Government Business Loan Scheme -மத்திய அரசின் தொழில் கடன் திட்டங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு கடனுதவி வழங்குகின்றன, வணிக வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
Government Business Loan Scheme -மத்திய அரசின் தொழில் கடன் திட்டங்கள், இந்தியாவில் வணிக வளர்ச்சிக்காக மத்திய அரசின் தொழில் கடன் திட்டங்கள் ஸ்டார்ட்அப்கள் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்கி வருகின்றன. சரியான கடன் திட்டத்தை தேர்ந்தெடுப்பது, உங்கள் வணிகத்தின் முழுத் திறனை வெளிப்படுத்த மிகவும் அவசியம். இதற்கான முக்கியமான தகவல்கள் பற்றி கீழே பார்க்கலாம்.
வணிகக் கடன் தேவைகளின் மதிப்பீடு, கடன் பெறுவதற்கு முன், உங்கள் வணிகத்தின் நிதித் தேவைகளை சரியாக மதிப்பீடு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். கடன் தொகை: உங்கள் வணிக இலக்குகளை அடைய எவ்வளவு நிதி தேவைபடும்? வணிக நிலை, நீங்கள் புதிய தொழில் தொடங்கவீர்களா அல்லது நிறுவனம் விரிவாக்கத்திற்கான கட்டத்தில் இருக்கிறதா? தொழில் துறைகள்,உங்கள் வணிகம் விவசாயம், உற்பத்தி, அல்லது சேவைத்துறையில் வருகிறதா? சில திட்டங்கள் குறிப்பிட்ட துறைகளை மட்டுமே ஆதரிக்கின்றன.
முக்கிய தொழில் கடன் திட்டங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்,
59 நிமிடங்களில் MSME கடன் திட்டம், MSMEs-க்கு ரூ.1 கோடி வரை விரைவாக கடன் வழங்கும் திட்டம். விண்ணப்பங்கள் 59 நிமிடங்களில் பரிசீலிக்கப்படும், பெண்கள் தொழில்முனைவோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு, மற்றும் குறைந்த வட்டி விகிதங்களுடன் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, PMMY, ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளுடன் கடன்களை வழங்கி வருகிறது.மேலும், வங்கிகள் மற்றும் NBFCகளின் மூலமாக சுய தொழில்முனைவோருக்கு உதவியாக இருக்கும்.
தேசிய சிறு தொழில் கழகம், NSIC, தொழில்முனைவோருக்கு நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்கும் ஒரே இடமாக இருக்கிறது. சந்தைப்படுத்தல் ஆதரவுத் திட்டம், உங்கள் வணிகத்தின் சந்தை விரிவாக்கத்திற்கு சந்தைப்படுத்தல் ஆதரவை வழங்குகிறது. கடன் ஆதரவு திட்டம், மூலப்பொருட்கள் வாங்குதல் முதல் சந்தைப்படுத்தல் வரை தேவையான நிதி உதவியை வழங்குகிறது.
கிரெடிட் லிங்க்ட் மூலதன மானியத் திட்டம் (CLCSS), தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான 15% முன்பண மானியத்தை வழங்கும் இந்தத் திட்டம், உற்பத்தி அல்லது விநியோகச் சங்கிலியை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. SIDBI கடன், SIDBI, MSMEகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கும் பிரதான அமைப்பாகும். NBFCகள் மற்றும் சிறு நிதி வங்கிகளின் மூலம் நேரடிக் கடன்கள் மற்றும் மறைமுகக் கடன் திட்டங்களை வழங்கி வருகிறது.