Elon Musk Income Per Second - பிரபல தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர், டெஸ்லா, Open AI, நியூராலிங் என பல நிறுவனங்களின் நிறுவனர் ஆக அறியப்படும் எலான் மஸ்க் அவர்களின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 300 பில்லியன் டாலர்களை நெருங்கும் என கூறப்படுகிறது, உலகின் தலை சிறந்த தொழில்நுட்பங்களின் மூலம் உலக நாடுகளையே தன்வசப்படுத்தி இருக்கிறார் எலான் மஸ்க் என்று தான் சொல்ல வேண்டும்.
அவரின் வெற்றி மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டாலும், அதற்கு பின்னால் பல தோல்விகளும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், பலரும் அவருடைய திட்டங்கள், நோக்கங்கள் குறித்து பல விமர்சனங்களை அவர் மீது வைத்தாலும் கூட, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய கண்டுபிடிப்புகளின் மீது உறுதியாக நின்றது தான் எலான் மஸ்க்கின் வெற்றியாக அறியப்படுகிறது.
ட்ரம்ப் வெற்றிக்கும் எலான் மஸ்க்கின் பங்கு அளப்பரியது என கூறப்படுகிறது, எலான் மஸ்க், ட்ரம்ப்பின் வெற்றிக்கு அவருடைய விளம்பர களத்தில் பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது, முன்னதாகவே ட்ரம்ப் வெற்றி குறித்து அறிந்து இருந்த பலரும் எலான் மஸ்க் நிறுவனத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ததால், ட்ரம்ப் வெற்றிக்கு பின்னர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் உயர்ந்து இருக்கிறதாம்.
இத்தகைய பில்லியனர் எலான் மஸ்க் தற்போதைய நிலவரப்படி அவர் ஒரு வினாடிக்கு ரூ 4.7 இலட்சங்கள் வருமானம் பெறுகிறாராம், ஒரு நிமிடத்திற்கு ரூ 2.8 கோடி ரூபாய், ஒரு மணி நேரத்திற்கு என்று கணக்கிடும் போது 170 கோடி வருமானம் அடைகிறாராம், இதில் ஒரு வேடிக்கையான நிகழ்வு என்பது எலான் மஸ்க் ஒரு நிமிடத்திற்கு சம்பாதிக்கும் பணத்தை 70% இந்தியர்கள் அவர்களது வாழ்நாள் முழுக்க கூட சம்பாதிப்பது இல்லையாம்.