Telegram News Today- டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Telegram News Today- வாட்சப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலியை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவிலும் டெலிகிராம் செயலிக்கு பெரிய அளவில் விருப்பம் கொண்ட பயனர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த டெலிகிராம் செயலியை தற்போது வரை சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பிரான்சின் பாரீஸ் நகரத்திற்கு வெளியே உள்ள போர்ஜெட் விமான நிலையத்தில், டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சில் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களில் டெலிகிராம் அப்ளிகேஷன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் இத்தகைய செயல்களில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது, அச்சாட்டுகளின் பேரில் அவருக்கு அர்ரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாவெல் துரோவின் கைது குறித்து எந்த கருத்தும் வெளியிடவில்லை. ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சகம் இந்த சூழ்நிலையை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மேற்கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) அவரது விடுதலையை கோருவார்களா என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் டெலிகிராம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பான முக்கிய தகவல் மூலமாகவும் இருந்து வருகிறது. சிலர் டெலிகிராம் செயலியை "போருக்கான ஒரு விர்ச்சுவல் போர்க்களம்" என்று அழைக்கின்றனர். மேலும், ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, துரோவின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.டெலிகிராம் செயலியின் மூலம் நடந்த பல மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக, டெலிகிராம் நிறுவனத்தின் நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.