• India
```

தொழில் முன்னோடியாக அறியப்படும்...மறைந்த ரத்தன் டாடாவின் வரலாறு...!

Ratan Tata History Tamil

By Ramesh

Published on:  2024-10-10 07:15:07  |    367

Ratan Tata History Tamil - தொழில் துறையில் டாடா நிறுவனத்தை அசைக்க முடியாத தூண் ஆக உருவாக்கி சென்ற ரத்தன் டாடாவின் யாரும் அறியாத வரலாறு மற்றும் யாரும் அறியாத மறுபக்கம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யார் இந்த ரத்தன் டாடா?

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி அவரது மகன் ரத்தன்ஜி டாடாவால் தத்து எடுக்கப்பட்டவர் தான், நேவல் டாடா, இந்த நேவல் டாடாவின் மூத்த மகன் தான் ரத்தன் டாடா, ரத்தன் டாடாவிற்கு 7 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர், அதற்கு பின்னர் வளர்ந்தது எல்லாம் பாட்டி வீட்டில் தான். சிறு வயதிலேயே படிப்பில் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கி இருக்கிறார் ரத்தன் டாடா.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் கோர்னெல் பழ்கலைகழகத்தில் கட்டமைப்பு பொறியியலை முடித்து விட்டு, ஹார்வர்டு பல்கலை கழகத்தில் மேல் நிலை வணிகப் படிப்பையும் முடித்தார். படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே இவருக்கு பல ஆபர்கள் வந்தது, ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், என்ன செய்தாலும் இந்தியாவில் தான் செய்வேன் என்ற நோக்கத்தோடு இந்தியா வந்து இறங்கினார்.


டாடாவின் அடிமட்டத்தில் இறங்கி வேலை செய்தார், டாடா குழுமத்தின் அத்துனை கம்பெனிகளுக்கும் சென்று அனைத்தையும் அடிமட்ட தொழிலாளர்களிடம் இருந்து கற்றுக் கொண்டார், ரத்தன் ஜி அவர்களின் மறைவிற்கு பிறகு, டாடா குழுமத்தின் மேலாண்மை அனைத்தும் ரத்தன் டாடாவின் கைகளுக்கு வந்தது, தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்ட ரத்தன் டாடா தான் கால் பதித்த அத்துனை துறைகளிலும் வெற்றியை நிலை நாட்டினார். டாடா நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக உருவெடுக்க வழி வகுத்தார்.

 தேநீர் தொழிலில் உலகளாவிய அளவில் இரண்டாம் இடம் டாடா டீ, ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்ஸி, உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனம் டாடா ஸ்டீல்ஸ், உலகிலேயே மிகப்பெரிய ஐந்தாவது மிகப்பெரிய டிரக் தயாரிப்பாளர் டாடா மோட்டார்ஸ், உலகம் முழுக்க தரமான உணவை வழங்க நிறுவப்பட்டு இருக்கும் ஹோட்டல், டாடா ஹோட்டல்ஸ் என இத்துனை டாடா நிறுவனத்தின் பிரம்மிப்பான வளர்ச்சிக்கும், ரத்தன் டாடா என்ற ஒருவர் தான் முழுக்க முழுக்க காரணம்.


ரத்தன் டாடாவின் மறுபக்கம்!

 இங்கு பணக்காரர்களாக இருக்கும் நவீன தொழிலதிபர்களுக்கு எல்லாம் எப்படியாவது உலகின் நம்பன் 1 பணக்காரன் ஆகி விட வேண்டும், எப்படியாவது இலாபத்தை பார்த்திட வேண்டும், எப்படியாவது கோடிகளில் புரண்டிட வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும், ஆனால் ரத்தன் டாடா அப்படி இல்லை தன்னுடைய வருமானத்தில் 65 சதவிகிதம் சேவை பணிக்காகவே செலவிடுவாறாம். கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பலருக்கும் தனது அறக்கட்டளைகள் மூலம் வாழ்வியலை கொடுத்து இருக்கிறார்.

அவருக்கு வாயில்லா ஜீவன்களின் மீதும் அளாவதிய விருப்பம், ‘காரை எடுக்கும் போது அதன் அடியில் ஏதும் உயிரினங்கள் ஏதும் இருக்கிறதா என்பதை ஒரு முறை பார்த்துக் கொண்டு எடுங்கள், அதுவும் நம்மை போல ஒரு உயிர் தான்இது ரத்தன் டாடா, அவருடைய சமூக வலை தளத்தில் சில வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட பதிவு, இதில் இருந்தே தெரிந்து இருக்கும் அவர் வாயில்லா ஜீவன்களின் மீது கொண்டு இருக்கும் இரக்கம் என்பது, இது மட்டும் அல்லாது ஒரு முறை அவரது அலுவலகத்திற்குள் ஒரு நாய் புகுந்து இருக்கிறது


ஊழியர்கள் அனைவரும் நாயை விரட்டு விரட்டு என்று விரட்டுகிறார்கள், எலும்பும் தோலுமாய் இருக்கும் அந்த நாய் ஓடுவதற்கு கூட தெம்பு இல்லாமல், கத்திக் கொண்டே பயந்து கொண்டே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்திருக்கிறது. அப்போது அந்த நிறுவனத்தில் ஒரு கைகள் மட்டும் அந்த நாயை அணைத்து தடவி கொடுத்து இருந்திருக்கிறது, அது வேறு யாரும் இல்லை அது தான் ரத்தன் டாடா, பின்னாளில் அந்த நாய் ரத்தன் டாடாவின் சொகுசு கார்களில் அவருடனே பயணித்து அவரின் வீட்டில் ஒருவராய் மாறியது எல்லாம் குறிப்பிடத்தக்கது.

'' ரத்தன் டாடா இங்கு அனைவராலும் நேசிக்கப்படுதலுக்கு காரணம் அவர் சிறந்த தொழிலதிபர் என்பது மட்டும் அல்ல, அவர் நாட்டின் சிறந்த குடிமகன், சிறந்த மனிதன் அவ்வளவு தான் ''