• India
```

பில்கேட்ஸ் ஒரு அமெரிக்காவின் ரத்தன் டாடா...ஏன் தெரியுமா...?

Bill Gates The American Version Of Ratan Tata

By Ramesh

Published on:  2024-11-20 02:12:41  |    346

Bill Gates: The American Version Of Ratan Tata - பொதுவாக நமக்கு எல்லாம் பள்ளி காலக்கட்டத்தில் உலகின் முதன் நிலை பணக்காரர் யார் என்று நம்மிடம் கேட்டால்,  பில்கேட்ஸ் என்று தான் சொல்வோம், அந்த காலக்கட்டத்தில் அவர் தனியாக ஒரு ராஜ்ஜியம் செய்து கொண்டு இருந்தார், உலகின் முதன் நிலை பணக்காரராக வலம் வந்த பில்கேட்ஸ்சுக்கு அன்று போட்டி என்று யாருமே இல்லை, அவரை எதிர்க்கவும் எந்த நிறுவனமும் இல்லை.

ரத்தன் டாடா உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறாததற்கும், மைக்ரோசாப்ட் பில்கேட் உலகின் முதல் நிலை பணக்காரர்கள் வரிசையில் இருந்து இறங்கியதற்கும் இரண்டே காரணங்கள் தான், இரண்டு பேருக்கும் பணத்திலும், அந்த உலகின் நம்பர் 1 என்ற போதையிலும் அதிக நாட்டம் இல்லை, அவர்கள் இந்த உலகிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டு இருந்தனர்.



பில்கேட்ஸ் மைக்ரோசாப்டின் பொறுப்புகளில் இருந்து விலகியதற்கும் இது தான் காரணம் என்று கூறப்படுகிறது, பொதுவாக பில்கேட்ஸ்சுக்கு இந்த உலகிற்கும், இந்த இயற்கைக்கும், இங்கு வாழும் மனிதர்களுக்கு,அவர்களின் கல்விக்கும் எதையாவது செய்ய வேண்டும் என தோன்றி கொண்டே இருக்குமாம், அந்த தோன்றல் தான் பில்கேட்ஸ்சுக்கு பணத்தின் மேல் நாட்டம் இல்லாமல் போனதற்கு காரணம்.

உலகிலேயே அதிக Donation-கள் கொடுத்த வரிசையில் ரத்தன் டாடா முதல் இடத்தில் இருக்கிறார் என்றால் அந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் இருக்கிறார், ரத்தன் டாடா 102.4 பில்லியன் டாலர் Donate செய்து இருக்கிறார் என்றால், பில்கேட்ஸ் கிட்டதட்ட இந்திய மதிப்பில் 79 பில்லியன் டாலர் Donate செய்து இருக்கிறார். அதனால் தான் பில்கேட்ஸ் ஒரு அமெரிக்க ரத்தன் டாடாவாக அறியப்படுகிறார்.