• India
```

CEO வுக்கு மில்லியன் கணக்கில் சம்பளமா!! ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட தகவல்..!

Starbucks CEO Salary | Current CEO Of Starbucks

Starbucks CEO Salary -ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய CEO அமெரிக்காவை சார்ந்த பிரைன் நிக்கோல்,இவருக்கு 113 மில்லியன் அமெரிக்க டாலர்களில் சம்பளம்.

Starbucks CEO Salary -அமெரிக்காவில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரைன் நிக்கோலின் ஊதியம் மற்றும் ஆதரவுகளின் விவரங்ககளை வெளியிட்டுள்ளது. 17 மாதங்கள் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக  இந்தியாவை சேர்ந்த லட்சுமணன் நரசிம்மன், பணியாற்றி வந்தார். ஆனால் அவரது பதவிக்காலத்தில், ஸ்டார்பக்ஸ் பங்குகள் 23% குறைந்ததால், சந்தை மூலதனம் 32 பில்லியன் டாலர்கள் சரிந்துவிட்டது. இதனால், அவருக்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த பிரைன் நிக்கோல் தற்பொழுது அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பபட்டுள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் நிக்கோலுக்கு மொத்தம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 948 கோடி ரூபாய்) ஊதியமாக வழங்கப்படும் அது மட்டுமின்றி மேலும், அவர் சீட்டலில் பணியாற்றும் போது அவருக்கு தேவையான தங்கும் வசதிகளும், மற்றும்  அவர் வந்து செல்வதற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட ஜெட் விமானத்தை பயன்படுத்தும் வசதியையும் அவருக்கு ஸ்டார்பக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

அதாவது,ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "பிரைன் நிக்கோல் தனது துறையில் சிறந்த தலைவராக இருந்துள்ளார். மேலும், அதனால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக கொடுக்கிறோம். பிரைன் நிக்கோல ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கட்டாயமாக உறுதுணையாக இருப்பார்" என்று தெரிவிக்கப்பட்டிருகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2