Top 3 Richest Firms In World By Market Cap - 2024 நிதி ஆண்டில் நிறுவன ரீதியாக சிறப்பாக செயல்பட்டு, நிறுவனத்தின் உற்பத்திகளை சரியாக சந்தைப்படுத்தி, நிறுவனத்தின் இலாபத்தை பன்மடங்காக உயர்த்தி, உலகளாவிய அளவில் பணக்கார நிறுவனங்களாக உருவெடுத்து இருக்கும், உலகின் டாப் 3 பணக்கார நிறுவனங்கள் (சந்தை மூல தனத்தின் அடிப்படையில்) குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
1) Nvidia
அமெரிக்காவை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் Nvidia நிறுவனம், உலகளாவிய பணக்கார நிறுவனங்களுள் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான கிராபிக்ஸ் செயலாக்க அலகு (GPU) மற்றும் Semiconductors களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வரும் Nvidia நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.571 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக தகவல்.
2) Apple
அமெரிக்காவை மையமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய பணக்கார நிறுவனங்களுள் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது, கணினிகள், மொபைல்கள் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.366 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக தகவல்.
3) Microsoft
அமெரிக்காவை மையமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளாவிய பணக்கார நிறுவனங்களுள் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது, கணினிகள், மொபைல்கள்களுக்கான இயங்கு தளங்களை உருவாக்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.123 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக தகவல்.
" சந்தை மூல தனத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய மற்றும் பணக்கார நிறுவனங்களுள் முதல் மூன்று இடத்தை பிடித்து இருக்கும் நிறுவனங்களுமே அமெரிக்காவை சார்ந்ததாக இருப்பது குறிப்பிடத்தக்கது "