• India
```

முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் இருங்கள்..வர்த்தகம் தொடங்கவுள்ள பங்குகள் !

Share Market News In Tamil | Share Market Latest News In Tamil

By admin

Published on:  2024-08-12 18:51:20  |    246

Share Market News In Tamil - இரண்டு வாரங்கள் தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்ததின் தொடர்ச்சியாகும், இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளார்கள்.

Share Market News In Tamil -இந்திய பங்குச்சந்தைகள் சென்ற வார வர்த்தகத்தில் 1% வரை சரிவை சந்தித்துள்ளன.மேலும்,இது இரண்டு வாரங்கள் தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்ததின் தொடர்ச்சியாகும், இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளார்கள்.

இந்த வாரமும் பங்குச்சந்தைகள் இதே நிலையில் தொடரலாம் என்பதால், வர்த்தகத்தில் எந்த பங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைக் கீழ்கண்டவாறு காண்போம்.அதாவது, ஐஆர்எஃப்சி, வோடபோன் ஐடியா, என்எம்டிசி, ஹட்கோ, எஸ்ஜேவிஎன் மற்றும் வோல்டாஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

அதானி எண்டர்பிரைசஸ், செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர், வினோத் அதானி குழுமத்தின் மூலம் பெர்முடா மற்றும் மொரிஷியஸில் அதிக அளவில் வர்த்தகம் செய்ததற்காக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் அவர்கள் அதிக லாபத்தை பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படுகின்றது, மேலும், அதே நேரத்தில் புதிய வெளியீடுகள் மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு சந்தையில் விற்பனை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

ஹொனாசா கன்ஸ்யூமர்,இந்த நிறுவனம் 2024ம் ஆண்டு ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63% அதிகரித்து ரூபாய் .40 கோடியாக மாறியுள்ளது.

கிராசிம், இந்த நிறுவனம் 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நடந்து முடிந்த முதல் காலாண்டில் ரூபாய். 52.12 கோடி நஷ்டம் வரை பதிவு செய்துள்ளது.

ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், இந்த ஜூன் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 31.4% நிகர லாப சரிவை சந்தித்துள்ளது.


டாடா மோட்டார்ஸ், நிதியாண்டில் வெளிநாட்டு சந்தைகளில் தேவை குறையும் என்று டாடா 

மெட்ரோபோலிஸ் ஹெல்த், இந்த நிறுவனம், முதல் காலாண்டில் ரூ.37.9 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 

அமர ராஜா பேட்டரி,இத்தாலியின் பியாஜியோ குழுமத்தின் இந்திய துணை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்துள்ளது.

மாஸ்டெக்,ஆகஸ்ட் 9 முதல் அமலுக்கு வரும் வகையில், தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஹிரால் சந்திரனா ராஜினாமா செய்துள்ளார்.

சீமென்ஸ்,ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபத்தில் 26.8% அதிகரித்து 577.7 கோடியாக அதிகரித்துள்ளது.

ஓ.என்.ஜி.சி,ONGC, OPaL இல் 10,501 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய அரசாங்கத்தின் ஒப்புதலை ஏற்றுள்ளது.

ஷிப்பிங் கார்ப்,இந்த நிறுவனம், முதல் காலாண்டில் ரூபாய்.291 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது. மேலும் செயல்பாடுகள் மூலம் வருவாய் ரூபாய்.1514 கோடியாக உள்ளது.