Hrithik Pandya Net Worth-மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, குறுகிய காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.அவரது சொத்து மதிப்பு சுமார் 91 கோடி ரூபாயாகக் கணிக்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை, அவரின் கல்வியும் விளையாட்டிற்கான ஆர்வமும் மீது கவனம் செலுத்தினார். எளிய வாழ்கையில், அவரது தந்தை சொந்த தொழிலை கைவிட வேண்டிய நிலையில் இருந்தாலும், ஹர்திக்கின் கிரிக்கெட் கனவை ஒருபோதும் கைவிடவில்லை.
பணமில்லாததால், ஹர்திக் கிரிக்கெட் உபகரணங்களை வாங்க முடியாத போது, டென்னிஸ் பந்துகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்தார். தனது சகோதரனுடன் சேர்ந்து, வெற்றிக்கு 200 ரூபாய் கிடைக்கும் போட்டிகளில் விளையாட தொடங்கினார். அந்த பணத்தை வைத்து மேகி நூடில்ஸ் வாங்கி தான் உணவு சாப்பிட்டடார்.இந்நிலையில்,
IPL மூலம், அவரது வாழ்க்கை முழுக்க மாற்றப்பட்டது.இப்போது தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்கிறார்.மேலும், 8 கோடி மதிப்புள்ள கடிகாரம் அணிகிறார்.பணப்பிரச்சினைகள் என்பது தற்போது அவர் வாழ்க்கையில் சிறிதும் இல்லை.
2020 இல், நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன்பே நடாஷா கர்ப்பமாக இருந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது, இருவரும் பிரிந்து இருப்பதாக சில தகவல்கள் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு தற்பொழுது சுமார் 11 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 91 கோடி ரூபாய்.அவர் பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் விளம்பரங்களிலிருந்து பணம் சம்பாதிக்கிறார், IPL-ல் மட்டும் ரூ. 15 கோடி வருமானம் பெறுகிறார்.