TATA Group Revenue Per Second - 1868 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த டாடா குழுமம், மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய அளவிலான ஒரு தானியங்கு நிறுவனமாக அறியப்பட்டு வருகிறது, இந்த நிறுவனத்தின் 66% சதவிகித பங்குகள் டாடா நிறுவனத்தின் அறக்கட்டளைகளை கொண்டு இருக்கின்றன.
அதாவது டாடா குழுமம் அதன் இலாபத்தில் கணிசமான பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்கிறது, உலகளாவிய அளவில் 100 நாடுகளுக்கு மேல் தங்கள் செயல்பாடுகளை கொண்டு இருக்கிறது, கிட்டத்தட்ட 10 இலட்சத்திற்கும் மேலான ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் கீழ் கிட்டத்தட்ட 35 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்.
டாடா கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லலாம், ஏர்லைன்ஸ், ஏரோஸ்பேஸ், கன்சல்டன்ஸி, டாடா பவர்ஸ், பைனான்ஸ், மருத்துவம், காப்பீடு, ஹோட்டல்ஸ், ஐடி, ஈ காமர்ஸ், ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்பு, ஹோட்டல்ஸ் என கண்ணில் படும் அத்துனை தொழில்களிலும் களம் கண்டு இருக்கிறது டாடா, முக்கியமாக அனைத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
சரி நமக்குள் ஒரு கேள்வி எழும், இத்துனை நிறுவனங்கள் வைத்து இருக்கிறார்களே ஒரு வினாடிக்கு இவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று, டாடா குழுமம் ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட ரூ 4,45,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறது, ஒரு நிமிடத்திற்கு 2.67 கோடியும், ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட தோராயமாக 160 கோடியும் சம்பாதிப்பதாக தகவல்.
" சரி ஏன் டாடா குழுமம் பில்லியனர்கள் வரிசையில் இல்லை என்றால், அவர்கள் இலாபங்களை நோக்கமாக கொள்ளாமல், தரங்களையும், சேவைகளையும், அறக்கட்டளைகளையும் குழுமத்தின் இதயமாக கொண்டு இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது "