Women Group Loan Schemes In Tamil - அரசு பெண்களின் சுய முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பல கடன் திட்டங்களையும் அறிவித்து வருகிறது, அந்த திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Women Group Loan Schemes In Tamil - பொதுவாக தொழில் கடன், பொதுவான கடன் என்னும் போது ஆண்களுக்கு என்று நிறைய நிறைய திட்டங்கள் வங்கிகளில் இருக்கின்றன, ஆனால் பெண்களுக்கு என்னும் போது, தற்போது தான் ஒவ்வொரு திட்டங்களாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஒரு சில சுய உதவிக்குழு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதில் ஒன்று தான் மஹிளா சம்ரிதி யோஜனா, இத்திட்டத்தின் மூலம் மகளிர் அதிகபட்சம் 20 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திடல் வேண்டும், குழு நம்பகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும், ஒட்டு மொத்த குழுவினரும் நேரடியாக வங்கிகளை அணுகி மஹிளா சம்ரிதி யோஜனாவிற்கான விண்ணப்பங்களை பெற்று, ஆதார், முகவரி சான்று உள்ளிட்டவைகளை சம்ர்ப்பித்திடல் வேண்டும்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் உங்கள் குழுவிற்கென ஒரு லோன் அக்கவுண்ட் ஓபன் செய்யப்படும், குழுவினர் ஒன்று கூடி தலைவி மற்றும் துணை தலைவிகளை குழுவிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்கள் இருவரும் தான் அந்த லோன் அக்கவுண்ட்டில் இணைக்கப்படுவார்கள், பணத்தை எடுப்பது, கடனுக்கான தொகையை போடுவது என அக்கவுண்ட்டில் நடக்கும் பரிமாற்றங்கள் அனைத்தையும் இவர்கள் இருவரும் தான் செய்ய முடியும்.
இந்த மஹிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம், உங்களது குழு வங்கிகளால் ஏற்கப்பட்டால், உங்களது குழுவில் 15 பேர் இருக்கிறார்கள் என்றால் மொத்தமாக 15 இலட்சம் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும், ஆளுக்கு ஒரு இலட்சம் குழு தலைவியானவர்கள் எடுத்துக் கொடுக்க வேண்டும், 4 சதவிகிதம் வட்டி வீதத்தில் வழங்கப்படும் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 4 வருடம் வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
இதே மஹிளா சம்ரிதி யோஜனாவின் அப்டேட்டடு வெர்சனாக தற்போது நியூ ஸ்வர்ணிமா என்ற ஒரு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது, குழு அமைப்பதற்கான அனைத்து விதிமுறைகளும் மஹிளா திட்டம் போல தான், ஆனால் இத்திட்டத்தின் மூலம் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இரண்டு இலட்சம் கடனுதவி வழங்கப்படும், வட்டி வீதம் இத்திட்டத்தில் 5 சதவிகிதமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது, கடன் தொகையை மூன்று முதல் எட்டு வருடங்களுக்குள் திருப்பி செலுத்திக் கொள்ளலாம்.
” பெரிதாக ஏதும் பிராசஸ் இல்லை என்பதால் இந்த வகை கடன்களை மகளிர் எளிதாக பெற முடிகிறது, கடன் தொகையை இப்படி தான் உபயோகிக்க வேண்டும் என எந்த வித திட்டவட்டமும் இத்திட்டத்தில் இல்லாததால், பெண்கள் அவர்கள் தேவைக்கு ஏற்ப பெறும் கடன் தொகையை பயன்படுத்த முடியும் “