• India
```

தொழில் துவங்க...25 சதவிகித மானியத்துடன்...15 இலட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம்!

UYEGP Scheme Details In Tamil

By Ramesh

Published on:  2024-10-09 11:07:33  |    298

UYEGP Scheme Details In Tamil - வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தொழில் துவங்குவதற்கு 25 சதவிகித மானியத்துடன் 15 இலட்சம் கடனுதவி வழங்கும் திட்டம் ஒன்று தற்போது செயலில் இருக்கிறது, அந்த திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

UYEGP Scheme Details In Tamil - படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme - UYEGP), படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை, தொழில் துவங்க ஊக்கப்படுத்தும் வகையில், 25 சதவிகித மானியத்துடன் (அதிகபட்சமாக 2.50 இலட்சம்) ரூபாய் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை கடனுதவி வழங்கும் ஒரு திட்டம் அரசால் அறிமுகப்படுத்து தற்போது செயலிலும் இருக்கிறது.


சரி, இத்திட்டத்தின் தகுதிகள் என்ன?

1) தொழிலுக்கான முறையான திட்ட வடிவம் இருக்க வேண்டும்.

2) பொதுப்பிரிவினருக்கு வயது 18 முதல் 35 வரையிலும், ஏனையோருக்கு வயது தளர்வு 10 ஆண்டுகளுடன் 45 வயது வரை இருக்கலாம்.

3) அவர் எந்த பகுதியில் இருந்து விண்ணப்பிகிறாரோ அந்த பகுதியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தங்கி இருந்து இருக்க வேண்டும்.

4) வருட வருமானம் 5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5) சேவை மற்றும் வியாபாரம் சம்மந்தப்பட்ட தொழில்களுக்கு 5 இலட்சம் வரையில் மட்டுமே கடன் வழங்கப்படும்.

6) உற்பத்தி சம்மந்தப்பட்ட தொழிகளுக்கு 15 இலட்சம் வரை கடன் வழங்கப்படும்.


சரி, இத்திட்டத்தில் எப்படி இணைவது?

 1) முதலில் உங்கள் ஊரில் இருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை அணுக வேண்டும்.

2) ஆதார் கார்டு, வருமானச்சான்று, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து செல்வது அவசியம்.

3) தொழில் குறித்த திட்ட வடிவமும் அவசியமாக எடுத்து செல்ல வேண்டும்.

4) ஆவணங்களும், உங்களது திட்ட வடிவமும் சரியாக இருக்கும் பட்சத்தின் உங்களது வேண்டுகோளை வங்கிகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.

5) வங்கிகள் நீங்கள் தொழில் செய்ய தேர்ந்து எடுத்து இருக்கும் இடத்தை நேரடியாக வந்து ஆய்வு செய்யும்.

6) உங்கள் தொழிலுக்கான மதிப்பீடு சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கோரிய முழு கடனும் 25 சதவிகித மானியத்துடன் அப்படியே கிடைக்கும்.

 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் ஐடியாக்களை தொழிலாக மாற்றுவதற்கு இந்த கடன் தொகை உதவ வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்