Flipkart Big Billion Day Sale -பிளிப்கார்ட் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய "பிக் பில்லியன் டேஸ் 2024" விற்பனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Flipkart Big Billion Day Sale -பிளிப்கார்ட் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய "பிக் பில்லியன் டேஸ் 2024" விற்பனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த மெகா விற்பனையில், அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
தற்போதைய தகவலின்படி, பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கும், மற்ற அனைவருக்கும் செப்டம்பர் 30 முதல் விற்பனை தொடங்குகிறது. கடந்த ஆண்டில், பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் மாதத்தில் நடந்தது.பொதுவாக இந்த விற்பனை தீபாவளி பண்டிகையை மையமாகக் கொண்டு நடைபெறும்.
இந்த விற்பனையில், எலெக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உடை, அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு சிறந்த ஆபர்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக Apple, Samsung, Google, OnePlus போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சலுகைகள் வழக்கம் போல் வழங்கப்படும்.என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் ஆப்பில்,
Flipkart Axis Bank கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1,00,000 வரை ஐந்து சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
Flipkart Pay Later மூலம் கிரெடிட் லைன் மற்றும் Super Coin பயன்படுத்தி கூடுதல் தள்ளுபடிகள் பெறலாம்.
Flipkart கிஃப்ட் கார்டுகள் வாங்கி ரூ.1,000 வரை தள்ளுபடி பெறும் சலுகை உள்ளது.
SuperMoney Rupay ஆஃபர் மூலம் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டு மற்றும் சிறந்த கட்டண சலுகைகளை பெறலாம்.
இதனுடைய தள்ளுபடி விவரங்கள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் களத்தில் போட்டி, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கிய உடனேயே, அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையையும் அறிவிக்கும். எனவே, இரண்டு தளங்களிலும் கிடைக்கும் சலுகைகளை ஒப்பிட்டு உங்களுக்கு தேவையான பொருட்களை மிகச்சிறந்த விலையில் வாங்கி பயன் பெற்று கொள்ளுங்கள்.
சமீபத்தில், பிளிப்கார்ட் கடந்த விற்பனைகளில் பிரபலமான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கி வந்துள்ளது. அதனால், புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் குறைந்த விலையில் வாங்குவதற்காக காத்திருக்கலாம்.