• India
```

பயன்படுத்தி தூக்கி எறிய அவங்க என்ன பாலீத்தீனா..பிரபல நிறுவனத்தின் வேலை நீக்க முடிவை..வெளுத்து வாங்கிய ஸ்ரீதர் வேம்பு..!

Zoho Founder Slams Freshworks For LayOffs Decison

By Ramesh

Published on:  2024-11-09 02:42:44  |    216

Zoho Founder Slams Freshworks For LayOffs Decison - சென்னையை மையமாக கொண்டு இயங்கும் Freshworks நிறுவனம் சமீபத்தில் தங்கள் நிறுவனத்தில் 13 சதவிகித ஊழியர்களை, அதாவது கிட்டதட்ட 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது, நிறுவனத்தின் இந்த முடிவு, பல வருடங்களாக Freshworks நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது பணிபுரிந்து வந்த ஊழியர்கள் பலரையும் வெகுவாக பாதித்தது. 

Freshworks நிறுவனத்தின் இந்த பணி நீக்க முடிவு குறித்து பலரும் இணையங்களில் விமர்சித்து வந்த நிலையில், சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் தனது கண்டனங்களை கடுமையாக தெரிவித்து இருக்கிறார், Freshworks நடப்பு ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 22 சதவிகிதம் இலாபத்தில் இயங்கி வருகிறது, கிட்டதட்ட 1 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்பை கொண்டு இருக்கிறது, 



இந்த மதிப்புகள் அனைத்தும் அவர்களோடு ஒன்றிணைந்து பணிபுரிந்த இந்த ஊழியர்களால் வந்தது தான், பொதுவாக இந்த அமெரிக்க நிறுவனங்கள் தான் இலாப நோக்கத்திற்காக ஊழியர்களை பணியை விட்டு நீக்கும், அது இந்தியாவிலும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது, பங்குச்சந்தை போன்ற குறுகிய கால இலாபத்திற்காக ஊழியர்கள் என்னும் பொக்கிஷத்தை இழக்காதீர்கள்,

சோஹோவை பொறுத்தவரை என்றுமே ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தான் முதலிடம் பங்குதாரர்கள் எல்லாம் அப்புறம் தான், பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய அவர்கள் ஒன்றும் பாலீத்தீன்கள் அல்ல, விசுவாசமான ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பங்குதாரர்களுக்கு கொடுப்பவர்கள் அதிகமாய் நிலைக்க முடியாது, என ஸ்ரீதர் வேம்பு கடுமையாக கண்டித்து இருக்கிறார்.