன்பாடாக இருக்கிறது மின் உபகரணங்கள், நாள் ஒன்றுக்கு மட்டுமே தேசம் முழுக்க பல்லாயிரம் கோடி அளவிற்கு மின் உபகரணங்கள் தினசரி வாங்கப்படுவதாக ஒரு தகவல், அந்த வகையில் அதை ஒரு தொழிலாக செய்தால் என்ன முதலீடு தேவைப்படும், எப்படி டீலர் ஷிப் எடுப்பது, என்ன இலாபம் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.கடை எப்படி வைப்பது, முதலீடு எவ்வளவு தேவைப்படும்?முதலில் கடை வைப்பதற்கான சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும், கடைக்கான ஆவணங்களை வைத்து மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் கடையை லைசென்ஸ் எடுத்துக் கொண்டு ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், மார்க்கெட்டில் இருக்கும் பிரபல எலக்ட்ரிக்கல் பிராண்டுகள் குறித்த முன்னெச்சரிக்கை முதலில் இருக்க வேண்டும், குந்தன், GM, லெக்ராண்ட், பைப்ஃரோஸ் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் ஏதாவது ஒன்றுடன் டீலர்ஷிப் வைத்துக் கொள்வது நல்லது.
Pottery Shop Business Ideas Tamil - என்ன தான் நாகரீகம், விஞ்ஞானம் எல்லாம் வளர்ச்சி அடைந்தாலும் கூட மக்கள் அவ்வப்போது வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றனர், தற்போதெல்லாம் சாலைகளில் மண்பானை சமையல் ஹோட்டல்களை பார்க்க முடிகிறது, அங்கு பெரும் கூட்டத்தையும் பார்க்கும் போது வியக்கவும் வைக்கிறது, அப்படி என்றால் மக்கள் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று தானே அர்த்தம்.தற்போது பெரிய பெரிய வீடுகளில் கூட மண்பாண்டங்களில் செய்த சமையல் பொருள்களை பயன்படுத்தி வருகிறார்கள், காரணம் அதில் சமையல் செய்யும் போது கிடைக்கின்ற சுவை வித்தியாசப்படுகிறது, அது நாவை வெகுவாக ஈர்க்கிறது, ஆதலாம் மக்கள் மீண்டும் மண்பாண்ட சமையலுக்கு மாற முயற்சிக்கின்றனர், அந்த வகையில் ஒரு மண்பாண்ட பொருள்கள் கடையை வெற்றிகரமாக நடத்துவது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Book Shop Business Ideas Tamil - என்ன தான் E Books, ஆன்லைன் கிளாசஸ், ஆன்லைன் மெட்டீரியல்ஸ் என்று யுகம் கொஞ்சம் அட்வான்ஸ் ஆனாலும் கூட புத்தகங்களுக்கான தனி மதிப்பு என்பது இன்னமும் இருக்க தான் செய்கிறது, மொபைல்களிலும், லேப்களிலும் நீண்ட நேரம் உட்கார்ந்து கூர்ந்து படிக்கும் போது அது கண்களை பாதிப்பதாக அமைகிறது, ஆனால் புத்தகத்தில் கண்களின் பார்வையை நகர்த்தி நகர்த்தி படிக்கும் போது அது கண்களுக்கான ஒரு யோகா பயிற்சியாக அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Bike Showroom Business Ideas - எல்லாருக்குமே ஒரு பைக் ஷோரூம் பாக்குறப்போ ஒரு ஆசை வரும், நம்மளும் இப்படி வைக்கலாமா அப்படின்னு, ஆனா எப்படிங்கிற ஒரு கேள்வி நம்மள தடுக்கும், இங்க உங்க கேள்விக்கான விடைகள் கிடைக்கும். ஒரு ஷோரூம் வைக்கிறதுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முதலீடு, ஒரு நல்ல பிசினஸ் மாடல், ஒரு நல்ல இடம் இவ்வளது தான் உங்களுக்கான தேவை. எல்லாம் இருக்கும் பட்சத்தில் ஒரு பெட்டரான நல்ல இலாபம் தரக்கூடிய ஷோரூம் ரெடி.சரி, எப்படி வைக்க வேண்டும், முதலீடு என்ன?பொதுவா ஷோரூம் ரெண்டு விதமா வைக்கலாம் மெயின் டீலர் மற்றும் சப் டீலர், உதாரணமா எடுத்துக்கனும்னா நெல்லை டிவிஎஸ்னு திருநெல்வேலில ஒரு ஷோரூம் இருக்கும், அவங்க மெயின் டீலர் ஷிப் எடுத்திருக்காங்க, அவங்களுக்கு கீழ திருநெல்வேலி, தூத்துக்குடில ஒரு 5 சப் டீலர்ஸ் இருக்காங்க, நீங்க மெயின் டீலர்ஷிப் எடுக்கனும்னா நேரடியா கம்பெனிய அணுகனும், சப் டீலர்ஷிப் வைக்கனும்னா, மெயின் டீலர்ஷிப் எடுத்திருங்கிறவங்கள அணுகலாம், அப்படி இல்லன்னா கம்பெனியையும் அணுகலாம்.
Rice Shop Business Ideas Tamil - அரிசி கடை முதலீடு என்ன, கொள்முதல் எப்படி செய்யமுடியும், இலாபம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். சரி அரிசி கடை எப்படி வைப்பது, முதலீடு என்ன?நல்ல மக்கள் சூழும் ஒரு இடத்தில் நன்கு பார்வையாக விசாலமான கடை ஒன்றை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும், அரிசிகளின் டீலர்கள் எண்களை இந்தியாமார்ட் உள்ளிட்ட தளங்களில் தட்டி நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அப்படி இல்லை எனில் வாரம் ஒரு முறை ஏரியா கடைகளுக்கு டீலர்கள் டெலிவரிக்கு வருவார்கள், அப்போது அவர்களிடம் கடை வைப்பதாக கூறி விலைகளையும் பேசி ஆர்டர்களையும் அப்போதே கொடுத்திடலாம்,கடைக்கான லைசென்ஸ், உணவு பாதுகாப்புதுறை ஆவணங்களை கடை திறப்பதற்கு முன்னதாக பதிவு செய்து கொள்வது அவசியம், பொன்னி, நெய் கிச்சடி, இட்லி அரிசி, சம்பா, பச்சரிசி, பாசுமதி, சீரக சம்பா இவைகள் தான் அதிகமாக ஓடக்கூடிய ரகங்கள், இவைகளை அதிகமாக கொள்முதல் செய்து விட்டு மீதி ரகங்களை கொஞ்சம் கொஞ்சம் வாங்கி கொள்ளலாம்.அரிசி கடைய பொறுத்தவரை குறைந்த பட்சம் ஒரு 5 இலட்சம் கையில் இருக்க வேண்டும், இருந்தால் கடை சரக்கோடு தயாராகி விடும்.
Idli Maavu Business Ideas Tamil - இட்லி மாவு தொழிலில், முதலீடு என்ன, இலாபம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.முதலீடு எவ்வளவு?நீங்கள் கமெர்சியலாக இட்லி மாவு அரைத்து விற்கப்போகிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் கிரைண்டர் சரி வராது, அப்படியே அரைத்தாலும் தினமும் அரைக்கும் போது ஒரு மாதத்திலேயே காயில் எல்லாம் எரிந்து போக வாய்ப்பு இருக்கிறது, ஆதலால் ஒரு கமெர்சியல் கிரைண்டர் நிச்சயம் அவசியம். கமெர்சியல் கிரைண்டர் நிறைய வகைகளில் கிடைக்கிறது. 1 மணி நேரத்திற்கு 12 கிலோ வரை அரைக்கும் வகையில் உள்ள கிரைண்டர் 13,000 ரூபாய், 1 மணி நேரத்தில் 18 முதல் 20 கிலோ வரை மாவு அரைக்கும் கிரைண்டர் 26,000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கிறார்கள், நேரடியாக கோயம்புத்தூர் சென்றால் இன்னுமே நிறைய வெரைட்டிகள் கிடைக்கிறது, நீங்களாகவே சென்று உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 20 கிலோ வரை ஒரு மணி நேரத்தில் அரைக்க கூடிய மெசின் இருந்தால் கமெர்சியல் பர்போஸ்க்கு நல்லது.
Chicken Shop Business Ideas Tamil - தற்போதெல்லாம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சிக்கன் எடுக்காத வீடுகளே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு சிக்கன் என்பது மக்களுடன் ஒன்றிய உணவாக பார்க்கப்படுகிறது. வீட்டில் மட்டும் அல்லாது பெரும்பாலான ஹோட்டல்களிலும் மட்டனைக் காட்டிலும் சிக்கனின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது, அத்தகைய சிக்கனை இலாபகரமான முறையில் கடைகளில் எப்படி விற்பது என்பது குறித்து பார்ப்போம்.சரி, ஒரு சிக்கன் கடை வைக்க முதலீடு என்ன?வெட்டுவதற்கான மரத்தட்டு, சிக்கனை தொங்க விடும் கொக்கிகள், கூர் கத்திகள், தோல் உரிக்கும் மெசின்கள், கடைக்கான போர்டுகள், டேபிள்கள், கடை அலங்காரம், மாநகராட்சி லைசென்ஸ், உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் என எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாக ஒரு மூன்று இலட்சம் வரை கையில் இருப்பது அவசியம், இது போக முதல் சிக்கன் முதலீட்டிற்கு ஒரு 60,000 கையிலும் வைத்துக் கொள்வது நல்லது.
Maligai Kadai Business Ideas Tamil - மளிகை கடை எப்படி வைப்பது, முதலீடு என்ன, இலாபம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.மளிகை கடை முதலீடு என்ன, எப்படி வைப்பது?மளிகை கடையை பொறுத்தவரை ஒரு மீடியமான அளவில் நகரத்தில் வைக்க வேண்டும் எனில் குறைந்த பட்சம் ஒரு 5 முதல் 7 இலட்சம் ரூபாய் வரை கையில் இருக்க வேண்டும், உங்களது வீட்டில் இருக்கும் அத்தியாவசியங்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு அதை அப்படியே கடையில் நிரப்ப வேண்டும் அவ்வளவு தான். வேறு ஏதும் பெரிதாக யோசிக்க தேவை இல்லை. ஸ்டாக் ஏற்றுதல் மற்றும் கம்யூட்டர் பில் வைத்துக் கொண்டால் கூட்டம் அதிகமாக இருந்தால் பில் போடுவதற்கு இலகுவாக இருக்கும். கடையில் சரக்குகளை ஏற்றி அடுக்கி வைத்த பின்னரே கடையை திறந்தால் நன்றாக இருக்கும், கொஞ்சம் முன் அனுபவம் இருந்தால் இன்னும் பெட்டர், உங்கள் ஊரில் இருக்கும் டீலர்களை முழுவதுமாக தெரிந்து வைத்திருந்தல் அவசியம். இதுவே மளிகை கடை வைக்க போதுமானது.
Omni Bus Transport Ideas Tamil - ஆம்னி பஸ் சர்வீஸ் தொழிலில் இருக்கும் முதலீடுகள், இலாபங்கள் குறித்து பார்க்கலாம்.சரி, முதலில் முதலீடு எவ்வளவு...?உதாரணத்திற்கு நீங்கள் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயக்க இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் உங்களிடம் இரண்டு பஸ் இருக்க வேண்டும், பெரும்பாலும் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலோ அல்லது சென்னையில் இருந்து திருநெல்வேலி வரையிலோ இயக்கப்படும் பேருந்துகள் சாயங்காலம் மற்றும் இரவுகளிலேயே இயக்கப்படுகின்றனர். அப்படி பார்க்கும் போது, ஒரு பஸ் திருநெல்வேலியில் இருந்து சென்னை கிளம்பும் போது, அதே நேரத்தில் இன்னொரு பஸ் சென்னையில் இருந்து திருநெல்வேலி கிளம்ப வேண்டும். இரண்டு பஸ்களை வாங்கி நீங்கள் அதை ஸ்லீப்பர் வித் AC ஆக ரெடி செய்ய வேண்டும் எனில், பஸ், பாடி பில்டிங் எல்லாம் சேர்த்து ஒரு ஒன்றரை கோடி ஆகலாம், கையில் ஒரு 40 இலட்சம் தனியாக இருப்பதும் அவசியம்.உங்களிடம் நல்ல பிசினஸ் மாடல் இருக்கும் பட்சத்தில் வங்கிகளிடம் 90 சதவிகிதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம், நீங்கள் ஒரு அசோக் லேலாண்ட் ஆம்னி பஸ் வாங்கிறீர்கள் என்றால் அந்த நிறுவனத்திலேயே ரிஜிஸ்ட்ரேசன் ஏஜெண்டுகள் இருப்பார்கள், அவர்கள் மூலம் நீங்கள் வேறு எங்கும் அலையாமல் ஒரு குறிப்பிட்ட கமிசன் மட்டும் கொடுத்து செய்து கொள்ள முடியும், அவர்கள் ஒரு 50,000 முதல் 60,000 வரை கேட்க வாய்ப்புகள் இருக்கிறது.
Mechanic Shop Ideas Tamil - மெக்கானிக் ஷாப் வைக்க என்ன என்ன தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு இலாபம் இருக்கும் என்பதெல்லாம் பார்க்கலாம்.முதலில் மெக்கானிக் ஷாப் வைக்க என்ன என்ன தேவைப்படும்?.குறைந்தபட்சம் ஒரு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஏர்கம்பிரசர், ஹார்டுவேர் டூல்ஸ் நீங்கள் வாட்டர் சர்வீஸ்சும் வைக்க போகிறீர்கள் என்றால் ஒரு வாசிங் சிஸ்டம் ஒன்றும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், நல்ல விசாலமான கடை ஒன்று தேவைப்படும், நகரின் மையத்தில் இருந்தால் இன்னும் நல்லது, பார்க்கிங் வசதிகள் கொஞ்சம் ஆவது இருக்க வேண்டும். இடத்தையும் கடையின் பெயரையும் நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது.சரி எவ்வளவு முதலீடு தேவைப்படும்?200 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு ஏர் கம்பிரசர் ஒரு முப்பதாயிரம் வரும், ஹார்டுவேர் டூல்ஸ்கள் ஒரு பத்தாயிரம் வரும், கார், லாரிகள், பைக்குகள் என எல்லாவற்றையும் வாட்டர் சர்வீஸ் செய்யும் வகையில் உங்களுக்கு வாசிங் சிஸ்டம் வேண்டும் எனில் அதன் விலை நாற்பதாயிரம் வரும், வெறும் பைக்கிற்கு மட்டும் போதும் என்றால் நல்ல அட்வான்ஸ்டு வாசிங் சிஸ்டம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வரும்.
Laundry Shop Ideas Tamil - லாண்டரி தொழிலை பொறுத்தமட்டில் நீங்கள் வீட்டில் இருந்தே கூட செய்யலாம், விளம்பரத்திற்கு வீட்டிற்கு வெளியில் இங்கு அயன் செய்து தரப்படும் என்ற ஒரு போர்டு மட்டும் இருந்தால் போதுமானது, ஒரு கமெர்சியல் அயன் பாக்ஸ் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம், ஒரு நல்ல கமெர்சியல் அயன் பாக்ஸ் அதிகபட்சமாக ரூ 2500 முதல் 3500 வரை இருக்கும். நீங்கள் வீட்டில் இருந்து லாண்டரி தொழிலை பார்க்கும் பட்சத்தில் அந்த அயன் பாக்ஸ் ஒன்று தான் உங்களது முதலீடு.கடையாக வைக்கும் பட்சத்தில் வாடகை, கரண்ட் பில் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம், லாண்டரி தொழிலுக்கு பெரிய கடையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியம் இல்லை, சின்ன 10*10 ரூம் கூட போதும், ஒரு நீளமான டேபிள், ஒரு சேர் உள்ளிட்டவைகள் இருந்தால் அயனிங்கிற்கு எளிதாக இருக்கும். கடை என்னும் போது நீங்கள் மக்கள் கூடும் இடத்தை தேர்வு செய்யும் போது வீட்டை விட அதிக துணிகள் அயனிங்கிற்கு வருவதற்கு அது வாய்ப்பாக அமையும்.
Mineral Water Can Delivery Profit - பெரும்பாலான வீடுகளில் இன்று கேன் வாட்டர் என்பது ஒரு அத்தியாவசியமான பொருளாகவே மாறி விட்டது, நல்ல தண்ணீர் கார்பரேசன் மூலம் வீட்டிற்கே வந்தாலும் கூட, மக்கள் அந்த கார்பரேசன் வாட்டரை டேங்குகளில் ஏற்றி குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் வாட்டரையே பயன்படுத்துகின்றனர், அந்த அளவிற்கு கேன் வாட்டர் என்பது மக்களிடையே ஒரு அங்கமாக மாறி விட்டது.சரி, பொதுவாக கேன் வாட்டர் என்ன விலைக்கு விற்கப்படுகிறது?கிராமங்களில் எடுத்துக் கொண்டால் ஒரு கேன் வாட்டர் என்பது ரூ 30 முதல் 35 வரை விற்கப்படுகிறது, அதுவே கொஞ்சம் நகரத்தை ஒட்டி என்றால் ரூ 35 முதல் 45 வரை விலை செல்கிறது, அதுவே சுத்தமான மாநகரம் என்றால் கேன் வாட்டரின் விலை ரூ 45 முதல் 50 வரை செல்கிறது, இது போக மாடிகள், அபார்ட்மெண்ட்களுக்கு டெலிவரி செய்ய எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கப்படுகிறது.
என்ன தான் மாவு பாக்கெட்டுகள் மசாலா பாக்கெட்டுகள் எல்லாம் சந்தைகளில், வந்தாலும் கூட மக்கள் அரைத்து ஒரிஜினலாக மசாலாக்கள் மற்றும் மாவுகள் தயாரிப்பதையே விரும்புகின்றனர், சரி இதை மையமாக ஒரு தொழில் செய்ய வேண்டுமானால் மாவு மில் வைப்பது சரியாக இருக்கும், மாவு மில்லில் நல்ல இலாபம் இருக்குமா என்றால் ஆம் நிச்சயமாக நம்ம இலாபம் இருக்கவே செய்யும்.சரி, முதலில் மாவு மில் துவங்க என்ன செய்ய வேண்டும்?நீங்கள் என்ன சிறு தொழில் ஆரம்பிக்க நினைத்தாலும் முதலில் அந்த தொழிலை சிறு குறு தொழிலாக பதிவு செய்து கொள்வது அவசியம், பின்னர் மாநகராட்சி அல்லது பேரூராட்சிகளில் கடைக்கான உரிமம் பெற்றுக் கொள்வதும் அவசியம் ஆகிறது, அந்த ஆவணங்களை எல்லாம் வைத்துக் கொண்டு மின் இணைப்பிற்கும் எழுதி கொடுத்து விட வேண்டும், சரி, மெசின்கள், மோட்டார்கள் எல்லாம் எங்கு வாங்குவது என்றால் நேராக கோயம்புத்தூர் ஏறிட வேண்டும், அங்கு தான் மெசின்கள் மொத்த விலையில் கிடைக்கும்.சாதாரணமாக மாவு, மசாலா அரைக்கும் இயந்திரம் இரண்டும் 30,000 ரூபாய் வரை வரும், மோட்டார் எடுத்துக் கொண்டால் ஒரு 25,000 வரும். மாவுக்கு தனியாக, மசாலாவுக்கு தனியாக என இரண்டு மெசின்களை வாங்கி வைத்துக் கொள்வது அவசியம், நீங்கள் இரண்டு மெசின்களையும் பெல்ட் போட்டு ஓட்ட போகிறீர்கள் என்றால் ஒரே ஒரு மோட்டார் போதுமானதாக இருக்கும்.தனி தனியாக இரண்டு மெசின்களும் ஓட வேண்டுமானால் இரண்டு மோட்டார்களை தனி தனியாக வாங்கி வைத்துக் கொள்வது அவசியமாகிறது.
முதலில் செல்போன் சர்வீஸ் கடை எப்படி வைப்பது?செல்போன் சர்வீஸ் கடை வைக்க வேண்டுமானால் முதலில் செல்போன் குறித்த முழு விவரங்களும் தெரிய வேண்டும், செல்போன் சர்வீஸ்சுக்கு என்று கோர்ஸ்கள் எல்லாம் இருக்கின்றன, 6 மாத கோர்ஸ்கள், 1 வருட கோர்ஸ்கள் இதனை தெளிவாக படித்துக் கொண்டால், செல்போன் குறித்த ஓரளவிற்கான ஒரு ஐடியா கிடைக்கும், பின்னர் ஏதாவது பழைய மொபைல்களை எடுத்து ரிப்பேர் செய்து பார்க்கலாம்.வீட்டில் ரிப்பேர் ஆன மொபைல் ஏதேனும் இருந்தால் சரி செய்து பார்க்கலாம், ஓரளவிற்கு செல்போன் குறித்து முழுமையான புரிதல் கிடைத்த பின் செல்போன் சர்வீஸ் கடையை தைரியமாக துவங்கலாம், கடை எடுத்த பின்னர் ஆவணப் பதிவு செய்து கொண்டு நகராட்சிகளில் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளுவது அவசியம், சர்வீஸ் டூல்ஸ்கள் எல்லாம் அமேசானிலேயே கிடைக்கின்றன, ஆர்டர் போட்டுக் கொள்ளலாம், டிஸ்பிளேக்களை இந்தியா மார்ட் போன்ற வலைதளங்களில் மொத்தமாக கொள்முதல் செய்து கொள்ளலாம். சாதாரணமாக டிஸ்பிளே எந்த மொபைலுக்கு மாற்ற வேண்டும் என்றாலும், குறைந்த பட்ச சர்வீஸ் சார்ஜ் என்பது 2,500 ரூபாய், ஆனால் டிஸ்பிளேவின் ரேட்டோ எலக்ட்ரானிக் சந்தைகளில் மிக மிக மலிவு தான், 400 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரையிலும் டிஸ்பிளேக்கள் கிடைக்கின்றன.
