Secret To Grow Your Business - பொதுவாகவே பலருக்கும் இருக்கும் பிரச்சினை தான், அங்கும் இங்கும் கடனை வாங்கி விட்டு தனக்கு பிடித்த தொழிலை பிரம்மாண்டமாக துவங்கி விட்டு பெரிதாக நிறுவனத்தாக் இலாபம் இல்லை, இலாபம் வந்தாலும் கூட நிறுவனத்தில் முன்னேற்றம் அதே இடத்தில் தான் நிற்கிறோம், வாங்கிய கடனை கட்டுவதற்கு கூட நிறுவனம் ஓடுவது இல்லை என புலம்பி தீர்ப்பதை கேள்விப்பட்டு இருப்போம்,
பெரும்பாலும் தொழில் துவங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் பொறுமை இல்லை, ஒரு நிலையன்ஸோ, ஒரு டாடா நிறுவனமோ இந்த அளவிற்கு உயர அது எடுத்துக் கொண்ட காலம் என்பது 100 ஆண்டுகள், முதலீடும் பிரம்மாண்டங்களும் மட்டுமே உங்கள் நிறுவனத்தை உயர்த்தி விடாது, நீங்கள் முதலாளி ஆக வேண்டுமானால், வாடிக்கையாளராக யோசிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
தொழில் துவங்கியதுமே அதீத இலாபம் வைத்து விற்பனை துவங்கினால் ஒரு குட்டி இடத்திற்குள்ளும், குறுகிய வாடிக்கையாளர்களுக்குள்ளுமே உங்கள் தொழில் முடிந்து போகும், முதற்கட்டமாக நீங்கள் உங்கள் நிறுவனத்தை தூக்கி உயர்த்த வேண்டுமானால் உங்கள் இலாபத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள தயங்கவே கூடாது, உங்கள் செலவுகளை எந்த விதத்திலும் உயர்த்த கூடாது.
இலாபத்தை குறைத்துக் கொள்ளும் போது, வாடிக்கையாளர்கள் அதிகம் ஆவார்கள், விற்பனையும் அதிகம் ஆகும், தொழிலும் பெருகும், உங்கள் விற்பனையும் விரிவடையும், அதாவது நீங்கள் உங்கள் இலாபத்தில் ஒரு பங்கை துறக்க முடிவு செய்து விட்டால், உங்கள் வாடிக்கையாளர்கள் பன்மடங்கு அதிகரிப்பார்கள், உங்கள் விற்பனையும் அதீதமாகும், உங்கள் தொழிலும் உச்சத்திற்கு செல்லும்.
" பொதுவாக பல சர்வதேச நிறுவனங்களின் ஆகச்சிறந்த சீக்ரெட் என்பது இது தான், அவர்கள் உச்சத்தில் இருப்பதற்கும் காரணம் என்பது ஒன்றே ஒன்று தான், Less Profit, More Customers, More Gain "