• India
```

தொழிலாளர்களை குறி வைக்கும் EV ஸ்கூட்டர்..இதன் விலை என்ன தெரியுமா?

EV Scooter Price In India | Best EV Scooters In India 2024

By admin

Published on:  2024-08-10 11:55:38  |    229

EV Scooter Price In India -ரிவேர் இண்டி CEO அரவிந்த் மணி நிறைய மக்கள் சொந்தத் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பயன்படும் வகையிலும், நிறைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையிலும் EV ஸ்கூட்டர் தயாரித்துள்ளோம்.

EV Scooter Price In India -தொழிலார்களை குறி வைக்கும் EV  ஸ்கூட்டர். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் வளம் வந்த நிலையில், இப்பொழுது சென்னையிலும் வரவிருக்கிறது. சென்னையில் புதிதாக அறிமுகம் ஆகும், SUV ஸ்கூட்டர் ஷோரூம்  திறப்பு விழாவிற்கு ரிவேர் இண்டி CEO அரவிந்த் மணி வருகைபுரிந்துள்ளார்.

அப்போது, அவர் கூறுகையில், நிறைய மக்கள் சொந்தத்  தொழில் செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பயன்படும் வகையிலும், நிறைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையிலும் தயாரித்துள்ளோம்.  நிறைய மக்கள் அவர்கள் செய்யும் தொழில்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அவர்களுடடைய இருசக்கர வாகனங்களை தான் சார்ந்து உள்ளார்கள். அவர்களுடைய பொருட்களை எளிமையாக எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் வகையில், இந்த வாகனத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும், 14 இன்ச் சக்கரங்களை கொண்ட முதல் EV ஸ்கூட்டர் இது தான், 4Kwh பேட்டரி பாக் 120 km true range ஆகும். இதன் விலை ரூ.1,39,000 என்றும் தெரிவித்துள்ளார். 

பிறகு அவர் கூறுகையில், மார்ச் 2026 க்குள் எங்களுடைய டார்கெட் 100 கடைகள் திறக்க போகிறோம். திறந்த உடன் இரண்டாவது தயாரிப்பை  ஐ அறிமுகப்படுத்த போகிறோம் என்று கூறினார்.