Public Restroom Business-மாநகரின் மையத்தில் பொதுக்கழிப்பிடம் வைத்து அதை இலாபகரமாக கையாள்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலாவதாக பொதுக்கழிப்பிடத்தின் தேவை குறித்து இங்கு பார்க்கலாம்! பொதுவாக பல பொதுமக்கள் கூடும் இடத்தில், சந்தைகளில், பல மாவட்ட, மாநில மக்கள் வந்து போகும் பேருந்து நிலையங்களின் அருகில், சுற்றுலா தளங்களின் அருகில் பொதுக் கழிப்பிடம் என்பது இருப்பது மிக மிக அவசியம் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் பல முக்கிய மாநகரங்களில் பொதுக் கழிப்பிடங்களை பொது இடத்தில் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு என இருந்தாலும் கூட அவை எல்லாம் மோசமான நிலையில் தான் இருக்கிறது.
தமிழகத்தின் தலை நகரான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலோ, நிலையத்தின் வெளியிலோ கூட ஒரு நல்ல பொதுக்கழிப்பிடம் இல்லை. பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் கழிப்பிடமும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பலரும் குளிப்பதற்கு கூட ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தான் குளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதில் இருந்தே தெரியும் பொதுக்கழிப்பிடத்தின் தேவை எவ்வளவு இருக்கிறது என்பது.
பலரும் யோசிக்கின்ற ஒரு தீர்வு தான், ஆனாலும் கூட பொதுக்கழிப்பிடம் ஆரம்பிக்க முன்னெடுக்க பலரும் தயங்குகின்றனர். அதுவும் ஒரு சேவையான ஒரு தொழில் அவ்வளது தான். அதை வைத்தால் கேவலம் என்பதெல்லாம் இல்லை. அமெரிக்காவில் பல மக்கள் கூடும் பிரச்சார கூட்டங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்காக தற்காலிக கழிப்படம் அமைத்துக் கொடுக்கும் ஒரு நிறுவனம் அதன் மூலம் வருடத்திற்கு கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறது.
சரி, பொது இடத்தில் பொதுக்கழிப்பிடம் வைப்பது எப்படி?
முதலில் சரியாக மக்கள் கூடும் பொது இடத்தை தேர்வு செய்ய வேண்டும், இடத்தை வாங்கி கொள்வது நல்லது, ஏன் என்றால் பொதுக்கழிப்பிடம் வைக்க யாரும் வாடகைக்கு என்று இடத்தை தர மாட்டார்கள், பின்னர் கழிப்பிட வரை படம், வேஸ்ட் மேனேஜ்மேண்ட் எவ்வாறு செய்கிறீர்கள் என்பவைகளை எல்லாம் படமாக வரைந்து மாநகராட்சியில் அனுமதி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பொதுக் கழிப்பிடம் ஆரம்பித்து விடலாம். போர் தண்ணீர் எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். யூரினல் தனியாக பாத் ரூம், லெட்டினல் ரூம் என தனியாக என பேணுவது சிறந்தது.
சரி எப்படி, விலை நிர்ணயிப்பது?
பொதுவாக குளிப்பதற்கு 50 ரூபாய், லெட்டினல் 10 ரூபாய், யூரினல் 5 ரூபாய் என அனைத்து இடங்களிலும் வசூலிக்கின்றனர். அவ்வாறாகவே வைத்தாலும் கூட நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1500 வரை பொது கழிவறையின் மூலம் சம்பாதிக்க இயலும், தினமும் காலை ஒரு முறை, மதியம் ஒரு முறை, இரவு ஒரு முறை என சுத்தம் செய்வது மிக மிக அவசியம், கதவுகளை, தாழ்ப்பாள்களை, பைப்களை தினமும் நன்றாக பார்த்து ஏதாவது குறை இருப்பின் நிவர்த்தி செய்து கொள்வதும் அவசியம்.
“ பொதுவாக மக்களின் தேவை என்பது தான் ஒரு தொழில் ஆகிறது, பொது கழிப்பறை மக்களின் அத்தியாவசிய தேவை, இன்றும் பல ஆண்கள்,பெண்கள் வேலை பார்க்கும் கடைகளில், நிறுவனங்களில் கழிப்பறை என்பது கிடையாது, ஆதலால் பொது இடங்களில் சந்தைகளில் அனைத்து வாங்குகின்ற கடைகள் இருப்பது போல, பொது கழிவறையும் அத்தியாவசியம் ஆகிறது. "