• India
```

-ஆசிய கண்டத்தில்..யாரு அந்த முதல் 7 பெரிய கோடீஸ்வரர்கள்..!சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா!?

Top Richest people | Richest People In Asia

Top Richest people -7 முன்னணி பணக்காரர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்புகளை பற்றி கீழ் வருமாறு பார்க்கலாம்.

Top Richest people -உலக பொருளாதாரம் நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருப்பதால்,ஆசியா கண்டம் செல்வத்தை உருவாக்குவதற்கான முக்கிய மையமாக மாறியுள்ளது. உலகின் பிற கண்டங்களை ஒப்பிடுகையில், ஆசியாவில்தான் அதிகளவில் செல்வந்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இவர்கள் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

முதல் இடத்தில் முகேஷ் அம்பானி: இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார்,ரூ.115.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதல் இடத்தில் இருக்கிறார்.கடந்த பத்து ஆண்டுகளாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

இரண்டாம் இடத்தில் கௌதம் அதானி:

  

இந்தியாவின் அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக கௌதம் அதானி இருந்து வருகிறார், ரூ.86 பில்லியன் சொத்து மதிப்புடன் ஆசிய கண்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்துள்ளார். 1988 இல் வர்த்தக நிறுவனமாகத் தொடங்கிய இவர், தற்போது ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மூன்றாம் இடத்தில் பிரஜோகோ பங்கேஸ்து:


இந்தோனேசியாவின் ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் அதிபரான பிரஜோகோ பங்கேஸ்து இருக்கிறார், ரூ.68 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் தனது தொழில் வாழ்க்கையை மர வணிகத்தில் தொடங்கியிருந்தாலும், இன்று PT Barito Pacific நிறுவனம் பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக் உற்பத்தி, சுரங்கம், மற்றும் வெப்ப ஆற்றல் போன்ற துறைகளில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

நான்காவது இடத்தில் ஜாங் ஷான்ஷன்:


Nongfu Spring என்னும் பாட்டில் தண்ணீர் நிறுவனத்தின் தலைவராக ஜாங் ஷான்ஷன் இருக்கிறார்,ரூ.49.9 பில்லியன் சொத்து மதிப்புடன் இவர் ஆசிய கண்டத்தில் 4-வது இடத்தில் உள்ளார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.62.3 பில்லியன் சொத்துகளுடன் சீனாவின் பணக்காரராக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஐந்தாவது இடத்தில் கொலின் ஜெங் ஹுவாங்:


PDD ஹோல்டிங்ஸ் எனும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் மூலம் செல்வந்தரான கொலின் ஜெங் ஹுவாங், உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.49.9 பில்லியன். சில ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து விலகிய போதிலும், ஹுவாங் இ-காமர்ஸ் நிறுவனத்தில் 28% பங்குகளை வைத்துள்ளார்.

ஆறாவது இடத்தில் தடாஷி யானாய்:

  

ஃபாஸ்ட் ரீடெய்லிங் நிறுவனத்தின் நிறுவனராக தடாஷி யானாய் இருந்து வருகிறார்,மேலும்,யுனிக்லோ, தியரி மற்றும் ஜே பிராண்ட் போன்ற பிராண்டுகளை மேற்பார்வையிடுகிறார்.இவருடைய சொத்து மதிப்பு ரூ.45.6 பில்லியன் ஆகும்.இவர் சுமார் 25 நாடுகளில் 2,400-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறார்.

ஏழாவது இடத்தில் ஜாங் யிமிங்:


பைட் டான்ஸ் நிறுவனத்தின் நிறுவனராக ஜாங் யிமிங் உள்ளார்.மேலும், இவர் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட டிக்டோக் செயலியின் உருவாக்கத்தில் பிரபலமானவர். இவருடைய சொத்து மதிப்பு ரூ.43.4 பில்லியன் ஆகும். அமெரிக்காவில் சாத்தியமான தடைகள் காரணமாக சவால்களை எதிர்கொண்டாலும், பைட் டான்ஸ் செய்தி, கல்வி, மற்றும் கேமிங் போன்ற துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.சமீபத்தில் அமெரிக்கா டிக்டோக்கை தடை செய்ய ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2