• India
```

எஸ்பிஐ 15 ஆண்டு கால பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி நிதி திரட்டும் திட்டம்..!!

Best Bonds To Invest In India | Business News In Tamil

Best Bonds To Invest In India -கனரா வங்கி ரூ.5,000 மதிப்புள்ள 10 வருட உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களுக்கு, 7.54% கூப்பன் வட்டி விகிதம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ரூ.1,000 கோடி அடிப்படை அளவு மற்றும் ரூ.4,000 கோடிக்கான பத்திர விற்பனையை அறிவித்துள்ளது.

Best Bonds To Invest In India -பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி, தங்களது கடன் பத்திரங்கள் மூலமாக மொத்தம் ரூ.8,000 கோடி நிதி திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது. கனரா வங்கி, 10 ஆண்டு கால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது, இதற்கு 7.54% கூப்பன் வட்டி வழங்கப்படும்.

இதில் ரூ.1,000 கோடி அடிப்படை அளவாகவும், கூடுதலாக ரூ.4,000 கோடிக்கும் பத்திர விற்பனை செய்யும் திட்டத்தை கனரா வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த மாத்திரம் அல்லாமல், இந்தியாவின் மிகப்பெரிய வங்கி எஸ்பிஐ, கடந்த வாரம் 15 ஆண்டு கால உள்கட்டமைப்பு பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி திரட்ட இருப்பதாகவும், இதற்காக 7.49% கூப்பன் வட்டி வழங்க இருப்பதாகவும் அறிவித்தது.


மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி, 8.59% கூப்பன் விகிதத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு, ரூ.3,000 கோடி திரட்டியுள்ளது. இந்த பத்திரங்களுக்கு செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டதுடன், மொத்தம் ரூ.4,581 கோடிக்கு ஏலம் பெற்றுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி, இதற்காக ரூ.500 கோடி அடிப்படை அளவாகவும், கூடுதலாக ரூ.2,500 கோடிக்கும் பத்திர விற்பனை செய்துள்ளது.

நபார்ட் (விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) செவ்வாயன்று நாட்டின் முதல் சமூகப் பத்திர விற்பனையை மேற்கொண்டு, ரூ.1,040.50 கோடி திரட்டியுள்ளது. இந்த 5 ஆண்டு AAA மதிப்பீடு பெற்ற பத்திரங்கள் 7.63% கூப்பன் விகிதம் கொண்டுள்ளது.