Actor Surya Latest News -நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய்க்கு Dassault Falcon 2000 ரக புதிய பிரைவேட் ஜெட் வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Actor Surya Latest News- நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய்க்கு புதிய பிரைவேட் ஜெட் வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் பல ஆண்டுகள் வசித்து வந்ததையடுத்து தற்பொழுது மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்திக் கொண்டிருக்கிறார்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு அவர் நடித்த "ஷைத்தான்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளி இருக்கிறது.
சூர்யா பிரைவேட் ஜெட் வாங்கியிருப்பதாக பரவிய தகவல்கள் குறித்து சூர்யாவின் தரப்பு விளக்கம் அளித்து, அந்த தகவல்கள் முழுமையாக வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dassault Falcon 2000 ரக ஜெட் வாங்கியதாக கூறப்படும் தகவல் உண்மையில்லை என்றும் அது முழுக்க முழுக்க வதந்தி எனவும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், நாகார்ஜுனா, ராம்சரண், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன், சல்மான்கான், மகேஷ் பாபு, நயன்தாரா மற்றும் சன்னி லியோன் போன்ற இந்திய சினிமா பிரபலங்கள் பிரைவேட் ஜெட்களை சொந்தமாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரைவேட் ஜெட் வாங்கியிருந்தால் இந்த பட்டியலில் சூர்யா இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.சூர்யா பிரைவேட் ஜெட் வாங்கினாலும், அது அவருடைய தனிப்பட்ட விஷயம் எனவும் அது அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் வாங்கிருப்பர்,அதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் கூறப்படுகிறது.