Tamarind Planting And Marketing Ideas Tamil - புளியமரம் எப்படிப்பட்ட சூழலில் வளர்க்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.1) கொஞ்சம் அமிலத்தன்மையுள்ள நிலத்தில் தான் புளியமரம் என்பது நன்கு வளரும், உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் களிமண் போன்ற மண்பரப்பு.2) ஒரு ஏக்கரில் கிட்ட தட்ட 40 முதல் 50 புளிய மரங்கள் வரை விளைவிக்க முடியும்.3) ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் இடையில் இடைவெளி அதிகம் இருப்பது மிக மிக அவசியம், அருகில் அருகில் வைக்கும் போது இரு மரத்தின் வேர்களும் பின்னி, மரத்திற்கு தேவையான நியூட்ரியண்ட்ஸ் கிடைக்காமல், புளி காய்த்தல் என்பது இரு மரத்திலும் குறைவாகும்.4) ஒரு புளிய மரம் நன்கு வளர்ந்து புளியை தருவதற்கு குறைந்த பட்சம் 12 முதல் 15 வருடங்கள் ஆவது ஆகும்.5) புளி காய்த்தல் ஆரம்பித்த பிறகு, அதில் இருந்து 60 வருடங்கள் வரையிலும் புளிய மரம், புளியை விளைச்சல் கம்மி ஆகாமல் விடாது தர வல்லது.6) புளி காய்த்தல் நின்றாலும் கூட, புளிய மரம் அதற்கு பின்னும் கூட 150 வருடங்கள் வரை வாடாது வளரும்.
Whole Sale Mittai Shop Ideas Tamil - பொதுவாக மொத்த மிட்டாய் கடை என்பது, கிராமங்களில், தெருக்களில், சந்தைகளில் கடை வைத்து இருப்பவர்கள் தங்கள் கடைக்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கும் கடையாக பார்க்கப்படுகிறது. கொஞ்சம் முதலீடு அதிகமாக போட்டு, வியாபாரிகள் கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல், பிரம்மாண்ட கடையாக வைக்கும் போது வியாபாரிகள் உங்கள் நிறுவனத்தை தேடி வந்து வாங்கி செல்ல வாய்ப்பாக அமையும்.சரி, மொத்த கடையில் என்ன என்ன இருக்க வேண்டும்?வித விதமாக அப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மிட்டாய் வகைகள், மசாலா வகைகள், தேயிலை, காபி தூள்கள், சுக்கு காபி பொடிகள், மொத்த ஸ்டேசனி ஐட்டங்கள், பாக்கு வகைகள், 90 கிட்ஸ் வகை மிட்டாய்கள், அப்பள வகைகள், சோயா, பானி பூரி பாக்கெட்டுகள், மசாலா கடலை வகை அட்டைகள், ஊறுகாய் வகைகள், ரஸ்னா பாக்கெட்டுகள், கெமிக்கல் எஸன்சுகள், சோப் வகைகள், எண்ணெய் பெட்டிகள், பேக்கிங் கவர்கள், அட்டை தட்டுகள், கார பண்டங்கள், இனிப்பு பண்டங்கள், ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பரோட்டா
Variety Rice Hotel Ideas Tamil - வெரைட்டி ரைஸ் என்பது மதியம் மட்டுமே ஓடக்கூடிய உணவு வகை, மதிய உணவு வகை என்றாலும் கூட, காலை ஒரு 11 மணி அல்லது 11:30 மணிக்கே எல்லாம் ரெடி செய்து வைத்து விடுவது நல்லது. நகரத்தின் மையத்தில் போக்குவரத்திற்கு யாருக்கும் பாதிப்பில்லாத இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி விட வேண்டும், ஒரு சின்ன போர்டுகளில் கடைகளில் என்ன என்ன வெரைட்டி ரைஸ் கிடைக்குமோ அதை எழுதியோ, இல்லை போர்டாகவோ வைத்துக் கொள்வது வாடிக்கையாளர்களை கவரும்.பொதுவாக வெரைட்டி ரைஸ் கடைகளில் தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம், பிரிஞ்சு சாதம், புளி சாதம் வைத்து இருப்பார்கள், பெரும்பாலும் அனைத்துமே ஒரே விலைக்கு தான் விற்பார்கள், சந்தைகளில் விற்கப்படும் விலை என்பது ஒரு வெரைட்டி ரைஸ் ரூ 40 முதல் 50 வரை இருக்கும், நீங்கள் இப்போது தான் துவங்குகிறீர்கள் என்றால் சராசரியாக ஒரு வெரைட்டி ரைஸ் ரூ 45 என விலை நிர்ணயம் செய்யலாம்.
Fancy Store Business Ideas Tamil - பொதுவாக பேன்ஸி ஸ்டோர்ஸ் என்பது பெண்களை மையமாக வைத்து துவங்கப்படும் ஒரு தொழில், அவர்களுக்கு பிடித்த அனைத்து பொருள்களும் தேடி தேடி பிடித்து கடைகளில் நிரப்பினால், யோசிக்காமல் வாங்கி விட்டு செல்வார்கள், இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் பேன்ஸி பொருள்கள் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 300 முதல் 500 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும். சரி, பேன்ஸி கடை எங்கு வைப்பது, எப்படி வைப்பது? பேன்ஸி கடைகளை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளுக்கு மிக மிக அருகில் வைத்தால், கடைக்குள் எளிதாக கூட்டத்தை நிரப்ப முடியும், இல்லையேல் ஏதேனும் நகரத்திலும், டவுண்களின் மையத்திலும் வைக்கலாம், பொருள்களை கடை முழுக்க அழகாக நிரப்பி வைத்தல் அவசியம், பார்த்தவுடன் கவரும் பொருள்களை அனைவருக்கும் தெரியும் படி காட்சிப்படுத்தி வைப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களை கடைக்கும் வர வைக்கும். பொதுவாக பெண்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்து எடுத்து தேர்ந்து எடுத்து வாங்கி கடையை நிரப்புதல் வேண்டும்.
சரி முதலில் கிஃப்ட் ஷாப் வைப்பது எப்படி?முதலில் கடை வைப்பதற்கான அனுமதி சம்மந்தப்பட்ட மாநகராட்சி அல்லது பேரூராட்சிகளில் வாங்கி கொள்ள வேண்டும், குறைந்த பட்சம் ஒரு சுமாரான நீளமுள்ள கிஃப்ட் கடையை நன்கு வாடிக்கையாளர்கள் பிரம்மிக்கும் வகையில் கிஃப்ட்களால் அலங்கரிக்க வேண்டுமானால் ஒரு 2-3 இலட்சங்கள் வரை முதலீடு அவசியம், நல்ல பிரம்மாண்டமாக இருக்க வேண்டுமானால் ஒரு நான்கு இலட்சங்கள் அவசியம், பொதுவாக கிஃப்ட் ஷாப்களில் இருக்க வேண்டிய முக்கியமான கிஃப்ட்கள் டெடி பியர், விலங்கு பொம்மைகள், குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையிலான விளையாட்டு பொருள்கள், கடிகாரங்கள், நல்ல Quotes உள்ள போட்டோ பிரேம்கள், குட்டி குட்டி சிலைகள், சீதா ராமன் சிலைகள், ரிங்குகள், நல்ல கவிதை புத்தகங்கள், நல்ல கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இது போக மார்க்கெட்டுகளில் தினம் தினம் புதிது புதிதாய் வருகின்ற கிப்ட்களை அப்டேட்டடாக வாங்கி வைத்துக் கொள்வது அவசியம், பேக்கிங் மற்ரும் பேக்கிங் ஸ்டிக்கர்கள் இலவசமாக செய்து கொடுப்பது அவசியம். நிறைய பேர் தற்போதெல்லாம் லவ் பேர்ட்ஸ் உள்ளிட்டவைகளை கிஃப்டாக கொடுக்க ஆசைப்படுகின்றனர். முடிந்தால் அதையும் பார்வை படுத்தி வைத்து ஜோடி ஜோடியாக விற்கலாம், ஒரு ஜோடிக்கென அழகு அழகான கூண்டுகளும் இருக்கிறது, கூண்டுகளோடு விற்றால் இன்னும் இலாபம் இருக்கும்.
How To Earn By Selling PDF Materials - பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் போட்டி தேர்வுகளுக்காக நோட்ஸ்கள் வாங்கி படித்து இருப்போம், நோட்ஸ்கள் எடுத்து படித்து இருப்போம். ஆனால் பல நாட்களுக்கு பிறகு அந்த நோட்ஸ் அப்படியே வீட்டிலேயே தங்கி இருக்கும், யாருக்கும் உதவாத வகையில் வீட்டிலேயேவும் இருக்கும். பல நாட்கள் உட்கார்ந்து படித்து நீங்கள் எடுத்த அந்த நோட்ஸ்களின் மதிப்பு என்பது விலை மதிப்பற்றது, அதை இன்னொருவருக்கு உதவும் வகையில் ஈ மெட்டீரியலாக மாற்றுவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க இலாபம் பார்க்க முடியும்.
Business With Just 500 RS - ஏதாவது பெரிய காய்கனி மார்க்கெட்டிற்கு செல்ல வேண்டும், வியாபாரத்திற்கு என்று சொல்லி ஒரு 25 கிலோ பல்லாரியை ஒரு சாக்கில் கட்டி எடுங்கள், கிலோ 20 ரூபாய் போட்டு வாங்கி கொள்ளுங்கள். ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்ளுங்கள், எங்காவது தராசு கிடைக்கும் பட்சத்தில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், சைக்கிளை காலை ஒரு 7 மணி போல எடுத்துக் கொண்டு, ’பல்லாரி, பல்லாரி...’ என கூவிக் கொண்டே தெரு முழுக்க சுத்த வேண்டும். விலை 40 ரூபாய் என நிர்ணயுங்கள். கிட்டதட்ட ஒரு 10 மணிக்கு உள்ளாகவே உங்களால் 25 கிலோ பல்லாரியை விற்று தீர்த்து விட முடியும். நீங்கள் வாங்கின 500 ரூபாய்க்கு செலவுகள் எல்லாம் போல 400 ரூபாய் இலாபம் நிற்கும், தற்போது மொத்தமாக உங்கள் கைகளில் 900 ரூபாய் இருக்கும். ஒரு 200 ரூபாய் கையில் வைத்துக் கொண்டு அடுத்த நாள் 700 ரூபாய்க்கு பல்லாரி வாங்குங்கள், அதாவது 35 கிலோ, அதே 40 ரூபாய்க்கு தெருக்காட்டில் விற்கும் பட்சத்தில் அசலுடன் இலாபமும் சேர்த்து செலவுகள் எல்லாம் போக ஒரு 1,300 ரூபாய் கையில் இருக்கும்.
