Electric Mobility Vehicles -சீனாவின் பல்வேறு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள், வெகு விரைவில் ஆப்பிரிக்காவிலும் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கென்யாவின், நைரோபி ந்கரில் நடைபெற்ற ஐந்து நாள் ஈ-மொபிலிட்டி வார மாநாட்டில் கலந்து கொண்ட சீன எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள், ஆப்பிரிக்காவுடன் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுமை வாகனங்களை எப்படி விரிவு படுத்துவது என்பது குறித்து பேசி இருக்கின்றன. பொதுவாக ஆப்பிரிக்காவின் பல மாகாணங்களில் திட்டம் இடப்படாத பல தொழிற்சாலைகளால் காற்றின் தரம் என்பது மிக மிக வெகுவாக குறைந்து வருகிறது. ஆதலால் பசுமை வாகனங்கள் என்பது அந்த நாட்டிற்கு மிக மிக அவசியமாகவே பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான், சீனா தன்னுடைய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுடன், ஆப்பிரிக்காவில் களம் இறங்கி இருக்கிறது. கென்யாவின் பெட்ரோலிய கட்டுப்பாட்டு மையம் ஒன்று கூறிய விரிவான அறிக்கையின் படி, கென்யாவில் ஒட்டு மொத்தமாக 5,000 எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இருக்கிறதாம்.
அடுத்த ஒரிரு வருட்ங்களுக்குள் இந்த எண்ணிக்கையை பன் மடங்காக உயர்த்த சீன எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கிறதாம். இதற்காக மற்ற ஏற்றுமதி நாடுகளில், தாங்கள் ஒரு வாகனத்திற்கு குறித்து வைத்து இருக்கும் விலையை விட, ஆப்பிரிக்காவில் குறைவான குறித்த விலையை திட்டமிட சீனா ஒப்புக் கொண்டு இருகிறதாம். பொதுவாக சீனா உலகளாவிய அளவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னனி நாடாக விளங்கி வருகிறது. ஆப்பிரிக்காவிலும் தங்களது எலக்ட்ரிக் வாகன வணிகத்தை விரிவு படுத்த இருக்கும் சீனா, இனி அங்கும் கொஞ்சம் கொஞ்சமாக, தனது மற்ற பொருள்களின் வணிகத்தையும் அப்படியே விரிவு படுத்திடும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
ஒரு பக்கம் சீனாவின் பல்வேறு இறக்குமதிகளுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தடை விதித்து வரும் நிலையில், சீனா உலகின் மற்ற சிறிய சிறிய நாடுகளை தங்கள் வணிகத்திற்காக குறி வைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது