Today Richest Person In India -ஹூரன் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியப் பணக்காரர் பட்டியல் அறிக்கையை வெயிட்டுள்ளது.முகேஷ் அம்பானியின் முதல் இடத்தை அதானி பிடித்துள்ளார்.
Today Richest Person In India -ஹூரன் ஆராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் வெளியான அறிக்கையில் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாவதாக ஆய்வுகள் அடிப்படையில் தெரிவித்திருக்கிறது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31, 2024 நிலவரப்படி பணக்காரர் பட்டியலில் சொத்து மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹூரன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில் "ஆசியாவின் செல்வம் உருவாக்கும் இயந்திரமாக இந்தியா, உருவாகி வருகிறது! சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்த நிலையில், இந்தியாவில் 29% அதிகரித்து நாட்டில் 334 கோடீசுவரர்கள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை எட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்திய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார் முகேஷ் அம்பானி.இந்நிலையில் ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் முதல் இடத்தில் உள்ளனர்.
ரூ.1,014,700 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம், இரண்டாவது இடத்தில் உள்ளார்.
HCL நிறுவனத்தின் சிவ் நாடார் மற்றும் குடும்பம், ரூ.3,14,000 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2