Apple Fruit Price 1kg-பொதுவாகவே நாம் கடைகளுக்கு சென்று ஜெனரலாக வாங்கும் பழங்களில், தங்கம் விலைக்கு இருப்பது என்பது ஆப்பிள் என பொதுவாக சொல்வார்கள், அதனால் தான் ஆப்பிளை பலரும் பழங்களில் தங்கம் என கூறுவார்கள், பொதுவாக தமிழக மார்க்கெட்டுகளில் ஆப்பிள்கள் ஒரு கிலோ என்பது 200 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுவதை பார்த்து இருப்போம், ஆனால் ஒரு கிலோ ஆப்பிள் என்பது 25 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?ஆம், நம்பி தான் ஆக வேண்டும், ஒரு கிலோ ஆப்பிள் 25 ரூபாய் தான், காஷ்மீரில் இன்று அனந்த்நாக் என்ற மாவட்டத்தில் இருக்கும் குல்கம் மார்க்கெட்டில் ஒரு கிலோ ஆப்பிளின் இன்றைய விலை 25 ரூபாய் மற்றும் 20 பைசா தான், ஒரு குவிண்டால் அதாவது 100 கிலோ ஆப்பிள் 2,520 ரூபாய்க்கு குல்கம் மார்க்கெட்டில் விற்கப்படுகிறதாம், இன்னும் சில மார்க்கெட்டுகளில் இதை விட குறைவாகவும் கிடைக்குமாம்.
முதலில் சீசன் தொழில் என்பது என்ன?பொதுவாகவே ஒவ்வொரு பருவ காலத்திலும் ஏதாவது ஒரு விளை பொருள் அதிகமாக சந்தைகளில் புழங்கும், அது காய்கறிகளோவோ, பழங்களாகவோ வேறு ஏதாவது விளை பொருள்களாகவோ இருக்கலாம், இவ்வாறாக அந்த பருவத்தில் அதிகம் விளைகின்ற ஒரு பொருளை தெரிவு செய்து நேரடியாக கொள்முதல் செய்து அதனை சந்தைப் படுத்துதல் ஆகும், பொதுவாக ஒவ்வொரு சீசனும் விளைபொருள் மாறிக் கொண்டே இருக்கும், அது போல இத்தொழிலில் அந்தந்த பருவத்திற்கேற்ப சந்தைப்படுத்தும் பொருளும் மாறிக் கொண்டே இருக்கும்.சரி, எப்படி இந்த தொழிலை துவங்குவது?இந்த சீசன் தொழிலை துவங்குவதற்கு முன், பருவ கால விளைச்சல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம், ஒவ்வொரு பருவத்திலும் என்ன என்ன நன்கு விளைகிறது என தெரிந்து கொண்டால் தான் இந்த தொழிலில் நன்கு சிறக்க முடியும், உதாரணத்தில் தமிழகத்தில் பிப்ரவரி - ஜீன், அக்டோபர் - நவம்பர் என இரண்டு சீசன்களில் மாம்பழம் நங்கு விளையும், உருளையை எடுத்துக் கொண்டால் மே முதல் ஜூன் வரை நன்கு விளையும்.
Super Market Business-நீண்ட நெடிய இடமாக முதலில் அமைய வேண்டும், ஏதாவது டவுணுக்கு நடுவில் ஷாப் அமைவது அவசியம், பார்க்கிங் வசதி நிச்சயமாக இருக்க வேண்டும், முக்கியமாக முதலீடு அதிகம் இருக்க வேண்டும், துவங்குவதற்கு முன்பாகவே ஆட்களை பணியமர்த்துவது, ஸ்டாக்குகள் ஏத்துவது என அனைத்து வேலைகளையும் முடித்து வைத்தல் வேண்டும், வாடிக்கையாளர்கள் பொருட்களை தேடி எடுக்காதவாறு அனைத்தும் வகைப்படுத்தி அடுக்கப்படல் வேண்டும், ஒரு வீட்டிற்கு தேவையான அத்துனையும் அங்கு இருக்க வேண்டும், ஏதாவது ஒரு பொருளுக்காக வாடிக்கையாளர்கல் வெளியில் சென்று வாங்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது, உதாரணத்திற்கு உங்கள் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டிற்கு தினம் தினம் தேவைப்படும் அத்துனை அத்தியாவசியங்களும் அங்கு இருக்க வேண்டும், மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் அடியெடுத்து வைக்க இரண்டே இரண்டு காரணங்கள் தான்.
Super Market Business- நீண்ட நெடிய இடமாக முதலில் அமைய வேண்டும், ஏதாவது டவுணுக்கு நடுவில் ஷாப் அமைவது அவசியம், பார்க்கிங் வசதி நிச்சயமாக இருக்க வேண்டும், முக்கியமாக முதலீடு அதிகம் இருக்க வேண்டும், துவங்குவதற்கு முன்பாகவே ஆட்களை பணியமர்த்துவது, ஸ்டாக்குகள் ஏத்துவது என அனைத்து வேலைகளையும் முடித்து வைத்தல் வேண்டும், வாடிக்கையாளர்கள் பொருட்களை தேடி எடுக்காதவாறு அனைத்தும் வகைப்படுத்தி அடுக்கப்படல் வேண்டும், ஒரு வீட்டிற்கு தேவையான அத்துனையும் அங்கு இருக்க வேண்டும், ஏதாவது ஒரு பொருளுக்காக வாடிக்கையாளர்கல் வெளியில் சென்று வாங்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது, உதாரணத்திற்கு உங்கள் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டிற்கு தினம் தினம் தேவைப்படும் அத்துனை அத்தியாவசியங்களும் அங்கு இருக்க வேண்டும், மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் அடியெடுத்து வைக்க இரண்டே இரண்டு காரணங்கள் தான்.ஒரு காரணம் பில் எழுதாமல் நேரடியாக பார்த்து தேவையானதை தரமானதை கொள்முதல் செய்ய முடியும், இன்னொரு காரணம் விலை, இந்த இரண்டையும் திருப்தி படுத்தும் வகையில் உங்களுடைய சூப்பர் மார்க்கெட் இருக்க வேண்டும், பொருட்களை கொள்முதல் செய்யும் போது நேரடியாக கம்பெனிகளை அணுகி பெறுதல் அவசியம், சந்தைகளை விட உங்கள் மார்ட்டில் விலை குறைவாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் உங்கள் மார்க்கெட்டை தேடி வருவார்கள்.
How To Start Automobile Business-முதலில் நீங்கள் வைக்கப்போகும் கடைக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, நகராட்சி அல்லது மாநகராட்சியில் கடைக்கான உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும், ஆட்டோமொபைல் கடை என்னும் போது ஒரு மிகப்பெரிய முதலீடு அவசியம், உங்கள் கையில் முதலீடு இல்லை என்னும் போது வங்கிகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தொழிலுக்கான கடன் கூட பெற்றுக் கொள்ளலாம்.ஆட்டோமொபைல் கடை என்னும் போது ஒரு இரண்டு மெக்கானிக்குகளை கையில் வைத்து இருப்பதும் அவசியம், பொருள்களை மாற்ற வண்டிகளை ரிப்பேருக்கு விடுபவர்கள் உங்கள் கடைகளிலேயே பொருள்களை வாங்கி விட்டு அங்கேயே மாட்டி செல்லும் வசதி அவர்களுக்கு கிடைக்கும், பெரும்பாலான மெக்கானிக் ஷாப்புகள் தனி தனியாக இருப்பதால் அவர்கள் பொருள்களை ஒரு இடத்தில் வாங்கி, இன்னொரு இடத்தில் மாட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தென்னை அதிகமாக காணப்படும் பகுதியாக அறியப்படுவது உடன்குடி,கன்னியாகுமரி மற்றும் பொள்ளாச்சி பகுதிகள் தான், இந்த தென்னை வளர்ப்பில் அதிக இலாபம் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். ஆனால் நட்டவுடனே சாகுபடியை எதிர்பார்க்க கூடாது, நட்டவுடன் குறைந்தபட்சம் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை பொறுத்து தான் சாகுபடியை துவங்க முடியும்.சரி, தென்னை பயிரிடல் எப்படி செய்யலாம்?தென்னையை பொறுத்தவரை நெட்டை*குட்டை, குட்டை* நெட்டை, நெட்டை என மூன்று ரகங்கள் உண்டு, ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும், இந்த ரகங்களை நீங்கள் வேளாண் மையம் ஏதேனும் உங்கள் அருகில் இருப்பின் அங்கு சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம் என்ற பகுதிக்கு அருகில் தென்னை கன்றுகளுக்காகவே ஒரு நாற்றுப்பண்ணை இருப்பது குறிப்பிடத்தக்கது, பொதுவாக தென்னை பயிரிடுபவர்கள் இங்கு வந்து கன்றுகளை வாங்கி செல்வது வழக்கம்.
கரும்புச்சாறுமுதலில் கரும்புச்சாறு பல அசாத்திய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, செரிமானத்திற்கு பெரிதும் உதவுவது, கிட்னி பாதுகாப்பிற்கும், கேன்சர் செல்களுக்கு எதிர்ப்பு பொருள் உருவாக்குவதிலும் கரும்புச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது, என்ன தான் புதிது புதிதாக பல பாட்டில் வகை ஜூஸ் வகைகள் மார்க்கெட்டுக்களுக்கு வந்தாலும், இன்னமும் ப்ரஷ் ஆக அரைக்கப்படும் ஜூஸ்களுக்கு மார்க்கெட் இருக்க தான் செய்கிறது, அந்த வகையில் கரும்புச்சாறும் மக்கள் விரும்பி பருகுகின்ற ஒரு ஆகச்சிறந்த பானம் தான்.சரி கரும்புகளை முதலில் கொள்முதல் செய்வது எப்படி?தமிழகத்தில் கரும்புச்சாறு வகை கரும்புகள் அதிகம் விளைவது தேனி பகுதிகளில் தான், முதலில் கரும்பு உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பேசி விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும், ஒரு டன் என எடுக்கும் போது ஒரு கிலோ கரும்பு என்பது ரூபாய் 6 முதல் 7 வரை விலை நிர்ணயம் செய்வார்கள், கட்டுகளாக எடுக்கும் போது ஒரு கரும்பு 8 முதல் 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்வார்கள், ஒரு கரும்பு கட்டில் 15 கரும்புகள் இருக்கும் பட்சத்தில் அதன் விலை 120 முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்வார்கள்.
ஸ்டேசனரி ஸ்டோர் வைக்க அனுமதி வாங்க வேண்டுமா?பொதுவாகவே தற்போது எல்லா ஸ்டோர் வகைகளுக்கும் குறைந்த பட்சம் நகராட்சிகளில் கடைகளை ரிஜிஸ்டர் செய்து ஆவணம் செய்து கொள்வது அவசியம் ஆகிறது, அந்த வகையில் ஸ்டேசனரி ஸ்டோர் வைக்கிறீர்கள் என்றால் முறையான ஆவணங்கள் மூலம் கடையை நகராட்சி அல்லது பேரூராட்சிகளில் பதிவு செய்து வைத்துக் கொள்வது அவசியம்.எங்கு வைக்கலாம்? என்ன என்ன பொருள்கள் வைக்கலாம்?ஸ்டேசனரி ஸ்டோர்கள் என்றாலே பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் இடத்தின் மையத்தில் அல்லது நகரத்தின் மையத்தில் வைப்பது அவசியம், பேனா, பென்சில், சார்ட், பேப்பர், நோட்டுகள், அட்டைகள், நோட்ஸ்சுகள், பிராஜக்டுகளுக்கு தேவையான ஐட்டங்கள், ஸ்டிக்கர்கள், ஸ்டேப்ளர், பசைகள், தெர்மோ கோல் என எதுவும் மாணவர்களிடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு கடை நிரம்பி இருக்க வேண்டும்.
சரி, மெட்டல் ஷாப் வைப்பது எப்படி?முதலில் மெட்டல் கடை வைப்பதற்கு ஒரு பெரிய அகலமான இடம் தேவை, மெட்டல் கடை வைக்கிறோம் என சொல்லி மாநகராட்சி அல்லது பேரூராட்சியில் பதிவு செய்து கொள்வது அவசியம் ஆகிறது. நீங்கள் மொத்த கடை வைக்க வேண்டும் என்றால் நேரடியாக தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சென்றே முதல் முறை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் ஒரு முறை மட்டும் நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும், அதற்கு பின்னர் கால் செய்து இந்த சரக்கு தேவை என்றால் அவர்களே லாரி செட்டில் போட்டு விட்டு விடுவார்கள்.சரி, எவ்வளவு முதலீடு போட வேண்டும்?அலங்காரமாக பெரிய அளவில் வைக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் 50 இலட்சம் முதல் 90 இலட்சம் வரை முதலீடு அவசியம், உங்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட இடம் இருக்கும் பட்சத்தில் அதனை ஆவணமாக வைத்துக் கொண்டு வங்கிகளில் கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம், முதலீட்டை எடுத்து விட முடியுமா என்றால், இரண்டு வருடத்திலேயே எடுத்து நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்றி விட முடியும்.
பியூட்டி பார்லர் எங்கு வைக்கலாம், எப்படி வைக்கலாம்?பியூட்டி பார்லரை பொறுத்தவரை இடத்தின் தேர்வு என்பது மிக மிக முக்கியம், பொதுவாக நகரத்தின் மையத்தில் வைப்பது நல்ல இலாபம் தரும், பார்லருக்கான பெயரை வைப்பதில் மிக மிக கவனம் கொள்ள வேண்டும், கொஞ்சம் பேஷனாக பெயர் இருந்தால் அது பார்லருக்கு கூடுதல் மதிப்பை தரும், லைட்டிங்ஸ், பார்லரின் சேர்கள், டைல்கள், கண்ணாடிகள் என பார்லரின் சின்ன சின்ன விஷயங்களிலும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.ஒரு விஷயம் அட்ராக்டிவாக இருக்கும் போது தான் அது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும், அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பார்லரின் செட் அப்களை அமைப்பதில் முக்கியமாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும், வாடிக்கையாளர்களின் ஸ்கின்களை பாதிக்காத வகையில் நல்ல க்ரீம்களை தேர்வு செய்வதிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும், பார்லருக்கு பியூட்டிசியனை தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சரி, பெட்டிக்கடை ஏன்?பொதுவாக நமது வீட்டைச் சுற்றி இருக்கும் அனைவரும் டவுண்க்கு சென்று பொருள்களை வாங்க மாட்டார்கள், மார்க்கெட்டுக்கு சென்று பொருள்களை வாங்கி வர மாட்டார்கள், தினசரி தேவைக்கு வீட்டு அருகிலேயே ஒரு கடையை தான் எதிர்பார்ப்பார்கள், அந்த வகையில் வீட்டோடு சேர்த்து ஒரு பெட்டிக்கடையை வைத்து விட்டால் சுற்றி இருக்கும் மக்கள் உங்கள் கடைக்கு வந்து தினசரி தேவையான பொருள்களை வாங்கி விட்டுச் செல்வார்கள். அது அவர்களுக்கு மட்டும் வசதி அல்ல, உங்களுக்கும் வசதி, வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டே ஒரு வருமானம்.
சரி முதலில் எப்படி பானி பூரி கடை ஆரம்பிப்பது?பெரிய முதலீடு தேவை இல்லை என்றாலும் கூட, நீங்கள் போடும் ஸ்டாலை பிரம்மிப்பாக்க வேண்டும், குட்டி ஸ்டாலை கொஞ்சம் அழகாக வடிவமைத்து, நிறைய லைட்டிங்ஸ் எல்லாம் வைக்க வேண்டும், கடைக்கு அழகான பெயர் ஒன்றை சூட்டி அதையும் அந்த ஸ்டாலில் லைட்டிங்காக வடிவமைத்தால் நல்லது, உங்களது முதலீட்டில் அதிக செலவை எடுத்துக் கொள்வது ஸ்டால் ஆக தான் இருக்க வேண்டும்.சாதாரணமாக பார்த்து இருப்பீர்கள் பானி பூரி கடைகளின் பெயரை பானி வெட்ஸ் பூரி, பானி லவ்ஸ் பூரி இது போல ஏதாவது வித்தியாசமான பெயரை வைத்தால் வாடிக்கையாளர்களை அது எளிதாக கவரும், பானி பூரி செய்வதற்கான துணை பொருள்களின் செலவு மிக மிக கம்மி தான், நீங்கள் கடையை நன்றாக வடிவமைக்கும் பொருட்டே வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.
அது என்ன ப்ஜ்ஜி டீ?அது என்ன பஜ்ஜி டீ ஏன்? வடை இருக்க கூடாதா? என நீங்கள் கேட்கும் குரல் இங்கு கேட்கிறது, வடையை விட பஜ்ஜி தான் டீக்கும், காபிக்கும் சரியான காம்பினேசன், அதிலும் கூடவே சட்னி இருந்து விட்டால் அமிர்த்தம் என்ன அமிர்தம் என்றெல்லாம் கேட்கும் அளவிற்கு சுவை இருக்கும். அது போக ஒரு தொழிலாக யோசித்தால் வடையை விட பஜ்ஜியில் தான் அதிக இலாபம் இருக்கும், வேலைப்பளுவும் மிக மிக கம்மி.வடையை எடுத்துக் கொண்டால், உளுந்து அல்லது கடலை பருப்பு அரைத்து, அதை பிசைந்து, எண்ணெயில் பதமாக போட்டு வடை ஆக்க வேண்டும். பஜ்ஜிக்கு எதையும் அரைக்க தேவை இல்லை, கடலை மாவு, கடலை மாவுக்கு பாதி அளவில் அரிசு மாவு இரண்டையும் கரைத்து, துணை பொருளாக வாழைக்காயோ, அப்பளமோ, முட்டையோ, வெங்காயமோ, குடை மிளகாயோ என எதையும் எடுத்துக் கொண்டு இப்படி ஒரு தடவு அப்படி ஒரு தடவு என தடவி எண்ணெயில் போட்டு எடுத்தால் சூடான பஜ்ஜி ரெடி.
குஜராத்தில், ஆனந்த் மாவட்டத்தில் பிறந்த வினிதா சிங், டெல்லி பப்ளிக் ஸ்கூலில் தனது கல்வி முடித்த பிறகு, 2015-ல் ஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 2017-ல் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ முடித்து, தற்போது அவரது நிறுவனமான சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics) இளம்பெண்களிடையே பிரபலம் பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் பழம் சாப்பிட்டதன் காரணமாக , இஸ்ரேலில் மரக்கன்றுகள் வாங்கி: கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு இளைஞர், அவகாடோ பழ வகைகளை விளைவித்து , வருடத்திற்கு ரூ.1 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.கோடீஸ்வர இளைஞர்மத்திய பிரதேசம் கடுமையான வெப்பம் கொண்ட மாநிலமாக இருக்கிறது , அவகாடோ வளர்ப்பதற்கு ஏற்ற வானிலை இல்லை. இந்த பல வகைகள் வடகிழக்கு இந்தியா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் மட்டுமே வளர்கின்றனர் . அவகாடோ வளர்க்க 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது; அதற்கு மேல் அல்லது கீழ் இருந்தால், பழங்கள் தாக்குபிடிக்காது.இந்நிலையில், போபாலில் உள்ள இளம் விவசாயி ஹர்ஷித் கோதா, அவகாடோ பழ வகைகளை விளையாட்டில் ஈடுபட்டு, ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் பெற்றுள்ளார் . விவசாயத்தின் மீது ஆர்வத்தால், இவர் முதலில் இஸ்ரேலிலிருந்து 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்து, தற்போது 10 ஏக்கர் அளவிற்கு அவகாடோ தோட்டங்களை வைத்துள்ளனர் .
பொதுவாக பிரியாணி என்பது அனைவரின் விருப்ப உணவாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளில் ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் உணவு வகை கூட பிரியாணி தான். காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் உண்டு, ஆனால் அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யப்படுவது என்பது மதிய நேரத்தில் தான். சரி இந்த பிரியாணி கடையை தள்ளுவண்டியில் வைப்பதன் மூலம் பெரிதாக இலாபம் பார்க்க முடியுமா என்றால் ஆம், நிச்சயமாக முடியும். அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மதுரையின் துரையை சேர்ந்த 22 வயது மாணவன் சூர்ய வர்ஷன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கி, இன்று ரூ. 10 கோடி மதிப்புள்ள Naked Nature என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.சூர்யா, 12வது வகுப்பில் படிக்கும் போது தனது வீட்டு சமையலறையில் செம்பருத்தி பயன்படுத்தி குளியல் உப்பை தயாரிக்க ஆரம்பித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர், அங்கு இருந்து அவருக்கு தேவையான உப்பை வரவழைத்தார்.பிறகு, ஆரம்பத்தில், அவரது தயாரிப்புக்கு எவரும் பெரிதாக மதிப்பளிக்கவில்லை, அவருடைய சிறு வயதை காரணமாக வைத்து பலரும் நிராகரித்து வந்தனர்.ஆனால், ஒரு ஆயுர்வேத மருத்துவர் தயாரித்துள்ள உப்பை ஆர்வத்துடன் வாங்கி வந்தனர். இதனால் சூர்யாவின் தொழிலுக்கு புதிய திருப்புமுனை அமைந்தது. இதனையடுத்து, மதுரையில் உள்ள கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பட்ட படிப்பைப் படித்த சூர்யா, தனது சொந்த வருமானத்தை வைத்து நிறுவனம் உருவாக்குவதற்கு முதலீடு செய்தார். தற்போது, Naked Nature 70 வகை தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
முதலில் ஃபிரைடு ரைஸ் கடை வைப்பது எப்படி?முதலில் நல்ல தெளிவான ஒரு இடத்தை தேடி கண்டு பிடிக்க வேண்டும், இடம் அமையும் பட்சத்தில், ஃபிரைடு ரைஸ் கடையை பொருத்த மட்டில், கேஸ் கனெக்சனுடன் கூடிய ஒரு தள்ளு வண்டி அவசியமாகிறது, நல்ல லைட்டிங் வசதியுடன் அந்த தள்ளு வண்டி இருக்கும் போது, கடையை பார்க்கும் போதே ஒரு பிரம்மிப்பு இருக்கும், வாடிக்கையாளர்கள் கடையை பார்த்ததுமே கடையை நோக்கி வர தோன்றும், தோற்றம் தானே முதலில் எல்லாம், சரி வாடிக்கையாளர்களை இழுத்தாயிற்று அதற்கு அடுத்தபடியாக என்ன செய்யலாம். நிறைய வெரைட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும், உதாரணத்திற்கு காளான் சூப், மசால் காளான், பானி பூரி, மசால் பூரி, சிக்கன் ஃப்ரைடு ரைஸ், வெஜ் ஃபிரைடு ரைஸ், எக் ஃப்ரைடு ரைஸ், காளான் ஃப்ரைடு ரைஸ், முட்டை காளான் என பல விதங்களை வைப்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். அஜினோ மோட்டோ உபயோகிக்காமல் சுவைக்காக வேறு எதுவும் சேர்க்காமல் இருப்பது நல்லது. முடிந்தால் அஜினோ மோட்டோ உபயோகிப்பதில்லை என ஒரு போர்டும் வைப்பது நல்லது.
