JSW Cement IPO -மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட், ரூ. 4,000 கோடி நிதி திரட்ட ஐபிஓவிற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்தது.செபி ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.
JSW Cement IPO -மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட், ரூ. 4,000 கோடி நிதி திரட்ட ஐபிஓவிற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்தது. அப்போதைய நிர்வாக நடவடிக்கையாக, செபி இந்த விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்தது, ஆனால் எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானதை அடுத்து, தற்போது செபி ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.
ஐபிஓ தடை செபி விளக்கம்,செபி, ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் நிறுவனத்தின் ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தியது, அதன் முக்கிய பங்கு வைத்திருக்கும் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய வழக்குகள் காரணமாக என்று தெரிவித்துள்ளது.
முக்கிய வழக்குகள் சஜ்ஜன் ஜிண்டால் மீதான குற்றச்சாட்டுகள்,ஹெக்ஸா செக்யூரிட்டீஸ் அண்ட் ஃபைனான்ஸ் கோ நிறுவனத்தில் முதலீட்டு பரிமாற்றம் தொடர்பான ஒழுங்குமுறை மீறல் குறித்த வழக்கு, சஜ்ஜன் ஜிண்டால் உட்பட ஜிண்டால் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களை உள்ளடக்கியது. 2024 ஷோ காஸ் நோட்டீஸ்,ஜிண்டால் குடும்பம் தொடர்பான வழக்கு இந்த வழக்கில் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு 2024ம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஓ மூலம் பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்பு, சபி தற்போதைய வழக்குகள் காரணமாக, ஜிண்டால் குடும்பம் ஐபிஓவை பயன்படுத்தி பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது. சந்தையில் புதிய உச்சம், முதலீட்டாளர்கள் ஆர்வம் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சங்களை தொடுவதால், ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் நிறுவனம் ஐபிஓ மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.