HCL Technologies News | HCL Tech Latest News Today Live அன்று 1 இலட்சம் முதலீடு செய்து கால்குலேட்டர் தயாரிப்பில் ஆரம்பித்த ஒரு நிறுவனம், இன்று 3 இலட்சம் கோடிகளுக்கு சொந்தமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அந்த நிறுவனம் என்ன? அந்த நிறுவனத்தின் நிறுவனர் யார் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1976, ஒரு சில நண்பர்கள் யோசிக்கிறார்கள், ஒரு கம்ப்யூட்டர் தயாரிக்கும் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாமே என்று, கையில் இருந்ததோ ஒரு இலட்சம். அனைத்தையும் முதலீடாக போட்டு மைக்ரோகம்ப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள், கையில் இருக்கும் முதலீட்டில் முதலில் கால்குலேட்டர்கள் தயாரித்து வெளியிடுகின்றனர். பின்னர் அதில் கொஞ்சம் இலாபம் கிட்டவே, ஒரு சில வருடங்களில் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரித்து வெளியிடுகின்றனர். ஆரம்பத்தில் ஹார்டுவேர் கம்பெனியாக தான் ஆரம்பித்த இந்த நிறுவனம் பின்னர் மென்பொருள் பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதற்கு பின்னர் அடைந்த அசுர வளர்ச்சி, அனைவரின் உழைப்பு, அனைவரின் முயற்சி, அனைவரின் அசாத்திய திறமை என இவை அனைத்தும் இன்று HCL Tech என்ற உலகளாவிய முன்னனி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறது. ஷிவ் நாடார் என்ற உலகின் முன்னனி நிறுவனரும் உருவாகி இருக்கிறார்.
ஒரு இலட்சத்தை மூன்று இலட்சம் கோடிகளாக ஒருவர் மாற்றி இருக்கிறார் என்றால் அதற்கிடையில் எவ்வளவு யோசிப்பும், எவ்வளவு திறனும், எவ்வளவு உழைப்பும், ஒரு நிறுவனத்தை நோக்கி இருந்து இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இன்று டைம்ஸ் பத்திரிக்கையில் உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் HCL Tech நிறுவனமும் இடம் பெற்று இருக்கிறது. உலகில் மிகச்சிறந்த 1000 நிறுவனங்களுள், 112 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது HCL, பெரும்பாலும் ஒரு உலகளாவிய கம்பெனிகள் தான் பல இந்திய நிறுவனங்களை ஆட்கொண்டு பாத்திருப்போம், ஆனால் HCL நிறுவனம் பல வெளிநாட்டு போட்டி நிறுவனங்களை எல்லாம் ஆட்கொண்டு தன்வசப்படுத்தி இருக்கிறது. அதில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களும் அடக்கம்.
“ சமீபத்தில் கூட ஒரு பெங்களுரு நிறுவனம் கூறி இருந்தது, தென் தமிழகத்தில் இருந்து வரும் ஊழியர்களுக்கு எல்லாம் பெரிதாக எந்த டெக் அறிவும் இல்லை என்று, ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை, இன்று உலகின் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வரும் HCL Tech நிறுவனத்தின் நிறுவனர் ஆன, ஷிவ் நாடார், தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் என்று