Nike Inspirational Story Tamil - எல்லா பெரிய நிறுவனங்களும், ஒரு சிறிய புள்ளியில் இருந்து துவங்கப்பட்டது தான் என்பதற்கு, இன்று உலகின் தலை சிறந்த ஷீ நிறுவனமாக அறியப்படும், நைக் நிறுவனம் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.
Nike Inspirational Story Tamil - 1956 காலக்கட்டம், ஒரு விளையாட்டு வீரன், அவனுக்கு விளையாட்டு சம்பந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, ஆனால் கையில் காசு இல்லை, பின்னர் ஷீ வாங்கி விற்கலாம் என்று யோசித்து நேரடியாக அப்பாவிடம் செல்கிறான், தனது தொழில் ஆசையை அப்பாவிடம் சொல்கிறான், முதலில் மறுத்த அப்பா, பின்னர் ஒரு 200 ரூபாயை கையில் கொடுத்து இதை உனக்கு கடனாக தான் தருகிறேன், திருப்பி தந்து விட வேண்டும் என கூறி கொடுத்து இருக்கிறார்.
அந்த இளைஞன் அதை வாங்கிக் கொண்டு பின்னர் அங்கும் இங்குமாக கொஞ்சம் கடனும் வாங்கி, ஒட்டு மொத்தமாக ஒரு 2000 ரூபாயை கையில் சேர்க்கிறான். பின்னர் ஜப்பானில் இருந்து கொஞ்சம் ஷீக்களை இறக்குமதி செய்து ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கினான், அன்று ஜெர்மானிய ஷீக்களால் நிரம்பி இருந்த கடைகள், புதியதாக ஒரு ஷீவை வாங்கி விற்க பயந்தனர். ஆதலால் யாருமே அந்த இளைஞனின் ஷீவை வாங்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இளைஞன் சாலைகளில் ஷீக்களை போட்டு வைத்து விற்க ஆரம்பித்தான்.
ஆனால் அதுவும் செட் ஆகவில்லை, பின்னர் யோசித்தான், விளையாட்டு வீரர்கள் பலரும் குவியும் மைதானத்திற்கு நேரடியாக சென்று, காரின் டிக்கியில் ஷீக்களை பார்வைக்கு வைத்து அந்த ஷீக்களின் தன்மை குறித்து, அந்த வழியாக செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு எல்லாம் விளக்க ஆரம்பித்தான், முதல் நாள் ஒரே ஒரு ஷீ தான் விற்றது, அதுவே அவனுக்கு பெரும் மகிழ்ச்சி தான், அடுத்த நாளும் முயற்சியை கைவிடாமல் அதே மைதானத்திற்கு சென்று கத்தி கத்தி ஷீக்களை விற்க ஆரம்பித்தான், அன்று 5 ஷூக்கள் விற்றது.
அப்படியே படிப்படியாக ஒவ்வொரு மைதானமாக சென்று சென்று அத்துனை ஷூக்களையும் விற்று தீர்த்தான், முதல் கையிருப்பை அவனுக்கு காலி செய்ய கிட்ட தட்ட ஒரு மாதம் ஆகி இருக்கிறது, கையில் கொஞ்சம் இலாபம் சேரவே இன்னும் ஷீக்களை இறக்குமதி செய்தான், இரண்டாவதாக இறக்குமதி செய்த ஷூக்களை ஐந்தே நாட்களில் விற்று முடிக்கிறார் அந்த இளைஞன், அதற்கு பின்னராக ஒரு கடையாக திறக்கலாம் என்று முடிவு செய்கிறான், 'ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவங்கி ஸ்போர்ட்ஸ் ஐட்டங்களையும் ஷூக்களையும் விற்பனை செய்கிறான். விற்பனை பெருகுகிறது.
அதற்கு பின்னர் தானே ஷூ தயாரிக்கலாம் என முடிவு செய்து களத்தில் இறங்குகிறான், ஒரு விளையாட்டு வீரராக தனக்கு கிடைத்த அனுபவத்தை எல்லாம் போட்டு தனது முதல் மாடலை வெளியிடுகிறான், மார்க்கெட்டில் இருக்கும் பெரிய பெரிய நிறுவனங்களை எல்லாம் வீழ்த்தி விட்டு, இந்த இளைஞன் தயாரித்த ஷூ ஒலிம்பிக் வீரர்கள் வரை சென்றடைந்தது. நாளடைவில் அவன் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டுகளில் சிக்ஸர்கள் அடிக்கவே நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது, வெறும் 2000 ரூபாயில் ஆரம்பித்த அந்த நிறுவனம் நிகழ் காலத்தில் 33,000 கோடி சொத்துக்கு அதிபதியாக வளர்ந்து நிற்கிறது.
" அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்று உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் விரிவடைந்து இருக்கும், நைக் (Nike) நிறுவனத்தின் நிறுவனர் பில் போவர்மேன் தான், அவர் சாதித்ததற்கு இரண்டே காரணம் தான், ஒன்று தன் தொழில் மீதான நம்பிக்கை இன்னொன்று விடா முயற்சி, நிச்சயம் இந்த இரண்டும் இருந்தால் எந்த தொழிலிலும் எந்த முதலீட்டிலும் நீங்கள் விண்ணை தொடும் உயரம் செல்லலாம் என்பதற்கு பில் போவர்மேனே சாட்சி "