• India
```

மழை..வெள்ளத்தால் வீடு சேதமா..?கவலை வேண்டாம்..!உங்கள் பாதுகாவலராக ஹோம் இன்சூரன்ஸ்..!

What Is Home Insurance In Tamil | What Is Insurance In Tamil

What Is Home Insurance In Tamil -மின்னணு சாதனங்கள்,வீட்டு உபயோக பொருட்கள்,மற்றும் விலைமதிப்புள்ள நகை, கலைப் பொருட்கள் போன்றவற்றிற்கும் ஹோம் இன்சூரன்ஸ் மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது.

What Is Home Insurance In Tamil -இந்தியாவில் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு, மழை நீர் தேங்குதல், மற்றும் நிலச்சரிவு போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் நமது வீடுகளும், அதிலுள்ள பொருட்களும் பல்வேறு சேதங்களை சந்திக்க நேரிடுகிறது.

அவ்வாறு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, ஹோம் இன்சூரன்ஸ் எனப்படும் வீட்டு காப்பீடு திட்டங்கள் மிக முக்கியமான ஒன்றாகும்.குறிப்பாக பருவமழை காலங்களில் இந்த காப்பீடுகள் வீட்டின் கட்டமைப்புகள் மற்றும் பொருட்களுக்கு நிதி பாதுகாப்பு அளித்து வருகின்றது.


வீட்டில் வெள்ளம், புயல், அல்லது நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களுக்கு Insurance நிவாரண தொகையை உங்களுக்கு வழங்குகிறது. வீட்டு கட்டமைப்பு சேதமடையும் போது அல்லது வீட்டின் பொருட்கள் கெடும்போது, அவற்றை சீரமைக்க அல்லது மாற்ற நிதி உதவியை இந்த பாலிசிகள் வழங்கி வருகின்றன. 

வீட்டின் சுவர்கள், மேற்கூரை, அடித்தளம் போன்ற பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள், நகை, கலைப் பொருட்கள் போன்றவை சேதமடையும்போது அவற்றிற்கு நிதி ரீதியான பாதுகாப்பை இந்த காப்பீடு வழங்குகிறது.


மழை, மின்னல் தாக்கம், தீ விபத்து, மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவற்றிற்கு இInsurance சேவைகள் நிவாரணம் வழங்குகின்றன. சில நேரங்களில், வெள்ளத்தால் நீண்ட காலம் வீட்டில் திரும்பி வாழ முடியாத நிலையில், தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கும்போது ஏற்படும் வாடகை செலவுகளையும் இந்த காப்பீடு ஈடு செய்கிறது.

வெள்ளப்பெருக்கு அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கை விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் அல்லது வீட்டைக் கட்டியவர்கள் ஹோம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நிவாரணமாகவும், நிதி பாதுகாப்பாகவும் அமையும்.