• India
```

1000 கோடியே தனது இலக்கு..!! ஒரு நாளுக்கு 1.8 மில்லியன் முட்டையில் அட்டகாசமான பிசினஸ்கள்..

Egg Business Ideas | Export Business Ideas In Tamil

Egg Business Ideas -ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம். ஸ்ரீ சிவகுமார் முட்டைகளை வைத்து பிசினஸ் செய்து வருகிறார்.ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல்,தனது இலக்கு 100 கோடி என்று உற்சாகமாக கூறியுள்ளார்.

Egg Business Ideas -எஸ்.கே.எம். ஸ்ரீ சிவகுமார், ஈரோட்டைச் சேர்ந்தவர், முட்டைகளை வைத்து பவுடர் உற்பத்தியில் உலகளவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். 1995 ஆம் ஆண்டில், 27 வயதில், அவர் "எஸ்.கே.எம் எக் ப்ராடக்ட் எக்ஸ்போர்ட் லிமிடெட்" எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், இப்போது ஆண்டிற்கு ₹650 கோடி வருமானம் பெற்று கொண்டிருக்கிறது.

எஸ்.கே.எம். ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய முட்டை ப்ராசசிங் பிளான்ட்டாக இருந்து வருகிறது.மேலும், இந்த நிறுவனம்,ஒரு நாளுக்கு 1.8 மில்லியன் முட்டைகளை ப்ராசசிங் செய்து வருகிறது.இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு 6500 டன் முட்டை பவுடர் தயாரிக்கப்படுகிறது.

மேலும்,ஆரம்ப காலத்தில் இந்நிறுவனம் 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டது.இந்நிலையில்,தற்பொழுது 1300 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். முழு முட்டை, வெள்ளை கரு, மற்றும் மஞ்சள் கரு ஆகியவற்றில் இருந்து தனித்தனியாக பவுடர்களை தயாரித்து அதனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.மேலும், திரவமாக இருக்கும் முட்டை வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை டெட்ரா பேக்குகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளில் இருக்கிறார்கள்.


1000 கோடியே தனது இலக்கு,

சிவகுமாரின் தந்தை, கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களுக்கு தீவனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவரது தந்தையின் தொழிலில் உதவிய சிவகுமார், 1991ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்ததும், தந்தையுடன் தொழிலில் இணைந்தார். 1994ஆம் ஆண்டு டிட்கோவுடன் இணைந்து முட்டை பவுடர்களை தயாரிக்கும் ஆலையை நிறுவினாராக பணியாற்றினார்.முதலில், பெல்ஜியம் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப உதவிகளை கற்றுக்கொண்டார். 

சிவகுமார்,கரூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வருகிறார், அங்கு தினசரி 5 லட்சம் முட்டைகள் உற்பத்தி ஆகின்றன.மேலும் கூடுதலாக, மற்ற வியாபாரிகளிடமிருந்து 10 லட்சம் முட்டைகளை வாங்கி பவுடர்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். 

பன்னீர் வடிவத்தில் முட்டை வெள்ளை கரு மற்றும் புரோட்டின் பவுடர்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது. மேலும்,தனது நிறுவனம் ரூ.1000 கோடி வருமானத்தை அடைய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2