• India

பிரபல கூகுள் CEO...சுந்தர் பிச்சை அவர்களின்...ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா...?

Sundar Pichai One Second Salary

By Ramesh

Published on:  2024-12-18 16:34:07  |    161

Sundar Pichai 1 Second Salary - மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில் தனது முதல் இளங்கலை பட்டத்தை முடித்தார், பின்னர் அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு யுனிவட்சிட்டியில் மெட்டீரியல் இஞ்சினியரிங், வார்டன் ஸ்கூல் ஆப் யுனிவர்சிட்டியில் MBA வும் முடித்தார்.

சுந்தர் பிச்சை முதலில் மெக்கன்ஸி என்னும் நிறுவனத்தில் தான் பணி புரிந்தார், புன்னர் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார், அவரது அசாத்திய திறமைகளை கண்டு கூகுள் வியந்தது, அவரது கண்டு பிடிப்புகளும் திறமையும் கூகுளை வியக்க வைத்தது, கூகுளின் பல பிரிவுகளின் பணி புரிந்து தனது அசாத்திய திறமைகளால் 2015 ஆம் ஆண்டு கூகுள் CEO ஆக உயர்ந்தார்.



தற்போது கூகுளின் தாய் நிறுவனமாக அறியப்படும் அல்பபெட் நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO வாக சுந்தர் பிச்சை அறியப்படுகிறார், அவரது வருடாந்திர சம்பளம் மட்டும் இந்திய மதிப்பில் தோராயமாக 1,869 கோடியாக இருக்கும் என அறியப்படுகிறது, அவருடைய நிகர சொத்து மதிப்பு என்பது 8,342 கோடியாக இருப்பதாக தகவல்.

ஒரு நாள் ஒன்றுக்கு தோராயமாக அவர் 5 கோடி சம்பாதிக்கிறார், ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 20 இலட்சங்கள் சம்பாதிக்கிறார், ஒரு நொடிக்கு தோராயமாக 33,000 ரூபாய் சம்பாதிக்கிறார், ஒரு வினாடிக்கு என்று பார்க்கும் போது கிட்டத்தட்ட 600 ரூபாய் வீதம் சம்பாதிக்கிறார், இது இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் வாங்கும் தினசரி சம்பளத்தை விட அதிகமாக பார்க்கப்படுகிறது.

" இது வெறும் சம்பளத்தை மட்டுமே வைத்து கணக்கிடப்பட்ட கணக்கீடு, இது போக அவரின் முதலீடுகள், இன்வெஸ்ட்மெண்ட்கள் என எல்லாம் எவ்வளவு வருமோ அது ஒரு தனி கணக்காக தான் இருக்கும் "