• India
```

யமஹா R15M, MT-15 பைக் பிரியர்களுக்கு..வெளியான அட்டகாசமான புதிய அப்டேட்!

Yamaha R15 New Model Bike | Yamaha New Upcoming Bikes

Yamaha R15 New Model Bike -யமஹா, தனது புதிய மோட்டோஜிபி எடிஷன்களை வெளியிட்டு, R15M மற்றும் MT-15 பைக்குகளின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பைக்குகளும் முன்பு அறிமுகமான காஸ்மெடிக்கல் அப்டேட்களை அடிப்படையாகக் கொண்டு, மான்ஸ்டர் எனர்ஜி டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை யாவும் மெக்கானிக்கலாக மாற்றங்கள் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.

Yamaha R15 New Model Bike -யமஹா தனது பிரபலமான R15M மற்றும் MT-15 பைக்குகளின் மோட்டோஜிபி எடிஷனை, சற்று அதிகமான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 

முந்தைய வாரம், யமஹா தனது R15M மாடலை கார்பன் ஃபைபர் கிராஃபிக்ஸுடன் மேம்படுத்தியது. தற்போது, R15M மற்றும் MT-15 பைக்குகளின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்களில் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை, ஆனால் காஸ்மெடிக்கலாக சில புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.


மேலும், மோட்டோஜிபி பைக்குகளின் டிசைன் அடிப்படையிலான லைவரிகள், பைக்கின் டேங்க் ஷ்ரௌடுகள், ஃப்யூல் டேங்க், சைடு பேனல்களில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், மான்ஸ்டர் எனர்ஜி லோகோவும் இடம்பெற்றுள்ளது. 


இரு மாடல்களும் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜினுடன் 18.4hp பவர் மற்றும் 14.2Nm டார்க்கை வழங்குகின்றன. R15M-ல் க்விக்ஷிப்டர் வசதி கொடுக்கப்பட்ட நிலையில், MT-15-ல் அது இல்லை. இரு பைக்குகளிலும் USD ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக், மற்றும் டூயல் சேனல் ABS உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் விலைகள், யமஹா R15M மோட்டோஜிபி எடிஷன்: ரூ.1,98,900 (எக்ஸ்-ஷோரூம்), யமஹா MT-15 மோட்டோஜிபி எடிஷன்: ரூ.1,73,400 (எக்ஸ்-ஷோரூம்)