• India
```

ஒரு நல்ல தொழிலில்...வருமானம் முக்கியமா...வாடிக்கையாளர்கள் முக்கியமா...?

Profit Or Customer Satisfaction

By Ramesh

Published on:  2024-12-10 16:20:33  |    185

Profit Or Customer Satisfaction - முதலில் ஒரு தொழில் ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் அந்த தொழில் குறித்த முன் அனுபவம் வேண்டும், இல்லையேல் அந்த தொழில் குறித்து அந்த தொழிலுக்கான களத்தில் இறங்கி விசாரிக்க வேண்டும், விசாரித்து, அனுபவத்தோடு, முதலீடு செய்து தொழிலை துவங்கி விட்டீர்கள் என வைத்துக் கொண்டால் அடுத்த கட்டம் என்பது தயாரிப்பை சந்தைப்படுத்துவது தான்.

தயாரித்த பொருளை அல்லது உற்பத்தி பொருளை அல்லது கடைகளில் வாங்கி விற்பனைக்கு வைத்து இருக்கும் பொருளை சந்தைப்படுத்துவது என்பதில் தான் ஒரு குழப்பம் வரும், நாம் பொருளை என்ன இலாபத்திற்கு விற்க வேண்டும், நல்ல இலாபத்திற்கு விற்க வேண்டுமா, விலை எப்படி நிர்ணயிக்க வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி ஈர்க்க வேண்டும் என பல சந்தேகம் கலந்த குழப்பங்கள் வந்து நிற்கும்.



இலாபம் முக்கியமா என்றால் நிச்சயம் முக்கியம் தான், இல்லையேல் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவே முடியாது, வாடிக்கையாளர்கள் முக்கியமா என்றால் நிச்சயம் முக்கியம், இல்லையேல் நிறுவனத்தை விரிவுபடுத்தவே முடியாது, நன்கு யோசிக்கும் பட்சத்தில் ஒரு தொழிலதிபருக்கும், ஒரு கடைக்காரருக்கும் இடையில் இருப்பது ஒரு குட்டி வித்தியாசம் தான். 

ஒரு கடைக்காரர இலாபத்தை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார், ஒரு தொழிலதிபர் வாடிக்கையாளர்களை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார், கடைக்காரர் இலாபத்தை நோக்கி மட்டுமே ஓடிக் கொண்டு இருப்பதால் அவர் கடைக்காரராகவே இருக்கிறார், ஒரு தொழிலதிபர் வாடிக்கையாளரை நோக்கி ஓடிக் கொண்டு இருப்பதால் அவர் என்றும் தொழிலதிபராகவே இருக்கிறார்.

" ஒரு கடைக்காரர், ஒரு பொருளை 50 ரூபாய் இலாபத்திற்கு விற்று 20 வாடிக்கையாளரை பெற்று ஒரு நாளுக்கு அந்த பொருளின் மூலம் ரூ 1000 இலாபம் அடைகிறார், ஒரு தொழிலதிபர் அதே பொருளை 20 ரூபாய் இலாபத்திற்கு விற்று 2000 வாடிக்கையாளர்களை பெற்று அதே பொருளின் மூலம் ரூ 40,000 இலாபம் அடைகிறார் "