Top Business Ideas For Housewives - பெண்கள் வீட்டில் இருந்தே பார்க்க முடிகின்ற, அதே வேலையில் நல்ல இலாபமும் தரக்கூடிய மூன்று சிறந்த தொழில்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1) டெய்லரிங்
மற்றும்
ஆரி
வொர்க்
பொதுவாக
பல பெண்களும் வீட்டில் இருந்தே பண்ணக்கூடிய அதிகப்படியான தொழிலில், டெய்லரிங் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது, தமிழக அரசும் பெண்களுக்கு உதவும் வகையில் டெய்லரிங் படிப்பை இலவசமாக கற்றுக் கொடுத்து அவர்களுக்கு சர்ட்டிபிகேசனும் கொடுக்கிறது, டெய்லரிங் தெரிந்தவர்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிவதைக் காட்டிலும் வீட்டில் இருந்தே அந்த டெய்லரிங் தொழிலை செய்வது தான் சிறந்த இலாபம் தரும்.
பொதுவாக, ஒரு பெண்களின் சட்டை தைப்பதற்கு எல்லாம் கிராமங்களிலேயே 300 ரூபாய் வரை வாங்குகிறார்கள், விஷேச கால சட்டைகளின் ஆரி வொர்க்கிறகு எல்லாம் குறைந்த பட்சம் 2000 ரூபாய் முதல் 10,000 வரை வாங்கும் ஆட்களும் இருக்க தான் செய்கிறார்கள், டெய்லரிங் தொழிலை பொறுத்தவரை பெண்களை உங்களின் தையலின் மூலம் திருப்தி படுத்த முடிந்தால் போதும், அப்புறம் என்ன மாதத்திற்கு வீட்டில் இருந்தபடியே 25,000 ரூபாய் முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்.
2) மாவு
அரைத்து
விற்பனை
ஓடிக்
கொண்டே இருக்கும் காலத்தில், யாருக்கும் உளுந்தை தனியாக ஆட்டி, அரிசியை தனியாக ஆட்டி, அதை கல் உப்பு போட்டு பிசைந்து, புளிக்கும் வரை காத்திருக்க வேண்டும், பின்னர் தோசையோ, இட்லியோ அந்த மாவில் போட்டு சாப்பிட வேண்டும் எல்லாம் ஆசையில்லை, தற்போதெல்லாம் வீடுகளில்
கிரைண்டர் ஓடுவதையே பார்க்க முடிவதில்லை, மாவு வீடுகளிலேயே ஆட்டுவதை காட்டிலும், வெளியில் ஒரு கப் மாவு வாங்கி கொள்ளலாம் என்ற நிலையில் தான் அனைவருமே இருக்கிறார்கள்.
அந்த வகையில் வீட்டில் இருந்தே தொழில் செய்ய நினைக்கும் பெண்களுக்கு, மாவு விற்பனை தொழில் சிறந்த தொழிலாக இருக்கும், என்ன கொஞ்சம் வேலைப்பாடு மட்டும் அதிகம், ஒரு 25,000 முதலீடு செய்து கோயம்புத்தூருக்கு சென்று, மாவு அரைக்கும் மெசினை மட்டும் கொள்முதல் செய்து விட்டால் மாவு அரைப்பதும் உங்களுக்கு எளிதாகி விடும். வீட்டிலும் விற்று, பேக்கிங் செய்து கடைகளுக்கும் கொடுக்கும் பட்சத்தில் மாதம் 20,000 முதல் 30,000 வரையிலும் இத்தொழிலில் சம்பாதிக்க முடியும்.
3) டிஜிட்டல்
கன்டன்ட்
ஆண்களுக்கு
நிகராக பெண்களும் போட்டி போடும் ஒரு உலகம் என்றால் அது டிஜிட்டல் கன்டன்ட் உலகம் தான், ஆனாலும் இன்னமுமே பெண்கள் டிஜிட்டல் உலகிற்குள் செல்ல வேண்டாம் என்ற வற்புறுத்தல் என்பது பல குடும்பங்களில் இருக்க
தான் செய்கிறது, அவ்வாறாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் வருமானம் தருகின்ற டிஜிட்டல் கன்டன்ட்களும் இருக்க தான் செய்கிறது. இணையதளங்களில் முதலீடு செய்து அதில் சமையல் குறித்து ஏதாவது எழுதலாம்.
பொதுவாக அனைவரின் வீட்டிலுமே குறைந்த பட்சம் 2 வேளை சமையல் என்பது நடக்க தான் செய்கிறது. இன்று யூடியூப்பில் அதிகமாக தேடப்படும் டாபிக்குகளில் சமையலும் முதன்மையானதாக தான் இருக்கிறது, அந்த வகையில் நீங்கள் செய்யும் சமையலை முகம் காட்டாமல் அப்படியே எடுத்துப் போட்டால் கூட பார்ப்பதற்கு ஆட்கள் இருக்க தான் செய்கிறார்கள், கொஞ்சம் வாய்ஸ் ஓவரும் சேர்த்துக் கொண்டால் வீடியோக்கள் நன்றாக ரீச் ஆகும். அப்டேட்டாக வைரலிலேயெ இருக்கும் பட்சத்தில் மாதம் 35,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.