• India
```

1 ஏக்கரில்..6,000 மீன் குஞ்சுகள் வளர்ப்பு..அதிக லாபம் பெறும் விவசாயி..!

Fish Farming Business Plan | Organic Farming Business Plan In Tamil

Fish Farming Business Plan - 23 ஆண்டுகளாக ஆர்கானிக் முறையில் மீன் வளர்த்து, பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார் ஒரு ஏக்கரில் 6,000 மீன் குஞ்சுகளை வளர்த்து, பலதரப்பட்ட வருமானம் பெறலாம் என பகிர்ந்துள்ளார்.

Fish Farming Business Plan -தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவம், தமிழ்நாடு மீன் வளர்ப்போர் சங்கத்தின் மாநில துனை தலைவராக உள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக 16 ஏக்கர் நிலத்தில் 24 குளங்களில் ஆர்கானிக் முறையில் மீன் வளர்த்து பல விவசாயிகளுக்கு இத் தொழிலுக்கான பயிற்சியையும் அளித்து வருகிறார். மீன் வளர்ப்பில் அவருடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

ஒரு ஏக்கருக்கான மீன் வளர்ப்புக்கான குளத்தை வெட்டினால், அதில் தென்னை மற்றும் பிற மரங்களை உட்பயிராக வளர்க்கலாம். இது மட்டுமல்லாமல், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் அந்த இடத்தில் வளர்க்க முடியும். இதனால் அனைத்து துறைகளிலும் வருமானம் கிடைக்கும். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் மீன் வளர்க்கலாம். பொதுவாக, மீன் வளர்க்க நீரின் pH மதிப்பு 7.5 இருக்க வேண்டும். மண் மற்றும் நீர் நிலைத்தன்மையை காக்க குளத்தை பராமரிக்க வேண்டும். 


Organic Farming Business Plan In Tamil -கிழக்கு மேற்கில் சூரிய ஒளி உண்டாகும் வகையில் குளத்தை வெட்ட வேண்டும். மீன் குஞ்சுகள் வெளியே போகாத வரையில் கரைகளை அமைக்கவும். பிறகு மீன் குஞ்சுகளை வைக்கவும். காலை மற்றும் மாலை நேரங்களில் தீவனம் வழங்க வேண்டும். இரண்டு இன்ச் மீன் குஞ்சுகளை வளர்த்தால், அறுவடை செய்ய 10 மாதங்கள் ஆகும். விரைவில் அறுவடை செய்ய வேண்டியிருந்தால், 100 கிராம் குஞ்சுகளை குளத்தில் விட்டு, சில மாதங்களில் அறுவடையை தொடங்கலாம். 

ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் குஞ்சுகளை வளர்க்கலாம். ஒரு டன் மீனைப் பிடிக்க, ஒன்றரை டன் அளவிலான தீவனம் தேவைப்படும். நீர் மற்றும் மண் சுத்தமாக இருந்தால், தீவன செலவு குறையும். நீல அமிர்தம் மற்றும் பஞ்சகாவியா குளத்தில் தெளிக்க வேண்டும். ப்ரொபயாடிக்ஸ் மருந்தைப் பயன்படுத்த வேண்டும்; இது கழிவுகளை நீக்கி, நல்ல தீவனங்களை உண்ண உதவும் மற்றும் ஆக்சிஜன் கிடைக்கவும் வழிவகுக்கும். மீனை மாதம் ஒருமுறை பிடித்து, எடை வைத்து தேவையான தீவனத்தை கொடுக்க வேண்டும். கடந்த மாதத்தை விட குறைவான எடை இருந்தால், 2% உடல் எடை அதிகரிக்கும் தீவனத்தை தர வேண்டும்.

அதே நேரத்தில், அதிக அளவிலான தீவனங்களை குளத்தில் கொட்டினால், மண் மற்றும் நீர் கெடும்; இதனால் மீன் குஞ்சுகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மீன் வளர்ப்பில் 80% உணவு இயற்கையாகவே கிடைக்கும், 20% மட்டும் நாம் அளிக்க வேண்டும்; அதில் 2% உணவு உடல் எடையை அதிகரிக்கும்.