Boeing CEO News-15 வருடமாக போயிங் நிறுவனத்தில் பணியாற்றிய டெட் கோல்பர்ட் போயிங் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.
போயிங் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த டெட் கோல்பர்ட் நிறுவனத்தை விட்டு விலகி இருகிறார். 15 வருடங்களாக போயிங் நிறுவனத்தின் பணிபுரிந்து வந்த டெட் கோல்பர்ட்டின் விலகலுக்கான சரியாக காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் போயிங் நிறுவனத்தில் அவரோடு நெருங்கி பணிபுரியும் பலரும் பலவித காரணங்களை கூறி வருகின்றனர்.
டெட் கோல்பர்ட் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த போயிங் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பிரிவு மட்டுமே, ஒட்டு மொத்த போயிங் நிறுவனத்தின் 40 சதவிகித இலாபத்தைக் கொடுக்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் தாமதம், தயாரிப்பிற்கான செலவுகள் அதிகம் என்று பலவித பிரச்சினைகள் இருந்து வந்தன. அமெரிக்க அதிபர் விமான பிரச்சினை, போயிங் 737 இரண்டு இடங்களில் மோதல், பயணத்தின் போது கதவு பிரச்சினை என பல தயாரிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினகளையும்
எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது நாசாவின் பெரும்பாலான பிராஜக்டுகளில் பங்கு பெற்று வருவதால் போயிங் நிறுவனத்தின் பங்குகள் வெகுவாக சரிந்து இருக்கின்றன, கிட்ட தட்ட போயிங்கிற்கு 40 சதவிகிதம் வருவாய் கொடுத்து வந்த போயிங் நிறுவனத்தின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பிரிவு தற்போது பெரும் பின்னடவை சந்தித்து இருப்பதும் டெட் கோல்பர்ட்டின் பதவி விலகலுக்கான காரணமாக கூறப்படுகிறது.
போட்டி நிறுவனங்களின் ஆதிக்கம், தயாரிப்பில் கோளாறுகள், கடன் பிரச்சினைகள், நாசாவுடனான முறிவு இது எல்லாம் 15 வருடங்களாக போயிங்கில் பணி புரிந்து வந்த டெட் கோல்பர்ட் பதவி விலக காரணங்களாயிற்று.