World's Richest Person -ஜெஃப் பெசோஸ்சை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாம் நிலை பணக்காரர் ஆகி இருக்கிறார் ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எல்லிசன்!
அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ்சை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாம் நிலை பணக்காரராக உருவெடுத்து இருக்கிறார் ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் லேரி எல்லிசன்.
பிரபல தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய உலகின் முதன்மையான பணக்காரர் யார் என்பதற்கான கருத்துக் கணிப்பில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் 251 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதல் இடத்தில் நிலைக்கிறார்.
கடந்த 2016 முதல், உலகின் இரண்டாம் நிலை பணக்காரராக தொடர்ந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்சை பின்னுக்கு தள்ளி, 206 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எல்லிசன்
203 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன் ஜெஃப் பெசோஸ் மூன்றாம் இட்த்தை பிடித்து இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் முழுக்க முழுக்க களம் இறங்கி இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்திற்கும், அமேசான் நிறுவனத்திற்கும் இடையிலான போட்டி என்பது அடுத்தடுத்த காலக்கட்டங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் தொடர்ந்து உலகின் முதல் நிலை பணக்காரராக நீடித்து வகிக்கிறார். தொடர்ந்து தனது நிறுவனத்தின் நிகர மதிப்பை உயர்த்திக் கொண்டே செல்லும் எலான் மஸ்க், இப்போட்டியில் வீழ வேண்டுமானால் அது அவரே அவரை வீழ்த்திக் கொண்டால் தான் சாத்தியம் போல