சரி, முதலில் எப்படி உப்பை கொள்முதல் செய்வது?பெரும்பாலும் உப்பு என்றாலே அது தூத்துக்குடி தான், உப்பு பெரும்பாலும் ஏற்றுமதி ஆவதும் தூத்துக்குடியில் இருந்து தான், தூத்துக்குடியில் ஒரு நல்ல நிறுவனத்தை தேடி, அந்த நிறுவனத்துடன் ஒரு டை அப் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கோ வாரத்திற்கோ உங்களுக்கு எவ்வளவு உப்பு தேவைப்படுமோ அதை அவர்களிடம் சொல்லி சரியான நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இடையில் உப்பு தரகர்களை யாரும் அணுகாமல் நேரடியாக உப்பு நிறுவனத்திற்கே சென்று அவர்களிடமே விலையை பேசிக் கொள்வது நல்லது.
சரி, சலூன் எப்படி ஆரம்பிக்கலாம்?முதலில் ஒரு கடையை பார்க்க வேண்டும். சிறிய கடையாக இருந்தாலும் நன்று தான், முதலாவதாக கடைக்கான வாடகை உரிமம், கடை வைப்பதற்கான மாநகராட்சி, பேரூராட்சி ஆவணங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ட்ரிம்மர், கத்திரிக்கோல் உள்ளிட்டவைகளை நல்ல பிராண்டடுகளில் வாங்கி வைத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. லோக்கல் கடைகளில் வாங்கும் போது அது தோலை கிழிக்க வாய்ப்புகள் இருக்கிறது. குறைந்த பட்சம் ஷேவிங் க்ரீம், ட்ரிம்மர்கள், அழகு சாதன பொருட்கள், கண்ணாடிகள், சேர்கள் ஆகியவற்றிற்கு 15,000 வரை செலவு ஆகும். முதல் முறை மட்டும் செலவு அதிகம். அதற்கு பின்னராக போக போக பொருட்கள் மட்டும் வாங்கி போட்டால் போதுமானது ஆக இருக்கும். முக்கியமாக கிருமி நாசினிகள் வைத்துக் கொள்ள வேண்டும். பிளேடுகள் ஏதும் படும் போது டூல்களை கிருமி நாசினி கொண்டு க்ளீன் செய்வது அவசியம்.
பொதுவாக சாலை வகை மீன்கள் விலையும் குறைவாக இருக்கும், அதே சமயத்தில் அதில் இருக்கும் சத்துக்களும் மிகுதியாக இருக்கும், ஒரு 15 ரூபாய்க்கு வாங்கினாலே பெரும்பாலானோரின் வீட்டில் மூன்று வேளைக்கான சாப்பாடு அதை வைத்து ஓடி விடும். சரி அதை வைத்து எப்படி தொழில் செய்யலாம் என்று கேட்டால், முதலி மீனை கொள் முதல் செய்வதர்கு நேரடியாக மீன் பிடி துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும், பொதுவாக சாலை மீன்கள் மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரம் துண்டுகளாக விற்பனை செய்வார்கள். அன்றைய மார்க்கெட்டை பொறுத்து ஆயிரம் சாலை மீன்கள் ரூபாய் 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படும்.
பொதுவாக காயிலாங்கடை என்பது பெரிதாக ஒன்றும் இல்லை, பழைய பிளாஸ்டிக், பழைய இரும்பு, பழைய தகரம், பழைய புத்தகம் பழைய துணிமணிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு எடுப்பது ஆகும்.சரி எவ்வாறு காயிலாங்கடையை தோற்றுவிப்பது?காயிலாங்கடை என்னும் போது ஒரு மிகப்பெரிய குடோன் இருப்பது அவசியம் ஆகிறது. இதுபோக இது இரும்புத் தொழில் செய்யும் பல வியாபாரிகளை கைக்குள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மூன்று கால் தள்ளுவண்டி இருப்பது அவசியமாகிறது.காயிலாங்கடையை பொருத்தவரை தனியாக செய்வது என்பது கடினம், வேலைக்கு நிச்சயம் ஓரிரு ஆட்கள் வைத்துக் கொள்ள வேண்டும், பலசரக்கு மெடிக்கல் ஹோட்டல் இதுபோல பல இடங்களில் சேரும் பழைய பொருட்கள், பழைய அட்டைகள் ஆகியவற்றை நாமே நேரடியாக அங்கு சென்று கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், வியாபாரிகள் என்னும் போது பழைய பொருட்களை ஓரிரு ரூபாய் கூட கொடுத்து எடுக்கலாம், அவ்வாறாக எடுக்கும் போது வியாபாரிகள் நேரடியாக கடைக்கு வந்து, சேரும் பழைய பொருட்களை வந்து போடுவர்.
சரி, டீ கடை வைப்பது அவ்வளவு எளிதா?ஆம், டீ கடை வைப்பது என்பது மிக மிக எளிது தான், மற்ற தொழிலை காட்டிலும் என்பது முதலீடு என்பதும் மிக மிக குறைவு தான். ஆனால் வெறும் டீ, காபி என்பது மட்டும் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை கடைக்குள் இழுப்பது என்பது கடினம். கூடவே சூடாக வடை, பஜ்ஜி, சம்சா, பிஸ்கட்டுகள், கூடவே தினசரி பேப்பரும், டீ கடை முன் சேர்களும் வைக்கும் போது வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைய வாய்ப்புகள் இருக்கும்.சரி, டீ கடையை எங்கு வைக்கலாம், சரியாக எந்த நேரத்தில் டீ அடிக்க துவங்கலாம்?பொதுவாக ஒரு டீ கடை புதிதாக துவங்கும் போது, தொழிலாளர்கள் அதிகம் கூடும் பகுதியில் வைக்கலாம், மருத்துவமனைகள் அருகில் வைக்கலாம், பேருந்து நிலையங்களின் அருகில் வைக்கலாம், தினமும் காலை 4 மணிக்கே டீ கடை துவங்கி, டீ அடிக்க துவங்கி விட வேண்டும், அதிகாலை, சாயங்காலம் என்ற இரு நேரங்கள் தான் டீ அதிகமாக ஓடும் நேரம். அந்த இரு நேரங்களிலும் கடைகளை பரபரப்பாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் சூடாக சட்னியோடு வடை போடும் போது டீயின் ஓட்டமும் அதிகமாக இருக்கும்.
வெற்றிக்கதையுடன் பிரேர்னா,பிரேர்னா, சிங்கப்பூரில் "லிட்டில் பேடிங்டன்" என்ற மழலையர் பாடசாலையை நிறுவியவர். பின்னர், 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் "கிரியேட்டிவ் கலிலியோ" என்ற Edutech ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.
பி.சி. முஸ்தபாவின் iD Fresh Food நிறுவனம் மீண்டும் செய்திகளில் வந்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த நிறுவனம் 100 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 2023 நிதிய ஆண்டில், iD Fresh Food ரூ.500 கோடி வருவாய் ஈட்டியது, இதில் பெரும்பாலும் விரைவு வர்த்தக சேவைகள் மூலம் விற்பனை நடைபெற்றது.முஸ்தபாவின் வெற்றிக்கதை திடீரென செல்வந்தராக மாறுதல் அல்ல. கேரளாவில் ஒரு குறைந்த மத்தியதர வர்க்க குடும்பத்தில் பிறந்த இவர், 10 வயதிலிருந்து வேலை செய்ய ஆரம்பித்தார்.
மலேசியாவின் Kedah பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்த அல்புகாரி, தனது வாழ்க்கையை மாற்றியெழுப்பும் சவால்களை எதிர்கொண்டுள்ளார். ஒரு காலத்தில், குடும்பத்தின் கால்நடை வியாபாரம் தடுமாறி, தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.பிறகு, நம்பிக்கை இழக்காமல், அல்புகாரி அரிசி வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு, கட்டுமானம், கார் விற்பனை மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முயற்சிகளை முன்னெடுத்து, தொழில் வெற்றிகளைப் பெற்றார்.
பொதுவாக இந்த தண்ணீர் கேன் டெலிவரி பிசினஸ்சை பொறுத்தவரை முதலில் ஒரு நம்பகத்தன்மை மிகுந்த நிறுவனம் தேவை. அதாவது குறித்த நேரத்தில் தண்ணீர் தேவையான நேரத்தில் சரியாக கொண்டு வந்து கொடுக்கின்ற நிறுவனம் என்பது முதலில் அவசியம் ஆகிறது. பெரிதாக முதலீடு என்பது அவசியம் இல்லை. உங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையில் ஒரு நம்பகத் தன்மை ஏற்கனவே இருப்பின் கேனுக்கான டெப்பாசிட் கூட சில நிறுவனங்கள் கேட்பதில்லை.சரி, எப்படி முதலில் தொழிலை துவங்குவது?பொதுவாக இந்த தண்ணீர் கேன் டெலிவரி தொழிலுக்கு கடை தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, பலரும் வீட்டிலேயே வைத்து தான் தொழிலை செய்கிறார்கள். ஒரு நம்பகத்தன்மையான நிறுவனத்திடம் இருந்து ஒரு நூறு, 20 லிட்டர் கேன், ஒரு ஐம்பது கேஸ் 300 மிலி வாட்டர் கேன், ஒரு ஐம்பது கேஸ் 500 மிலி வாட்டர் கேன், ஒரு ஐம்பது கேஸ் 1 லிட்டர் வாட்டர் கேன், ஒரு இருபது 2 லிட்டர் கேன் என்று வாங்கு வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் போது 20 லிட்டர் கேன் உங்களுக்கு 20 முதல் 25 ரூபாய் வரையில் தருவார்கள், 35 எண்ணம் கொண்ட 300 மிலி தண்ணி கேன் கேஸ் 125 ரூபாய்/ கேஸ் என தர வாய்ப்பு இருக்கிறது. அதே போல 24 எண்ணம் கொண்ட 500 மிலி தண்ணி கேன் கேஸ் 120/ கேஸ் என தர வாய்ப்பு இருக்கிறது. 12 பாட்டில்கள் கொண்ட 1 லிட்டர் கேன் கேஸ் 85 முதல் 90 ரூபாய் வரை தருகிறார்கள். 9 எண்ணம் கொண்ட 2 லிட்டர் தண்ணீர் கேஸ் 160-180 வரை உங்களுக்கு தருகிறார்கள், முதலில் இந்த பிசினஸ்க்கு விசிட்டிங் கார்டு என்பது மிக மிக அவசியம் ஆகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போஜ்ராஜ் நவானி, சிறுவயதிலேயே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். தனது நண்பர்களுக்கான ஆடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். கல்லூரி படிப்புக்கு பிறகு, 1995-ம் ஆண்டு "சாரி மேடம்" என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு கடையை தொடங்கி, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.2003-ம் ஆண்டில், தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக மும்பைக்கு சென்றார்.பிறகு,2008-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி, "நோஸ்ட்ரம் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட்" என்ற ஆண்களுக்கான ஆடை நிறுவனத்தை நிறுவினார்.
