Reliance Launching 10 RS Sport Drink - ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ட்ரிங்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன, இந்த பெப்சி மற்றும் கோக் உள்நுழைந்து 7 ரூபாய்க்கு 7up, 7 ரூபாய்க்கு Sprite என விளம்பரப்படுத்தி தேசத்தின் குளிர்பான குடிசைத் தொழில்களை முற்றிலுமாக ஓய்த்துக் கட்டின.
பெரும்பாலான கோலி சோடா கம்பெனிகளும், குளிர்பானங்களை குடிசைத் தொழிலாக செய்து வந்த பல நிறுவனங்களும் இதனால் இழுத்து மூடப்பட்டன, தேசம் முழுக்க குளிர்பான மார்க்கெட்டில் பெப்சி மற்றும் கோக் ஆதிக்கம் செலுத்தின, அதற்கு பின்னர் இந்த பெப்சி, கோக்கிற்கு மாற்றாக இந்திய நிறுவனங்களும், ஒரு சில தனிநபர்களும் களம் இறங்கின.
பெப்சி கோக்கள் 500 மிலி 40 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த போது, 10 ரூபாய்க்கு குளிர்பானங்களை இந்தியர்கள் களம் இறக்கினர், அதும் 7up, கோக், கொய்யா, மேங்கோ, பன்னீர், லெமன் என பல சுவைகளில் களம் இறக்கியதால் Pepsi, Coke நிறுவனங்கள் ஆட்டம் கண்டன, இந்திய நிறுவனங்களை காபி அடித்து பெப்சி குட்டி பாட்டில்களை போட்ட போதும் அது மார்க்கெட்டில் சரியாக போகவில்லை.
தற்போது பெப்சி, கோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியர்களின் பெட் பாட்டில்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, இந்த மார்க்கெட்டை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி ஸ்பின்னர் என்ற பெயரில் 10 ரூபாய் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்சை அறிமுகப்படுத்த இருக்கிறார், ஏற்கனவே ரிலையன்ஸ்சின் கேம்பா குளிர்பானம் பெப்சி கோக்களை பல இடங்களில் புறந்தள்ளி இருக்கிறது.
" 10 ரூபாய் ஸ்பின்னர் மார்க்கெட்டிற்கு வரும் பட்சத்தில் பல அந்நிய ஸ்போர்ட்ஸ் குளிர்பான கார்பரேட் நிறுவனங்கள் தகர்க்கப்படலாம், இதற்காக முதற்கட்டமாக ஸ்பின்னர் மார்க்கெட்டிங்கை முகெஷ் அம்பானி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐபிஎல் மூலம் விளம்பரப்படுத்தப்பட இருப்பதாக தகவல் "