• India
```

கண்களை பறிக்கும் மஹிந்திரா தார் ரோக்ஸ் வந்துவிட்டது..சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிமுகமாகிறது!

Mahindra Thar New Model | Thar Mahindra New Model

By admin

Published on:  2024-08-21 10:30:32  |    437

Mahindra Thar New Model -மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (M&M) நிறுவனம் தனது புதிய SUV மாடலான தார் ரோக்ஸ்ஸை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மஹிந்திரா தார் ரோக்ஸ் -ன் இந்த மாடல், நிறுவனத்தின் SUV வரிசையில் ஒரு முக்கியமான மாற்றத்தை குறிக்கப்படுகிறது.

Mahindra Thar New Model -மஹிந்திரா குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளர் பிரதாப் போஸ், தார் ரோக்ஸ்ஸின் சிறப்பு வடிவமைப்பு அம்சங்களை பற்றி தெளிவாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியீட்டு விழாவில் விளக்கினார்.மேலும், இந்த தனித்துவமான அம்சங்கள் அனைத்தும்,இந்த வாகனத்தை மற்ற SUV மாடல்களில் இருந்து வேறுபடுத்தும் என்று கண்மூடித்தனமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், M&M நிறுவனத்தின் CEO ராஜேஷ் ஜெஜூரிகர், பிரீமியம் SUV சந்தையில் மஹிந்திரா கண்டிப்பாக எதிர்காலத்தில் வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மேலும், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள SUV பிரிவை மஹிந்திரா வழிநடத்தும் திறன் பெற்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.தார் ரோக்ஸ் மாடல், தனது நுழைவு நிலை மாடல்களுக்கு போட்டி விலையுடன் சந்தையில் அறிமுகமாகிறது. இது இரண்டு வகைகளில் உள்ளது.அவைகளை கீழே அடுத்து பார்ப்போம்.

 MX 1 பெட்ரோல் வகையின் விலை ரூ12.99 லட்சத்தில் தொடங்குகிறது. இதைபோன்று,டீசல் வகையின் விலை ரூ13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


MX1 மாடல், இரண்டு வகையான எஞ்சின்களுடன் வெளியாகிறது. 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் 148bhp மற்றோன்று 330 Nm டார்க்கை தயாரிக்கிறது.மேலும், 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 158bhp மற்றும் 330 Nm சக்தியைக் கொண்டு உருவாக்குகிறது. இந்த இரண்டு எஞ்சின்களும் ஆறு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரியர் வீல் டிரைவ் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும், தார் ரோக்ஸ்ஸின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதனுடைய பரந்த சன்ரூஃப் ஆகும், இது M&M நிறுவனம் தனது வகுப்பிலேயே மிகப்பெரியது என கூறுகிறது. இந்த அம்சம், ஓட்டுநருக்கு பிரீமியம் அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் தலைமுறை தார் மாடல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிமுகமாகிய மூன்றாம் ஆண்டு முடிவில், தார் ரோக்ஸ்ஸின் வெளியீடு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

வருங்கால வாடிக்கையாளர்கள், மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் வழியே தார் ரோக்ஸ்ஸை முன்பதிவு செய்யலாம் என்றும் அதைத்தொடர்ந்து டெலிவரிகள் அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.



இப்பொழுது, தார் ரோக்ஸ் பற்றி விரிவாக பார்க்கலாம்..

தார் ரோக்ஸ்ஸில், 2.0-லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சின்கள் உள்ளன, இவை இரண்டும் மேம்பட்ட செயல்திறனை வழங்குகின்றன. பெட்ரோல் மாறுபாடு 160 bhp மற்றும் 330 Nm டார்க்கையும், டீசல் மாறுபாடு 150 bhp மற்றும் 330 Nm டார்க்கையும் கொடுக்கிறது. இரண்டு எஞ்சின்களும் ஆறு வேக மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் தயாரிக்கப்பட்டு வெளியாகின்றன.

மேலும் தார் ரோக்ஸ்ஸில், ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஃபோர்-வீல் டிரைவ் போன்ற இரண்டு அமைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பல்வேறு நிலப்பரப்புகளிலும் ஓட்டுநரின் வசதிகளையும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் ரோக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை பார்க்கலாம், மஹிந்திரா தார் ரோக்ஸ் MX1 பெட்ரோல் எம்‌டீ எக்ஸ் ஷோரூம் -ல் ரூ. 12.99 லட்சம் மற்றும் மஹிந்திரா தார் ரோக்ஸ் MX1 டீசல் எம்‌டீ எக்ஸ் ஷோரூம் -ல் ரூ. 13.99 லட்சத்துக்கும் விற்பனை செய்வதாக விலைப்பட்ட்டியலை வெளியிட்டுள்ளது.

எனவே, மற்ற நிறுவனங்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக தார் ரோக்ஸ் போட்டியிடுகிறது.