1) தள்ளு வண்டி இட்லி கடைபொதுவாக சூரியன் உதிப்பதற்கு முன்னதாகவே பலரும் தற்போதெல்லாம் வேலைக்காக ஓட ஆரம்பித்து விடுகின்றனர். மூட்டை தூக்குபவர்கள், பலசரக்கு கடை தொழில் செய்பவர்கள், ஐடி ஊழியர்கள், மார்னிங் ஷிப்ட் ஊழியர்கள் என பலரும் தற்போதெல்லாம் அதிகாலை முதலே ஓடிக் கொண்டு இருக்கின்றனர். அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கும் அந்த பொழுதில் சரியான இடத்தில், இட்லி, தோசை, வடை வைத்து ஒரு தள்ளு வண்டி கடை போட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஓட்டினால், குறைந்த பட்சம் ஒரு 1,500 முதல் 2,000 வரை இலாபம் பார்க்கலாம்.2) தள்ளு வண்டி வடை கடைஒரு பரபரப்பான இடத்தில் ஒரு மதியத்திற்கும், அந்தி சாயும் நேரத்திற்கும் இடையில் ஒரு 3 மணி அளவில், சூடாக வடை வகைகள், வாழைக்காய் பஜ்ஜி, முட்டை பஜ்ஜி போட ஆரம்பித்து அதை சட்னியோடு வைத்து விற்கும் போது சும்மா கூட்டம் அள்ளும். வேலை செய்து களைத்து போன பலருக்கும் ஏதாவது சாப்பிட்டு விட்டு வருவோமோ என மூளை சொல்லும் நேரம் அது. ஒரு 3 மணி முதல் 7 மணி வரை என நான்கு மணி நேரம் பார்த்தாலே ஒரு 1,000 வரை இலாபம் பார்க்க முடியும்.3) தள்ளு வண்டி பானி பூரி கடைபொதுவாக பானி பூரியையும் மக்கள் அந்தி சாயும் நேரத்தில் தான் தேடுவார்கள், ஒரு 3 மணி அளவில் ஆரம்பித்து, சூடாக பானி பூரி, ரச பூரி, மசால் பூரி என பூரி வ்கைகளில் பல வகைகளை வைத்து, கூடவே மசால் சுண்டல் உள்ளிட்டவைகளையும் விற்று வந்தால் அளைத்து களைத்தவர்களுக்கு ஒரு குட்டி சாப்பாடாகவே அது அமையும். 3 மணியில் இருந்து 8 மணி வரை என 5 மணி நேரம் கடையை ஓட்டும் போது ஒரு 1,000 முதல் 1,200 வரை இலாபம் பார்க்கலாம்.4) தள்ளு வண்டி குழம்பு கடைபொதுவாக வேலைக்கு அவசரம் அவசரமாக ஓடுபவர்களுக்கு தற்போதெல்லாம் காய்கறி, வெட்டி கறி வெட்டி குழம்புகளை வைக்க நேரம் இல்லை, குக்கரில் ஒரு இரண்டு விசில் சாதம் வைத்து குழம்பை வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர். பெரும்பாலும் அவ்வாறு வாங்குபவர்கள் ஏதாவது ஒரு ஹோட்டலில் சென்று தயங்கி தயங்கி தரமசங்கடமாக கேட்டு வாங்குவார்கள், அதன் காரணமாகவே தற்போது பெரும்பாலான இடங்களில் குழம்பு கடைகளை பார்க்க முடிகிறது, மீன் குழம்பு, சாம்பார், கிரேவி, ஏதாவது ஒரு கூட்டு பொறியல் வைத்து 30-50 வரை மதியமும், இரவும் தள்ளு வண்டியில் வைத்து ஓட்டினால் ரூபாய் 1,000 முதல் 1,200 வரை இலாபம் பார்க்கலாம்.
சரி, அது ஏன் இட்லி, தோசை மட்டும் என்றால்...!சரி, அது ஏன் இட்லி, தோசை மட்டும் என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது, ஒரு பிரியாணியையோ, ஒரு சைவ சாப்பாடையோ, ஒரு பரோட்டாவையோ எடுத்துக் கொண்டால் அதன் ஆக்க செலவு என்பது கொஞ்சம் அதிகம், ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும் போது, அசலே, குறித்த விலையில் 70 சதவிகிதம் வந்து விடும், 30 சதவிகிதம் தான் இலாபம் என்பது இருக்கும். ஆனால் இட்லி தோசைகளில் அப்படி இல்லை. அதன் ஆக்க செலவு என்பது மற்ற உணவுகளை விட மிக மிக கம்மி, அதனால் விற்பனையாளர்களுக்கு மற்ற உணவுகளை விட இட்லி, தோசை அதிகம் இலாபம் தருகிறது.சரி, ஒரு குத்து மதிப்பாக இட்லி, தோசை என்பது எவ்வளவு இலாபம் தரும்?பொதுவாக மாவுக்கடைகளில் மாவு விற்பார்களே, அந்த கப் அளவிற்கான மாவை ரியாலிட்டியில், தயாரிப்பதற்கு ஒரு இருபத்து ஐந்து முதல் 30 ரூபாய் வரை செலவு ஆகிறது, அந்த 30 ரூபாய் மாவில், குறைந்த பட்சம் 25 இட்லிகள் வரை அவிக்க முடியும், அதற்கான சாம்பார், சட்னிகளுக்கு ஆகும் செலவு 30 ரூபாய் என வைத்துக் கொண்டால், 20 இட்லி + சாம்பார் சட்னிக்கான அசல் செலவு 60 ரூபாய், தற்போது ஒரு இட்லி 8 ரூபாய் என வைத்துக் கொண்டால், அந்த 25 இட்லி விற்பனையில் இரு நூறு ரூபாய் கிடைக்கிறது. அதில் இலாபம் மட்டும் 140 ரூபாய். ஒரு நாளைக்கு 250 இட்லிகள் விற்கமுடியும் என்றால், இட்லியில் மட்டுமே உங்களால் ஒரு நாளைக்கு 1400 ரூபாய் இலாபம் பார்க்க முடியும்.
Village Business Ideas In Tamil-வாழை என்பது பொதுவாக தென் தமிழகம் மற்றும் கிழக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பயிரிடப்படும் தமிழகத்தின் ஒரு மேஜரான பயிர் வகையாக தான் பார்க்கப்படுகிறது. பொதுவாக மண் ஒத்துழைக்கும் போது வாழையை நிலத்தில் வருடம் முழுவதும் பயிரிடலாம். வாழை நட்டலை பொறுத்தவரை அடர் பயிரிடல் அதிக இலாபம் தரும் என விவசாயிகள் கூறுவார்கள். பொதுவாக ஒரு ஏக்கரில் 1,400 வாழை வரை பயிரிடலாம் என விவசாயிகள் கூறுகின்றனர். இது வாழைக்கு ஏற்ப அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம், இங்கு சராசரியாக எண்ணங்கள் தரப்பட்டு இருக்கிறது.சரி, வாழையில் என்ன என்ன பொருட்கள் இலாபம் தரும்?முதலில், இலையில் வரும் இலாபத்தை பார்க்கலாம்பொதுவாக, வாழையில் இலை, தண்டு, காய், கனி, நார், கன்று என அனைத்துமே இலாபம் தரக்கூடியது தான், வாழை நட்டவுடன் ஒரு 7 மாதத்திலேயே இலை அறுக்க ஆரம்பித்து விடலாம், வாழையை இலைக்காக மட்டும் பயன்படுத்துபவர்கள் கிட்டதட்ட 2 வருடங்கள் நட்டிய வாழையில் இலை அறுப்பு செய்யலாம். நன்றாக பராமரிக்கும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் வரை இலை மகசூல் என்பது இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு வருடத்திற்கு 150 நாட்கள் மட்டும் இலை அறுக்கிறோம் என வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு 1,000 இலைகள் மார்க்கெட்டுக்கு செல்கிறது என்றால், ஒரு இலையின் விலை குறைந்தபட்ச நிர்ணய விலையாக ரூ 1.5 ரூபாய் என வைத்துக் கொண்டால், வருடத்திற்கு இலையில் மட்டும், 2,25,000 இலட்சம் சம்பாதிக்க முடியும். இங்கு இலை அறுக்கும் நாள், நாள் ஒன்றுக்கும் அறுக்கப்படும் இலை, விலை எல்லாமே சராசரியாக தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை நாட்களில் ஒரு இலையில் விலை 5 ரூபாய், 10 ரூபாய் கூட செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, சராசரியாக கழிவு, விலை நிர்ணயம் எல்லாம் கணக்கிலிட்டு பார்க்கும் போது ஒரு வருடத்திற்கு 2,25,000 இலையில் சம்பாதிக்க முடியும்.
பொதுவாக ஒரு கார்பரேட் நிறுவனம் ஏதாவது ஒரு துறையில் வளர்ச்சியைக் கண்டு விட்டால், அதில் வரும் இலாபத்தை தொடர்ந்து பல துறைகளில் முதலீடு செய்யும். அவ்வாறாக இன்று பல கார்பரேட் நிறுவனங்கள், மக்களின் அத்தியாவசிய மார்க்கெட்டுகளிலும் நுழைந்து, மொத்த கடைகளுக்கும், சில்லறை கடைகளுக்கும் ஆட்டம் காட்டி வருகின்றன. பொதுவாக மொத்த கடைகள் என்பவை சில்லறை கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும், சில்லறை கடைகள் அந்த பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும். ஆனால் தற்போது அத்தியாவசிய மார்க்கெட்டுகளுக்குள் நுழைந்து இருக்கும் கார்பரேட் நிறுவனங்கள், சில்லறை கடைகளுக்கும் மொத்த விலைக்கு பொருள்களை கொடுக்கிறது, அதே சமயத்தில் சில்லறை கடைகளில் வாங்கி கொண்டு இருந்த மக்களுக்கும் சில்லறை கடைகள் கொடுக்கின்ற விலையை விட கம்மியாக கொடுக்கிறது.
