India Economic Growth -உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தை ஒப்பிடும் போது சீனாவை விட இந்தியாவே முன்னிலையில் இருப்பதாக பிரபல பொருளாதார நிபுணர் ஏ.பி.திவாரி உரையாடி இருக்கிறார். அவரது உரையாடல்களில் இருந்த ஒரு சில முக்கிய குறிப்புகளை இங்கு ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
இந்தியாவில் நன்றாக யோசிக்க கூடிய பல தொழில் முனைவோர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்ற சிறந்த நாடாகவும் விளங்குவதால் தொழில்முனைவோர்களால் எளிதாக அவர்களது ஐடியாவை தொழிலாக மாற்ற முடிகிறது.
காட்டில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் வரி விதிப்பு பற்றி கூறி இருப்பார். ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய அரண் என்பது சிறந்த படை, சிறந்த படைக்கு தேவையானது கட்டமைப்பான வரி விதிப்பு.
எந்த நாட்டில் சரியான கட்டமைப்பான வரி விதிப்பு இருக்கிறதோ அங்கு சரியான படை அரண் இருக்கும், சரியான வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை என திவாரி கூறி இருக்கிறார்