Jio Recharge Plans New Update -முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ,பார்தி ஏர்டெல் நிறுவனத்தை கடுமையாகத் தாக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து,முழு டெலிகாம் சந்தையையும் அதிர்ச்சி படுத்தியுள்ளது
Jio Recharge Plans New Update -முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபகாலத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகப்படுத்திருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.அதனால் ஜியோ நிறுவனம் மீண்டும் அதிரடி ஆபருடன் களமிறங்கி இருக்கிறது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆபர்கள் மற்றும் சலுகைகள் மூலம் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களை மேலும் திருப்திப்படுத்தி வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ,பார்தி ஏர்டெல் நிறுவனத்தை கடுமையாகத் தாக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து,முழு டெலிகாம் சந்தையையும் அதிர்ச்சி படுத்தியுள்ளது.ஏர்டெல்லில் ரூ.379 மதிப்பில் கிடைக்கும் 5ஜி சலுகை,கட்டண உயர்வுக்குப் பிறகு, தற்போது ஜியோவில் வெறும் ரூ.198 மதிப்பில் அதே 5ஜி சலுகை கிடைக்கிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்களும் நாடு முழுவதும் 5ஜி சேவையை தொடங்கி,அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக கொடுக்கின்றன.இதனால்,5ஜி வேகத்தில் உள்ள டேட்டா திட்டங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.ஆனால்,டெலிகாம் கட்டண உயர்வுக்கு பிறகு, 5ஜி டேட்டாவை ரீசார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ரூ.349 செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்ததை அடுத்து,
மேலும்,ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.379 திட்டத்தையும், ஜியோவில் ரூ.349 திட்டத்தையும் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைத்து வந்தது. ஆனால் தற்போது, ஜியோ,ரூ.198 மதிப்பில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி,ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களை கடுமையாகப் போட்டியாளராக மாற்றி இருக்கிறது.
ஜியோ வில் இருந்து BSNL க்கு மாறிய வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அளிக்க வைத்திருக்கிறது.மேலும்,ஏர்டெல் ரூ 379 மற்றும் ஜியோ ரூ.198 திட்டங்ககளை ஒப்பிடும் பொழுது சில மாற்றங்கள் இருக்கின்றன.ஜியோ,இந்த மலிவான திட்டங்கள் மூலம் 5ஜி சேவைக்கு மக்களை வேகமாக மாற்றி வருகிறது.இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்குவதில் ஜியோ முன்னிலையில் இருக்கிறது.இது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.