Lotus Chocolate Share Price -வர்த்தகர்கள் பெரிதாக கவனம் செலுத்தாத லோட்டஸ் சாக்லேட் என்ற நிறுவனம், வெறும் 9 நாட்களில் 52% வருமானத்தை அள்ளியுள்ளது. இந்த சாதனை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான லோட்டஸ் சாக்லேட் மூலம் அடையப்பட்டுள்ளது.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 2023 இல் லோட்டஸ் சாக்லேட்டை வாங்கியதிலிருந்து, இந்த நிறுவனம் பிரிடானியா, நேஸ்லே போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடத் தொடங்கியது. 1989ல் நிறுவப்பட்ட லோட்டஸ் சாக்லேட், 2023ல் அம்பானியின் கீழ் துவங்கிய பயணத்தால் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
Inspiring Business Stories -ஆண்டு ரூ.8 கோடி சம்பளத்துடன் வங்கி வேலையில் இருந்த ஒரு இளம் பெண், தனது சொந்த முயற்சியால் அதற்கு பல மடங்கு சம்பாதித்து வருகிறார். சிந்தனையும் புத்திசாலித்தனமும் இருந்தால் முடியாததை சாத்தியமாக்கலாம் என்பதை நிஷா ஷா என்ற பெண் நிரூபித்துள்ளார்.லண்டனில் இருந்த கிரெடிட் அக்ரிகோல் வங்கியில் இணை இயக்குநராக 2,56,000 டொலர் (சுமார் ரூ.7.8 கோடி) சம்பளத்துடன் நிஷா 9 வருடங்கள் பணியாற்றினார். ஆனால், அந்த வேலையால் திருப்தி கிடைக்கவில்லை. பிறருக்கு உதவியும், சவாலான மற்றும் அறிவுப்பூர்வமான வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவர், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.
Success Story In Tamil -80 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தவர் லலித் கைதான், Radico Khaitan மதுபான நிறுவனத்தின் தலைவர். அவரின் மகன் அபிஷேக் கைதான், மூன்றாம் தலைமுறை தொழிலதிபர், தற்போது இந்த நிறுவனத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.கோடீஸ்வரர் லலித் கைதான் 80 வயதில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த லலித் கைதான், ஜூலை 8ம் தேதி வெளியான தரவுகள் படி, தற்போது ரூ. 9,180 கோடி மதிப்பிலான சொத்து வைத்துள்ளார். Radico Khaitan நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 21,923 கோடி ஆக உயர்ந்துள்ளது.பிரபலமான மது பிராண்டுகள் அபிஷேக் கைதான் பொறுப்பேற்ற பிறகு, 8 PM விஸ்கி, மேஜிக் மொமென்ட்ஸ் ஓட்கா, கான்டெசா ரம் உள்ளிட்ட பிராண்டுகள் மது விரும்பிகளிடம் பிரபலமடைந்தன. இந்த மது வகைகள் Radico Khaitan நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின.
Allcargo Latest News -கர்நாடகாவின் சிறந்த தொழில்முனைவோரில் ஒருவரான சஷி கிரண் ஷெட்டி, தனது கடின உழைப்பு மற்றும் உறுதியால் உலகளாவிய வளர்ச்சியடைந்த ஒரு நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார்.மேலும், இவருடைய இளம் வயதிலேயே, வெறும் ரூ.25,000 முதலீட்டுடன் தனது பயணத்தை தொடங்கிய ஷெட்டி, இப்போது ஆல் கார்கோ குழுமம் (Allcargo Group) மூலம் சர்வதேச அளவில் முன்னணி சரக்கு ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அதன் மதிப்பு சுமார் ரூ.7000 கோடி ஆகும்.
Reliance Industries News Today -ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கிய அதிகாரியான மனோஜ் மோடியின் மகள் பக்தி மோடி, சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெய்ல் பிரிவு தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ளார். ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவை முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி வழிநடத்தி வருகிறார். டைரா (Tira) என்ற அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தை ஈஷா 2023ல் அறிமுகப்படுத்தியதும், அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் பக்தி.பக்தி மோடி, ஈஷா அம்பானியுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதோடு, ரிலையன்ஸ் ரீடெய்லில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றார். 2023ல் டைரா தளத்தின் முக்கிய அதிகாரியாக செயல்பட்ட அவர், தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Apollo Hospital Owner Upasana -உபாசனா காமினேனி கொனிடேலா, அப்பல்லோ மருத்துவமனை குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை தொழிலதிபராக திகழ்கிறார். அப்பல்லோ மருத்துவமனைகளை நிறுவிய கோடீஸ்வரர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான அவர், CSR அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு, சமூக நலத்திற்கும் மருத்துவத் துறைக்கும் பெரும் பங்களிப்பை செய்து வருகிறார்.
Nita Ambani Net Worth -கோடீஸ்வரர்களின் வரிசையில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, அவரது தனிப்பட்ட சாதனைகளால் இந்தியாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். 1964 ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த நீதா, வணிகவியல் பட்டதாரி ஆக இருந்ததோடு, ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞராவார். அவர் தனது பணிக்குழந்தையை ஆசிரியராகத் தொடங்கியதுடன், 2010 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் அறக்கட்டளையை நிறுவினார். இந்நிறுவனம் மூலம் இந்தியாவில் கல்வி, விளையாட்டு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
Alia Bhatt Clothing Brand -ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL), நடிகை ஆலியா பட் உருவாக்கிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு ஆடை பிராண்டான எட்-ஏ-மம்மா வில் 51% பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடபட்டது. அமேசான், எட்-ஏ-மம்மா 2020 ஆம் ஆண்டு ஆலியா பட் தொடங்கிய பிராண்டாகும்.மேலும், இது 2 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கான ஆடைகளை விற்கிறது. ஆன்லைனில் துவங்கிய இந்த பிராண்டு, தளபாடங்கள், குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள், மற்றும் மகப்பேறு உடைகள் உள்ளிட்ட பல வகைகளிலும் விரிவாக்கம் கண்டுள்ளது.
Navya Naveli Nanda Net Worth -பாலிவுட் துறையைச் சேர்ந்த பிரபலமான பச்சன் குடும்பத்தைச் சேர்ந்த நவ்யா நவேலி நந்தா, 21 வயதில் தொழில் துறையில் களமிறங்கி, தந்தை நிகில் நந்தாவின் பாதையில் நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் பேத்தியான நவ்யா, திரைப்படத்துறையை விட்டு விலகி, தனது குடும்ப தொழிலான Escorts Kubota நிறுவனத்தில் பணியாற்றி கொண்டுள்ளார்.இந்நிலையில், 7014 கோடி மதிப்பிலான இந்த நிறுவனத்தில் நவ்யா 0.02% பங்குகளை கொண்டுள்ளார்.மேலும், நிகில் நந்தாவுக்கு 36.59% பங்குகள் உள்ளன.
The Man Company Brand Ambassador -பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா புதிய வணிகங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அதில், அவர் தி மேன் கம்பெனி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து 400 சதவீதம் வரை லாபம் கண்டுள்ளார் தெரிய வந்துள்ளது.தி மேன் கம்பெனி என்பது ஆண்களுக்கான ஒரு பிரீமியம் பிராண்ட் ஆகும். ஆண்களுக்கான உடல் சீவனப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், தலைமுடி பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறது. இமானி லிமிடெட் நிறுவனம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தி மேன் கம்பெனியை வாங்கியுள்ளது.இதன் மூலம் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு அவருடைய முதலீட்டில் சுமார் 400 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ஆயுஷ்மான் குரானாவுக்கு நடிப்பு மட்டுமல்லாமல், புதிய தொழில்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் உள்ளது. அந்த வகையில், 2018ஆம் ஆண்டில் அவர் தி மேன் கம்பெனி நிறுவனத்தில் முதலீடு செய்தார். குறிப்பாக, இந்தியாவில் ஆண்களுக்கான பிரீமியம் வகை அழகு சாதனப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் தி மேன் கம்பெனி உருவானது.
தென் ஆப்பிரிக்கா, தான் எலான் மஸ்க்கின் பூர்விகம், தந்தை பொறியாளர், ஆகினும் கூட, அவர் ஒரு மிகப்பெரிய குடிகாரர், இதன் காரணமாகவே எலான் மஸ்க் சிறு வயதில் இருக்கும் போதே அவரின் தாயும் தந்தையும் பிரிந்து விடுகின்றனர்.மேலும், எப்படியோ பல இன்னல்களுக்கு மத்தியில் பள்ளிப்படிப்பை முடித்த எலான் மஸ்க், தன்னுடைய மேல் படிப்பை கனடாவில் முடிக்கிறார்.சிறு வயதில் இருந்தே வீடியோ கேமில் ஆர்வம் மிக்கவர், அவர் முதன் முதலில் கோடிங் எழுதி அவரே படைத்த ’பிளாஸ்டர்ஸ்’ என்னும் வீடியோ கேம், அன்றைய காலக்கட்டத்தில் மார்க்கெட் விற்பனையில் 475 டாலரை அவருக்கு பெற்று தந்தது. அது தான் அவர் அவருடைய திறமையால், திறனால் ஈட்டிய முதல் சம்பளம். அதற்கு பின் படிப்படியாக உயர்ந்த எலான் மஸ்க் என்னும் சிகரம், PayPal, Zip 2, Solar City, Open AI, Space X, Tesla, Neura Link, Twitter என்று அனைத்து துறையிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்தார்.
Best Business Ideas In Tamil -மகாராஷ்டிராவில் அகமது நகரைச் சேர்ந்த ஸ்ரத்தா தவான் என்ற சிறுமி, தனது 10ஆம் வகுப்பு விடுமுறையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தியதால்,இன்று ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.ஸ்ரத்தாவின் தந்தை எருமை மாடுகளை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தார். வீட்டில் எப்போதும் எருமை மாடுகள் இருக்கும் சூழலில், பத்தாம் வகுப்பு விடுமுறையில் தந்தைக்கு உதவி செய்யச் சென்ற ஸ்ரத்தா, எருமை மாடுகளை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் அதனின் விலையை நிர்ணயிப்பது போன்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டார். இதன் மூலம், பள்ளி படிப்பை தொடர்ந்துகொண்டே பால் விற்பனையைத் துவங்கினார்.இவர் விடியற்காலையிலேயே 4 மணிக்கு எழுந்து பால் கறந்து, விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு, 8 மணிக்கு கல்லூரிக்கு செல்வார். மாலையில் மாடுகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்.