நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் ஷிவன், டிவைன் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள். இதற்குடன், பிரபல இசையமைப்பாளர் அனிருத், தென்னிந்திய ஃபில்டர் காபி ஸ்டார்ட்அப் "வி.எஸ். மணி & கோ"யில் இணைந்து முதலீடு செய்துள்ளார்.
அனிருத் முதலீடு விவரங்கள்,
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தென்னிந்திய ஃபில்டர் காபி ஸ்டார்ட்அப் நிறுவனமான "வி.எஸ். மணி & கோ"யில் இணைந்துள்ளார். அவர் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் பணியாற்றுவார். ஜி.டி. பிரசாத், யஷாஸ் அலூர், ராகுல் பஜாஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அடுத்த ஹால்திராம்ஸ் ஆக மாறவேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் 60% ஆன்லைன் சேனல்கள் (Amazon, Zepto, Blinkit) மூலம் கிடைக்கிறது, மீதமுள்ள 40% ரீடெய்ல் கடைகளில் இருந்து பெறப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட ரீடெய்ல் விற்பனை கடைகளுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் Series A முதலீட்டு சுற்றில் கெட்டில்பரோ VC நிறுவனத்தின் தலைமையில் முதலீட்டை பெற்றுள்ளது. தற்போது, இசையமைப்பாளர் அனிருத் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அவரைத் தவிர, ரானா டகுபாட்டி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி போன்ற பல பிரபலங்களும் முதலீடு செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது தற்போதைய நிலையில் தெரியவில்லை. இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் உள்ள இளம் நுகர்வோர்களை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. பாரம்பரிய ஃபில்டர் காபி தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும் போது, விரைவாக ரெடிமேட் காபி வழங்கி வருகிறது. அண்மையில், "வி.எஸ். மணி & கோ" நிறுவனம் ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியா முழுவதும் பிரபலமானது.