Vasanth And Co History In Tamil - 70 ரூபாய் சம்பளத்தில் இருந்து, 2000 கோடிக்கு அதிபதி எப்படி உருவானது வசந்த் & கோ, பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
Vasanth And Co History In Tamil - 1950 கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் வசந்தகுமார், பெரிய வசதியான குடும்பம் எல்லாம் இல்லை, ஒரு மிடில் கிளாஸ் தான், அங்கு இருக்கும் அரசுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, மதுரையில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெறுகிறார். இது தான் இவரது துவக்க கால வாழ்வியல், அதற்கு பின் நடந்தது தான் அற்புதம்.
1971 அதாவது படிப்பை முடித்த கையோடு அண்ணன் குமரி அனந்தனுக்கு அரசியல் ரீதியாக சிறு சிறு உதவிகள் புரியும் வகையில் சென்னை வந்து இறங்குகிறார் வசந்தகுமார். அது தான் அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றே சொல்லலாம், அண்ணனுக்கு உதவி புரிந்து கொண்டே சென்னையில் இருக்கும் ஒரு பிரபல விற்பனை நிறுவனத்தில் சேல்ஸ்மேனாகவும் சேருகிறார்.
அவருக்கு அப்போது சம்பளம் மாதம் 70 ரூபாய், சைக்கிளில் சென்று அங்கிருக்கும் பகுதிகளை எல்லாம் சுற்றி நிறுவனங்களில் பேன், மிக்ஸி எடுத்தவர்களிடம் மாதத்தவணை பிரித்து வர வேண்டும், அது தான் அவருடைய வேலை, அவரது அயராத உழைப்பால் அந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஆகும் நிலை அளவிற்கு உயர்ந்தார், ஒரு கட்டத்திற்கு பின்னர் நிறுவனம் அவரை வேறு மாநிலத்தில் ஒரு கிளைக்கு மாற்றியது.
அதை விரும்பாத வசந்தகுமார் நிறுவனத்தை விட்டு வெளியேறினார், நிறுவனத்தின் மூலம் பலரது நட்பும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் கிடைக்கவே அதை மூலதனமாக வைத்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை துவங்க முற்பட்டார், நண்பர் ஒருவரின் மூலம் சென்னை தி.நகரில் ஒரு கடை கிடைக்கிறது, ஆனால் முதலீடு ஏதும் இல்லை, நண்பர் ஒருவர் கொடுத்த 23 ரூபாய்க்கு மடிப்பு சேர் ஒன்றை வாங்கி அதை அதே நாளில் விற்றார், அதுதான் வசந்த & கோவின் முதல் விற்பனை.
அந்த புள்ளியில் ஆரம்பித்தது தான் வசந்த் & கோ, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சரக்குகளை கடையில் பெருக்கி, வாடிக்கையாளர்களை நன்முகத்துடன் அணுகி, மாதத்தவணை, இலவச சர்வீஸ்கள் என பல அசத்தலான ஆபர்கள் மூலம் விற்பனையை பெருக்கினார் வசந்தகுமார், அடுத்த கையோடு பாண்டி, கேரளா, ஆந்திராவில் கிளைகள் என நிறுவனத்தையும் விரிவு படுத்தினார்.
" இன்று கிட்ட தட்ட தேசம் முழுக்க 87 கிளைகள், வருடத்திற்கு வருமானம் மட்டும் இரண்டாயிரம் கோடிக்கும் மேல், 70 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து, இன்று 2000 கோடி வருமானம் தரும் நிறுவனத்தை உருவாக்கிய மொத்த பெருமையும் அதன் நிறுவனர் வசந்தகுமார் அவர்களை மட்டுமே சாரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை "