• India
```

ரிசர்வ் வங்கியால் அதிக பணத்தை அச்சிட்டு வறுமையை ஒழித்து விட முடியுமா?

RBI Money And Government | RBI Latest News

By Dharani S

Published on:  2024-09-27 13:02:40  |    294

RBI Money And Government-பொதுவாகவே அனைவருக்கும் சாதாரணமாக எழுகின்ற ஒரு கேள்வி, ‘ஏன் ரிசர்வ் வங்கி பணத்தை அதிகமாக அடித்து, நாட்டில் வறுமை ஒழித்து விட வேண்டியது தானே?’ என்று, ஏன் அப்படி செய்ய கூடாது, ஏன் ரிசர்வ் வங்கி அப்படி செய்யவில்லை என்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

சரி, ரிசர்வ் வங்கி வறுமையை ஒழிக்க அதிக பணம் அச்சிட்டால் என்ன ஆகும்?

ரிசர்வ் வங்கி வறுமையை ஒழிக்க அதிக பணம் அச்சிடுகிறது என வைத்துக் கொள்வோம், நாட்டில் பண புழக்கம் என்பது அதிகம் ஆகும், ஒருவர் தேவையான பொருள் ஒன்று என்றால் கூட பணம் கையில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அந்த பொருளை 10 வாங்குவார். இதனால் சந்தையில் தேவை என்பது பன்மடங்கு அதிகரிக்கும். பொதுவாக சந்தையில் தக்காளி அதிகம் கிடைக்கிறது என்றால் விலை 20 ரூபாய் தான் விற்பார்கள், அதுவே தக்காளியின் தேவை அதிகரித்து, சந்தையில் அது குறைவாக இருக்கும் விலை 100 ரூபாயாக வந்து நிற்கும். இது தான் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் ஒரு நாட்டில் நிகழும்.



அதாவது ஒரு பொருள் சாதாரணமாக வருடத்திற்கு 5 முதல் 10 சதவிகிதம் விலை உயருகிறது என வைத்துக் கொள்வோம். இதுவே பணப்புழக்கம் அதிகமாகி, தேவை உயரும் போது அப்பொருளின் விலை வருடத்திற்கு 100 முதல் 500 சதவிகிதம் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதாக இல்லை. இதனால் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பத்து சதவிகிதம் பேரிடம் மட்டும் பணம் அதிகமாக போய் சேரும். எளியவர்களிடம் பணமே இல்லாமல் போகும். எளியவர்கள் நாட்டில் எதையும் வாங்க முடியாத அளவிற்கு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து நிற்கும்.

அரசு மதிப்பு இழக்கும், பணத்தின் மதிப்பு வெகுவாக சரியும், எளியவர்கள் இன்னும் எளியவர்களாக ஆகிக் கொண்டே செல்வார்கள், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே செல்வார்கள். ஒரு கட்டத்திற்கு பின்னர், நாட்டில் பணமும் தேவையும் மட்டுமே இருக்கும். வேறு எதுவும் இல்லாமல் போய் விடும். அத்தியாவசியங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத அளவிற்கான விலைக்கு சென்று விடும், நாடு சமநிலையற்றதாக ஆகி விடும். மக்கள் அத்தியாவசியங்களுக்காக அடித்துக் கொள்ளும் நிலை கூட ஏற்படும்.


 ஒரு நாட்டில் இருக்கும் ஒரு சிலரின் ஏழ்மைக்கு காரணம் என்பது பணம் தான் என்பது மட்டும் அல்ல, அவர்களுக்கு கிடைக்காத சிறந்த கல்வி, அவர்களுக்கு கிடைக்காத சிறந்த வேலையினால் கூட இருக்கலாம், ஆதலால் பணத்தை அச்சிட்டால் அனைத்தும் சரி ஆகி விடாது. பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும், பணம் என்பது மாற்று வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்படும் ஒரு தாள் அவ்வளது தான்