• India
```

குழந்தைகளின் பாதுகாப்பும் நல்வாழ்வும்..மோடி அரசின் என்ன திட்டம் அது?

PM Care Fund Account Details | PM Care Fund News

By admin

Published on:  2024-08-10 17:29:04  |    737

PM Care Fund Account Details -தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், குழந்தைத் தொழிலாளர்களை தடுக்க இலவசக் கல்வி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

PM Care Fund Account Details -குழந்தைகளுக்கான பாதுகாப்பும் நல்வாழ்வும் மோடி அரசின் பிஎம் கேர்ஸ் திட்டம், என்பது  2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த அல்லது சட்டப்பூர்வமாக பாதுகாவலருக்குக் குறைவாக உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுகிறது.

மேலும்,  2021 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.

பிஎம் கேர்ஸ் திட்டத்தின் நோக்கங்கள்:

எனவே, குழந்தைகளின் விரிவான கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சுகாதார காப்பீட்டு மூலம் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதும் நிலைத்த பாதுகாப்பு ஆகும் .

மேலும், 23 வயது வரை நிதியுதவியுடன் கல்வி வாய்ப்புகள் வழங்கி, தன்னிறைவு வாழ்க்கைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். 

கொரோனா தொற்றுநோயின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய, துணை ஊட்டச்சத்து, தங்குமிடம், உணவு மற்றும் உடை இவை அனைத்தும் துணை நிவாரணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.மேலும், ஆலோசனை, சட்ட உதவி, தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவை ஆலோசனை மற்றும் மருத்துவ உதவியின் கீழ் வழங்கப்படுகிறது.


கோவிட் காலத்தில், 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களால் வீட்டிற்கு ரேஷன் வழங்கப்பட்டது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பள்ளிக்கூடத்திற்கு செல்லாத வளர்பிறை பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அவர்கள் வீடுகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

சிறார் நீதி,பாக்சோ, மற்றும் RTE சட்டங்களின் அமலாக்கம்,சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் - 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டம் - 2012, மற்றும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (RTE) சட்டம் - 2009 ஆகியவற்றின் அமலாக்கத்தை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், குழந்தைத் தொழிலாளர்களை தடுக்க இலவசக் கல்வி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், குழந்தைத் தொழிலாளர்களை தடுக்க இலவசக் கல்வி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.