Today Palani News In Tamil -கோவில் உண்டியலை திறந்ததில் இரண்டு நாளில் மட்டும் ரூ.5 கோடியே 64 லட்சம், 1.6 கிலோ தங்கமும், 28 கிலோ வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Today Palani News In Tamil -பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களின் காணிக்கைகளால் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி ஆகியவை பெரிதும் சேர்க்கப்படுகிறது.இந்நிலையில்,கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவில் உண்டியல் காணிக்கையில் ரூ.5 கோடி 64 லட்சம், 1,612 கிராம் தங்கம் மற்றும் 28,249 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான பழனி முருகன் கோவில், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களை ஈர்க்கிறது.மேலும்,சிறப்பு நாட்களிலும், பொதுவான நேரங்களிலும் அதிகளவிலான பக்தர்கள் பக்தி ஆர்வத்துடன் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
அண்மையில் ஆன்மீக மாநாடு நடைபெற்ற நிலையில், பக்தர்கள் பெரும் அளவில் காணிக்கைகள் செலுத்தியள்ளனர்.அதனால், உண்டியல் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் அவர்கள் கணக்கீடு செய்து, பெறப்பட்ட பணம் மற்றும் உண்டியல் பொருட்களை பதிவு செய்தது. முதலில் ரூ.3 கோடி 32 லட்சம் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து கணக்கீடு செய்யப்பட்டு, கூடுதலாக ரூ.2 கோடி 32 லட்சம் கிடைத்துள்ளது.
இந்த கணக்கீட்டில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். ஒட்டுமொத்தமாக, கோவிலுக்கு ரூ.5 கோடி 64 லட்சம், 1,612 கிராம் தங்கம், 28,249 கிராம் வெள்ளி மற்றும் பல வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.